புற்றுநோய் விழிப்புணர்வு பரப்பும் ஆணழகர்

ப. பால­சுப்­பி­ர­ம­ணி­யம்

ஒரு­வ­ரின் தோற்­றத்­தைப் பார்த்­து­விட்டு அவரை எடை­போ­டக்­கூ­டாது என்­பது முன்னாள் பள்­ளி­ உடற்யிற்சி ஆசி­ரி­ய­ரான திரு அருண் ரொசி­யா­வுக்­குப் பொருந்­தும்.

இவ்­வாண்­டின் சிங்­கப்­பூர் 'மேன்­ஹண்ட்' கட்­ட­ழ­கர் போட்­டி­யில் பங்­கு­பெ­றும் ஆக மூத்த போட்­டி­யா­ளர், 57 வயது திரு அருண் ஆவார்.

இவ­ரின் கட்­டு­டல் இளம் ஆண்­க­ளை­யும் ஆச்­ச­ரி­யப் படுத்­தும். ஆனால் இவர் எதிர்­கொண்ட சவால்­கள் எளி­தில் வெளி­யில் தெரி­யா­தவை.

உடற்­ப­யிற்சி செய்­வதை வாழ்க்­கை­மு­றை­யா­கக் கொண்­டுள்ள திரு அருண், சில ஆண்­டு­க­ளுக்கு முன் புற்­று­நோயை எதிர்­கொண்டு மீண்­ட­வர்.

கடந்த 2015ஆம் ஆண்­டில் அவ­ருக்கு மூன்­றாம் கட்ட பெருங்­கு­டல் புற்­று­நோய் இருப்­பது மருத்­துவ சோத­னை­யில் தெரி­ய­வந்­தது.

இதை அடுத்து, 28 முறை கதி­ரி­யக்க, ரசா­யன சிகிச்­சை­க­ளுக்கு திரு அருண் சென்­றார். உட­லி­லும் மனத்­தி­லும் பெரும் வேதனை ஏற்­பட்ட கால­கட்­டம் அது என்று அவர் நினை­வு­கூர்ந்­தார்.

ஒன்­பது மாதங்­க­ளுக்கு மலப்­பை­யைப் பயன்­ப­டுத்­தி­னார் திரு அருண்.

வலி வரும்­போ­தெல்­லாம் துன்­பத்­தை­யும் எதிர்­மறை எண்­ணங்­க­ளை­யும் திசை திருப்ப 'பு‌‌ஷ்-அப்' உடற்பயிற்சி ­கள் இவ­ருக்கு உத­வின.

சென்ற 2016இல் 14 நாட்­களில் 11,000 'புஷ்-அப்' செய்­யும் சவா­லில் கலந்து கொண்ட திரு அருண் மூன்­றாம் இடத்­தைப் பிடித்­தார்.

அதே ஆண்­டில் அவ­ரது புற்­றுக்­கட்­டி­யும் 20 செ.மீ. நீள­முள்ள பெருங்­கு­ட­லின் ஒரு பகு­தி­யும் அறுவை சிகிச்சை வழி அகற்­றப்­பட்­டது.

இதற்கு மேலாக அருண் தம் மலக்­கு­ட­லை­யும் (rectum) அகற்ற வேண்­டி­யதா­யிற்று.

அடிக்­கடி கழி­வ­றை­யைப் பயன்­ப­டுத்த வேண்­டிய கட்­டா­யத்­தைத் தவிர்க்க அவர் உணவுமுறை­யில் பெரிய மாற்­றங்­களைச் செய்­ய­வேண்­டி­ யிருந்­தது.

கார­மான உணவு, பால் பொருட்­கள், பச்­சைப் பூக்­கோசு (ப்ரோக்­கோலி), பூக்­கோசு (காலி­ஃபி­ள­வர்) போன்ற காய்­க­றி­களைச் சாப்­பி­டு­வ­தைத் தவிர்த்து, வெள்ளை மீன் வகை, கோழி­யின் நெஞ்­சுப்­ப­குதி, 'சூப்' வகை­களை இவர் உட்­கொள்­ளப் பழ­கிக்­கொண்­டார்.

கடந்த 2016ஆம் ஆண்டு முதல் இவ­ரது உட­லில் புற்­று­நோய் தென்­ப­ட­வில்லை.

எதிர்­ம­றை­யான மனப்­பான்­மை­யைக் கொண்­டி­ருந்­தால் புற்­று­நோ­யி­லி­ருந்து மீண்டு வரு­வது பெரும் சவா­லாக இருந்­தி­ருக்­கும் என்று திரு அருண் விளக்­கி­னார்.

தாம் உடல்­ந­லம் தேறி வந்­த­தற்­கான முக்­கிய கார­ணம், தமது 52 வயது மனைவி திரு­மதி அருண் ரொசியா என்று அவர் குறிப்­பிட்­டார்.

திரு அரு­ணின் மனைவி, ஆசி­ரி­யர் வேலை­யி­லி­ருந்து தற்­கா­லி­க­மாக அரை­யாண்டு காலம் விடுப்பு எடுத்து அவ­ரைப் பார்த்­துக்­கொண்­டார்.

மூன்று பிள்ளைகளை­யும் குடும்­பத் தேவைகளை­யும் அவர் பூர்த்­தி­செய்­தார். திரு அரு­ணுக்கு ஏற்ற உணவுவகை ­க­ளைச் சமைத்­துத் தந்தார்.

நன்கு குண­ம­டைந்து வந்­துள்­ள­போ­தும் திரு அரு­ணுக்­குச் சவால்­கள் தொடர்­கின்­றன. சில நாட்­கள் மலச்­சிக்­கல், சில நாட்­கள் வயிற்­றுப்­போக்கு அல்­லது புளி­யேப்­பம். எந்­நே­ரம் அவர் கழி­வ­றைக்குச் செல்­வார் என்­பதை உறு­தி­யா­கக் கணிக்க முடி­யாது.

இருப்­பி­னும், துவண்டு விடா­மல் விரும்­பிய முறை­யில் வாழ்க்­கை­யைத் தொடர இவர் உறு­தி­கொண்­டுள்­ளார்.

இரு­பது ஆண்­டு­கள் உடற் ­ப­யிற்சி ஆசி­ரி­ய­ரா­கப் பணி­யாற்­றிய திரு அருண், அதை விடுத்து வேறு வேலைக்கு மாற­வுள்­ளார்.

பெருங்­கு­டல் புற்­று­நோய் பற்­றிய விழிப்­பு­ணர்வை ஏற் படுத்த வேண்­டும் என்ற நோக்­கில் சிங்­கப்­பூர் 'மேன்­ஹண்ட்' ஆண் கட்­ட­ழ­கர் போட்­டி­யில் தாம் சேர்ந்­த­தா­கக் கூறி­னார் திரு அருண்.

"பெரும்­பா­லும் சிங்­கப்­பூர் ஆண்­களை அதி­கம் தாக்­கும் புற்­று­நோ­யாக பெருங்­கு­டல் புற்­று­நோய் உள்­ளது. ஆனால் நோயின் தாக்­கத்­தைப் பற்றி வெளிப்­ப­டை­யா­கப் பேச அதி­க­மா­னோர் முன்­வ­ரு­வ­தில்லை. இந்­நோ­யால் பாதிக்­கப்­பட்­ட­வர்­களும் ஆரோக்­கிய வாழ்க்­கை­மு­றை­யைத் தொடர முடி­யும் என்­பதை உணர்த்த விரும்­பு­கி­றேன்," என்று தெரி­வித்­தார் திரு அருண்.

22 போட்­டி­யா­ளர்­கள் பங்கு பெறும் சிங்­கப்­பூர் 'மேன் ஹண்ட்' கட்­ட­ழ­கர் போட்­டி­யின் இறு­திச்சுற்று அடுத்­தாண்டு ஜன­வரி மாதம் இடம்­பெ­றும்.

மேல்விவ­ரம் அறிய விரும்பு­வோர், 'manhuntsg' என்று பதி­விட்டு, சமூக வலைத்­ தளங்­களில் விவ­ரம் தேட­லாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!