உடனடி உதவி உயிர்களைக் காப்பாற்றும்

சக்தி மேகனா

சிங்­கப்­பூர் கனி­வன்பு இயக்­கம் இவ்­வாண்டு 22ஆவது தேசிய கருணை விரு­தை­யும் அக்­க­றை­யுள்ள பய­ணிக்­கான விரு­தை­யும் வழங்கி உள்­ளது.

போக்­கு­வ­ரத்துத் துறை­யில் மக்­க­ளுக்­காக கரு­ணைக் காட்­டும் வதில் முன்­மா­தி­ரி­யாகத் திக­ழும் ஊழியர்களும் பொது­ந­லத்­தில் அக்­கறை கொண்­ட­வர்­களும் விழா­வில் கௌர­விக்­கப்­பட்­ட­னர்.

திரு­மதி அஞ்சு பிள்ளை, சிறந்த அக்­க­றை­யுள்ள பய­ணி­க­ளுக்­கான விருதை வென்­றார். அவர், தேசிய சிறு­நீ­ரக அற­நி­று­வ­னத்­தில் தாதி யாகப் பணி­பு­ரிந்து வரு­கி­றார்.

பொங்­கோல் பெரு­வி­ரைவு ரயில் நிலை­யத்­திற்கு திரு­மதி அஞ்சு, சக தாதியர்களான திரு­மதி ஏரி­யன் குய்­மினோ பெர் மோய், திருமதி டயாக் லுர்­டெஸ் ஆர்­லோஸ் ஆகி­யோ­ரு­டன் சென்று கொண்­டி­ருந்­தார்.

அப்­போது வய­தா­ன­வர் ஒருத்­தர், ரத்­தம் வழிந்­தோ­டிய நிலை­யில் விழுந்­து­கி­டந்­தார். அடுத்த வினா­டியே திரு­மதி அஞ்சு, அவ­ரது நாடித்­து­டிப்பை பரி­சோ­தனை செய் தார். இத­யத் துடிப்பு இல்­லா­த­தால் உட­ன­டி­யாக அவ­ருக்கு இத­யத் துடிப்பை மீட்­டெ­டுக்­கும் முத­லு­தவி யைச் செய்­தார். எட்டு நிமிட போராட்­டத்­திற்­குப் பிறகு வய­தான வருக்கு மூச்­சுத் திரும்­பி­யது.

"ரயில் நிலை­யத்­திற்கு வந்­த­போது வய­தா­ன­வ­ரைச் சுற்றி கூட்­டம் கூடி­யி­ருந்­தது. யாரும் அவ­ருக்கு உதவி செய்­ய­வில்லை. நானும் என்­னு­டைய தோழி­களும் அந்­தச் சம­யத்­தில் அவ­ருக்கு உதவி செய்­ய­வில்லை என்­றால் அவ­ரது உயி­ருக்கு ஆபத்து ஏற்­பட்­டி­ருக்க லாம். நமது சமு­தா­யத்­தில் ஒரு­வர் ஆபத்­தில் இருந்­தால் அதை வேடிக்கை பார்க்­கா­மல் உட­ன­டி­யாக உதவி செய்­வது அவ­சி­யம்," என்று திரு­மதி அஞ்சு வலி­யு­றுத்­தி­னார்.

அக்­க­றை­யுள்ள பய­ணி­க­ளுக்­கான பாராட்டு விரு­தைப் பெற்ற திரு திரு­நா­வுக்­க­ரசு ஸ்ரீனி­வா­சன், சுகா­தார உத­வி­யா­ள­ராக வேலை செய்து வரு­கி­றார்.

வய­தா­ன­வர் அமர்ந்­திருந்த சக்­கர நாற்­காலி, ரயில்­தள இடை­வெ­ளி­யில் சிக்­கி­ய­தைப் பார்த்­த­தும் ரயி­லில் அமர்ந்­தி­ருந்த அவர், உடை­மை­களை விட்­டு­விட்டு வய­தா­ன­வ­ருக்கு உதவி செய்­தார்.

இந்தச் சம்பவத்தின்போது வய தானவருக்கு யாரும் உதவி செய்ய வரவில்லை என்பது அவருக்கு ஏமாற்றமாக இருந்தது.

"நமது சமுதாயம் மற்றவர்களுக்கு உடனே உதவி செய்ய வேண்டிய மனப்பான்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும்," என்றார் திரு திருநாவுக்கரசு ஸ்ரீனிவாசன்.

திரு கேசவன், திரு அருள், திருமதி பரமேஸ்வரி சிலகுமாரன் ஆகிய மூவருக்கும் 'டிரான்ஸ்போர்ட் கோல்ட்' விருது வழங்கப்பட்டது.

எஸ்எம்ஆர்டி பேருந்து எண் 975ன் ஓட்டுநரான திரு கேசவன், ஒரு சமயம் நடுத்தர வயதுடைய ஒருவர், பேருந்திலிருந்து இறங்கும் போது விழுந்துவிட்டதைப் பார்த்தார்.

உடனே அவரை பேருந்து நிறுத்தும் இடத்தில் அமர வைத்து கட்டுப்பாட்டு நிலையத்திற்கு கேசவன் தகவல் கொடுத்தார்.

பின்னர் அரைமணி நேரத்திற்குப் பிறகு எதிர்திசையில் பேருந்தை ஓட்டிக்கொண்டு அவர் திரும்பிக் கொண்டிருந்தபோது அந்த ஆடவர் இன்னமும் பேருந்து நிறுத்தும் இடத்தில் தடுமாறிக்கொண்டு இருந்ததை அவர் கவனித்தார்.

"உடனே என்னுடைய பேருந்தில் இருக்கும் பயணிகளை அடுத்த பேருந்தை எடுக்க வழிகாட்டிவிட்டு தடுமாறிக்கொண்டிருந்த ஆட வருக்கு மருத்துவ உதவியாளர்கள் வரும் வரை கவனித்துக் கொண்டேன்," என்றார் கேசவன்.

சென்ற ஆண்டு ரயில் ஓட்­டு ­ந­ரான திரு அருள்­ராஜ் ரயிலை செலுத்திக்கொண்டிருந்தபோது பழு­த­டைந்து இரு நிலை­யங்­க­ளுக்கு இடையே நடு வழி­யில் நின்­று­விட்­டது. ரயி­லில் தாயு­டன் இருந்த குழந்தை முடி­யா­மல் இருந்­த­தைக் கண்­டார். அவர், ரயில் கட்­டுப்­பாட்டு அறை­யு­டன் தொடர்பு கொண்டு தேவை­யான உத­விக­ளைச் செய்­தார்.

"குழந்­தைக்கு சரி­யா­கும் வரை நான் கவ­னித்­துக்­கொண்­டேன். இந்த உத­வியால் கிடைத்த கௌர வத்தை எஸ்­எம்­ஆர்­டி­யின் சக ஊழி­யர்­க­ளுக்­கும் ரயில் ஓட்டுர்­க­ளுக்­கும் அர்ப்­ப­ணிக்­கி­றேன்," என்று திரு அருள் கூறி­னார்.

சென்ற மார்ச் மாதத்­தில் திருமதி செங் தனது தங்­கை­யின் பழு­தா­னச் சலுகை அட்­டையை மாற்ற ஹவ்­காங் பேருந்து நிலை­யத்­தில் உள்ள டிரான்­சிட் லிங்க் முகப்­புக்­குச் சென்­றார். அன்று அவர் அட்­டையை மாற்றுவதற்­குப் போதிய பணம் கொண்டு வரா­த­தால் வாடிக்­கை­யா­ளர் சேவை அதி­கா­ரி­யான திரு­மதி பர­மேஸ்­வரி சில­குமரன் பண உதவி செய்­தார்.

திருமதி செங் அவருக்கு பணத்தை திருப்பிச் செலுத்தும்போது அதை திருமதி பரமேஸ்வரி வாங்க மறுத்துவிட்டார். இதை­போல் பல வாடிக்­கை­யா­ளர்களுக்கு அவர் பண உதவி செய்து உள்­ளார்.

"நான் செய்த இந்­தச் சிறிய உத­வி­கள் என் வாழ்க்­கை­யில் பெரிய மாற்­றங்­களை ஏற்­ப­டுத்­தும் என்று எதிர்­பாக்­க­வில்லை. இந்த விருது மிக­வும் எதிர்­பா­ராத ஒன்று. மற்­ற­வர்­க­ளுக்கு மகிழ்ச்­சி­ய­ளிக்­கும் செய­லால் நானும் மகிழ்ச்சி அடை­கி­றேன்," என்று அவர் கூறி­னார்.

இவ்­வி­ருது நிகழ்ச்­சி­யில் போக்கு­ வ­ரத்து அமைச்­சர் எஸ். ஈஸ்­வ­ரன் கலந்­து­கொண்டு விருது பெற்­ற­வர்­களை பாராட்­டி­னார். "கொவிட்-19 கொள்­ளை­நோ­யி­லி­ருந்து மீண்டு வரு­வ­த­தற்கு பொரு­ளி­யல் வளர்ச்சி மட்­டு­மல்ல சமூ­கத்­தில் சிறந்த குணாதி­ச­யங்­கள் மிக்­க­வர்­களும் தேவை. நாம் அனை­வ­ரும் ஒரு­வ­ருக்கு ஒரு­வர் பணி­வன்­பு­டன் நடந்துகொள்ள வேண்­டும். இந்­தப் பண்­பு­களை இவ்­வி­ரு­து­கள் ஊக்­கு­விக்­கின்­றன," என்று அமைச்­சர் ஈஸ்­வ­ரன் குறிப்பிட்டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!