விடியல் தரும் 'விடிஎல்'

விடியல் தரும் 'விடிஎல்'

2 mins read

இந்­தி­யா­வி­லி­ருந்து சிங்­கப்­பூர் வரு­வோ­ருக்­குப் பலன் அளிக்­கும் திட்­ட­மா­னது தடுப்­பூ­சி போட்­டோ­ருக்­கான பய­ணத்தடத் திட்­டம் (விடி­எல்). இந்­தத் திட்­டத்­தின்­கீழ் குறிப்­பிட்ட விமா­னச் சேவை

­க­ளின் மூலம் சிங்­கப்­பூர் வரு­வோர், இல்­லத் தனிமை உத்­த­ரவை நிறை­வேற்ற வேண்­டிய தேவை, வரும் 29ஆம் தேதி முதல் இராது. இத்திட்­டத்­தின்­கீழ் இந்தியாவிலிருந்து சிங்கப்பூர் வருவோர் சில நிபந்­த­னை­க­ளைக் கருத்­தில் கொள்­ள­வேண்­டும்.

முத­லில், அவர்­கள் உல­க சுகா­தார நிறு­வ­னத்­தால் அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட தடுப்­பூ­சி­களை முழு­மை­யா­கப் போட்டு இரண்டு வாரங்­கள் பூர்த்­தி­யா­கி­யி­ருக்க வேண்­டும். தடுப்பூசிச் சான்றிதழை வைத்தி ருக்க வேண்டும். அதோடு சிங்­கப்­பூ­ரர்­கள், நிரந்­த­ர­வா­சி­கள் அல்­லா­தோர், 'விடி­எல்' திட்­டத்­தில் பய­ணம் செய்ய விண்­ணப்பிக்க வேண்­டும். இந்­தி­யா­வி­லி­ருந்து வரு­வோ­ருக்­கான 'விடி­எல்' அனு­மதி விண்­ணப்­பங்­கள் நாளை தொடங்­கும் என அறி­விக்­கப்பட்­டி­ருந்­தது.

பய­ணம் தொடங்கும் நேரத்திற்கு 48 மணி நேரம் முன்னதாக 'பிசி­ஆர்' கொவிட்-19 பரி­சோ­த­னையை அங்கீக­ரிக்­கப்­பட்ட நிலை­யங்­களில் செய்துகொள்­ள­வேண்­டும். சிங்­கப்­பூர் வந்­தி­றங்­கி­ய­வு­டன் மீண்­டும் ஒரு பரி­சோ­தனை மேற்­கொள்­ளப்­படும். அதன் முடி­வு­கள் வரும்­வரை பய­ணி­கள் தங்­கள் இல்­லங்­க­ளிலோ விடு­தி­க­ளிலோ தனி­மை­யில் இருக்­க­வேண்­டும்.

'தொற்று இல்லை' என முடி­வு­கள் வந்­த­வு­டன் இயல்பு வாழ்க்­கையை அவர்­கள் தொட­ர­லாம். எந்­தெந்த விமான நிறு­வ­னங்­கள் இந்­தி­யா­வி­லி­ருந்து 'விடி­எல்' திட்ட விமா­னச் சேவை­களை வழங்­கும் என்­பது இன்­னும் அறி­விக்­கப்­ப­ட­வில்லை.

இரு­நாட்டு விமானப் பயண ஏற்­பா­டு­கள் முடிவு செய்­யப்­பட்ட தும் மேல் விவ­ரங்­கள் கிடைத்­த­பின் சிங்­கப்­பூர் ஏர்­லைன்ஸ் (எஸ்ஐஏ) குழு­மம் தக­வல் தெரி­விக்­கும் என அந்­நி­று­வ­னப் பேச்­சா­ளர் தமிழ் முரசிடம் தெரி வித்தார். ஆணை­யங்­க­ளின் அனு

­ம­திக்குட்­பட்டு, பய­ணத் தேவை­

க­ளைத் தொடர்ந்து கூர்ந்து கண்­கா­ணித்து சேவை­க­ளின் எண்­ணிக்­கையை அதற்­கேற்ப சரி­செய்­வோம் என்­றது எஸ்ஐஏ.

'விடி­எல்' திட்­டத்­தின்­கீழ் உல­கின் பல நக­ரங்­க­ளுக்கு சிங்­கப்­பூர் ஏர்­லைன்ஸ் அதிக எண்­ணிக்­கை­யில் பய­ணச் சேவைகளை வழங்­கி­வ­ரு­கிறது.