கேலாங் மேற்கு சமூக மன்ற இந்தியர் நற்பணிச் செயற்குழு, கொளம் ஆயர் சமூக மன்ற இந்தியர் நற்பணிச் செயற்குழு, கொளம் ஆயர் இளையர் குழு ஆகியவை இணைந்து தீபாவளியை முன்னிட்டு 'வண்ண தீப ஒளி 2021' நிகழ்ச்சிக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று ஏற்பாடு செய்திருந்தது. ஜாலான் புசார் குழுத்தொகுதி அடித்தள அமைப்புகளின் ஆலோசகரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டாக்டர் வான் ரிசால் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். கொளம் ஆயர் வட்டார குடியிருப்பாளர்களின் தீபாவளிச் செய்திகள், பாரம்பரிய நடனம், பாடல்கள் என வெளிப்புற படப்பிடிப்புகளின் தொகுப்புடன் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இல்லத்திலிருந்து இணையம் வழியாக இணைந்திருந்த 85 குடியிருப்பாளர்களுக்கு அதிர்ஷ்டக் குலுக்கில் பரிசுப்பொருள்களும் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியை https://youtu.be/b-VwQLn8qts இணைப்பில் காணலாம்.
வண்ண தீப ஒளி கொண்டாட்டம்
1 mins read
-

