ஸ்ரீ அரசகேசரி சிவன் ஆலயத்தில் பொங்கல் கொண்டாட்டம்

ஸ்ரீ அரசகேசரி சிவன் ஆலயத்தில் பொங்கல் கொண்டாட்டம்

1 mins read
631a4091-83a2-4e87-a796-ee6aff205b00
பொங்கல் திருநாளை முன்னிட்டு ஸ்ரீ அரசகேசரி சிவன் ஆலயத்தில், பக்தர்களும் ஆலயத்தாரும் பொங்கல் பானை வைத்து  வழிபட்டனர்.  -
multi-img1 of 2

பொங்கல் திருநாளை முன்னிட்டு ஸ்ரீ அரசகேசரி சிவன் ஆலயத்தில், பக்தர்களும் ஆலயத்தாரும் பொங்கல் பானை வைத்து வழிபட்டனர்.

காலை ஏழு மணி அளவில் பொங்கல் வைக்கும் சடங்கு தொடங்கியது.

பொங்கல் திருநாளை முன்னிட்டு அதிகாலை முதலே ஆலயத்தில் கூட்டம் நிறைந்திருந்தது.

இவ்வாண்டு பொங்கலுக்காக விடுப்பு எடுத்து கோவிலுக்கு வந்ததாக பக்தர்கள் சிலர் தமிழ் முரசிடம் கூறினர்.

இரண்டு ஆண்டுகாலம் கட்டுப்பாடுகளிலும் சுணக்கத்திலும் ஓடிவிட்டன.

இனி வரும் காலம் வளமாக இருக்கவேண்டும் என்று நினைத்து வழிபட்டதாக பக்தர்கள் சிலர் குறிப்பிட்டனர்.