பண்புநெறிகளைப் போற்ற பொங்கல் கொண்டாடும் தூதரகம்

பண்புநெறிகளைப் போற்ற பொங்கல் கொண்டாடும் தூதரகம்

1 mins read
82a155cb-d894-4769-9f3d-10b85af7a84f
சிங்கப்பூரிலுள்ள இலங்கைத் தூதரகத்தில் கடந்த வியாழக்கிழமை காலை எட்டு மணியளவில் நடைபெற்ற தைப்பொங்கல் கொண்டாட்டத்தில் தூதர் திருவாட்டி ச‌ஷிகலா பிரேமவர்தினி பொங்கல் வைத்தார். படத்தின் வலக்கோடியில் ஸ்ரீ செண்பக விநாயகர் ஆலயத்தின் தலைமைக் குருக்கள் ஸ்ரீ சபேச குருக்கள். அமர்ந்திருப்பவர் ஆலயத்தின் தலைவர் டாக்டர் எஸ்.டி.காசிநாதன். படம்: திமத்தி டேவிட் -

முதல் அறு­வ­டையை சூரி­ய­னுக்கு அர்ப்­ப­ணித்து நன்றி கூறும் உழவர் திரு­நாள் சிங்­கப்­பூ­ரி­லுள்ள இலங்கைத் தூத­ர­கத்­தில் கடந்த வியா­ழக்­கி­ழமை சிறிய அளவில் கொண்­டா­டப்­பட்டது.

மிகப்­பெ­ரிய விவ­சா­யப் பொரு­ளி­ய­லைக் கொண்ட நாடு­களில் ஒன்­றா­க­வும் விவ­சா­யத்­தைச் சார்ந்த பெரிய சமூ­கத்­தைக் கொண்ட நாடா­க­வும் திக­ழும் இலங்­கை­யில் பொங்­கல் முக்­கிய விழா­வா­கக் கொண்­டா­டப்­ப­டு­கிறது.

"நன்றி கூறு­வது என்­பது இலங்கை சமூ­கத்­தின் முக்­கியப் பண்­பாடு. தைப்பொங்­கல் அன்று முதல் அறு­வ­டை­யைச் சூரி­ய­னுக்கு அர்ப்­ப­ணிக்­கும் பாரம்­ப­ரி­யம், தொன்று தொட்டு இலங்கை சமூ­கம் கொண்­டா­டி­வ­ரும் பண்­பு­நெறி­க­ளை பிர­தி­ப­லிக்­கிறது," என்று தெரிவித்தார் சிங்­கப்­பூ­ருக்­கான இலங்­கைத் தூதர் திருவாட்டி ச‌ஷி­கலா பிரே­ம­வர்­தினி.

"இலங்­கை­யின் தேசிய கலா­சா­ரத்­தின் பிர­தான அங்­க­மாக தைப்பொங்­கல் உரு­வெ­டுத்­துள்­ளது," என்­று அவர் விவரித்தார்.

நொவீனா, கோல்ட்­ஹில் பிளா­சா­வில் உள்ள இலங்­கைத் தூதரக அலு­வ­ல­கத்­தில் நடை­பெற்ற பொங்­கல் விழா­வில் அலு­வலக ஊழி­யர்­களும் ஸ்ரீ செண்­பக விநா­ய­கர் கோயில் ஆல­யம், சிங்கப்­பூர் சிலோன் தமி­ழர் சங்­கம் ஆகி­ய­வற்­றைச் சேர்ந்த நிர்­வா­கி­களும் பங்­கேற்­றுச் சிறப்பித்தனர்.

கிரு­மிப் பர­வல் சூழ­ல் காரணமாக இந்த ஆண்டு சிறிய அள­வில் பொங்­கல் விழா கொண்­டா­டப்­பட்­ட­தாக தூத­ரகம் கூறி­யது.

- இர்­ஷாத் முஹம்­மது