திரு ச. வரதனின் நூல் வெளியீட்டு விழா

திரு ச. வரதனின் நூல் வெளியீட்டு விழா

1 mins read

சிங்கப்பூர் இந்தியக் கலைஞர் சங்கம் கடந்த ஞாயிறு அன்று ஸூம் வழியாக திரு ச.வரதனின் '1916 சிலாட் சாலை சக்தி கோயில் வரலாறு' என்ற நூலை வெளியிட்டது. சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட பேராசிரியர் திரு வீரமணி, திரு வரதனின் சிறப்புகளைப் பற்றியும் அவருடைய நாடக இயக்கத்தைப் பற்றியும் விளக்கியதுடன் சக்தி கோயில் நூலின் வெளியீடு மிக அவசியமானது என்றும் வலியுறுத்தினார். நூலாசிரியர் ச.வரதன் பேசியபோது, பகுத்தறிவு நாடகமன்றம், சிங்கப்பூர் இந்தியக் கலைஞர் சங்கம் ஆகியவை நடத்திய நாடகங்களுக்கான காட்சி அமைப்புகளுக்கு சக்தி கோவில் ஆற்றிய பெரும்பங்கு குறித்து விளக்கினார். கலைஞர்கள் பலரை உருவாக்குவதற்குக் கோயில் பேருதவியாக இருந்ததாகப் பகிர்ந்துகொண்டார். கேள்வி, பதில் அங்கத்தை செயலவை உறுப்பினர் ரெ.சோமசுந்தரம் நடத்தினார். ஆங்கிலம், தமிழில் அச்சிடப்பட்டுள்ள நூலை இலவசமாகப் பெற விரும்புவோர் 98383361 எண்ணில் தொடர்புகொள்ளலாம்.