முன்னணி உலக ராப் இசைவட்டில் சிங்கப்பூர் தமிழரும் தமிழும்

முன்னணி உலக ராப் இசைவட்டில் சிங்கப்பூர் தமிழரும் தமிழும்

2 mins read
f65bf9bf-faf7-40eb-a638-ee404132e9a1
சிங்கப்பூரைச் சேர்ந்த ராப் கலைஞர் யங் ராஜா தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதி பாடிய ராப் வரிகள், உலகின் மிகப் பிரபலமான ராப் இசைக் கலைஞர்களின் ஒருவரான ஸ்னூப் டாகின் (Snoop Dogg) இசைவட்டில் இடம்பிடித்துள்ளன. படம்: இணையம் -

சிங்கப்பூரைச் சேர்ந்த ராப் கலைஞர் யங் ராஜா எழுதி பாடிய ராப் வரிகள், உலகின் மிகப் பிரபலமான ராப் இசைக் கலைஞர்களின் ஒருவரான ஸ்னூப் டாகின் (Snoop Dogg) இசைவட்டில் இடம்பிடித்துள்ளன.

அதில் யங் ராஜா ஆங்கிலத்துடன் தமிழிலும் ராப் இசைத்திருக்கிறார் என்பது கூடுதல் சிறப்பு.

26 வயது யங் ராஜா ஆங்கிலத்திலும் தமிழிலும் ராப் பாடல்களைப் படைத்து வருகிறார். அவரது இயற்பெயர் ராஜா அகமது ஆகும்.

ஸ்னூப் டாக் அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல ராப் இசைக் கலைஞரும் பாடல் ஆசிரியரும் ஆவார்.

அவர் கடந்த டிசம்பர் 10 அன்று ஸ்னூப் டாக் பிரெசன்ட்ஸ் அர்காரிதம் (Snoop Dogg Presents Algorithm) வெளியிட்டார்.

அதில் உள்ள குவாலிஃபைட் (Qualified) எனும் பாடலில், ஸ்னூப் டாகுடன் சேர்ந்து யங் ராஜாவும் பாடியுள்ளார்.

பாடல் தொடங்கிய இரண்டாம் நிமிடத்தில் அவரது குரல் வருகிறது.

அதில் அவர் ஆங்கிலும் தமிழும் கலந்த வரிகளைப் பாடியுள்ளார். பாடல் வரிகள் சிங்கப்பூரைக் குறிக்கின்றன.

"ஸ்னூப் டாக் போன்ற புகழ்பெற்ற பாடகர் இடம்பெற்றுள்ள அதே பாடலில் நானும் இடம்பெற்றுள்ளேன் என்பதை என்னால் நம்ப முடியவில்லை," என்றார் யங் ராஜா. இதன்வழி மீண்டும் அனைத்துலகத் தளத்தில் யங் ராஜா தடம் பதித்துள்ளார்.

முன்னணி அமெரிக்க ராப் இசைவட்டு நிறுவனமான 'அலெமோ ரெக்கார்ட்ஸ்', யங் ராஜாவை ஒப்பந்தம் செய்துள்ளது.

அவரது மாமி என்ற பாடலை அந்நிறுவனம் இவ்வாண்டு ஏப்ரலில் வெளியிட்டது.