தமிழ் எழுத்தாளர் கழகத்தின் அறிவியல், வரலாற்றுச் சிறுகதைப் போட்டிகள்

தமிழ் எழுத்தாளர் கழகத்தின் அறிவியல், வரலாற்றுச் சிறுகதைப் போட்டிகள்

1 mins read

சிங்­கப்­பூர்த் தமிழ் எழுத்­தா­ளர் கழகத்­தின் ஆண்டு விழா­வான முத்­த­மிழ் விழாவை ஒட்டி இவ்­வாண்டும் இலக்­கி­யப் போட்­டி­க­ள் நடத்தப்படுகின்றன.

பொதுமக்களுக்கான சிறுகதைப் போட்டியுடன் கூடுதலாக இந்த ஆண்டு சிறப்பு அறி­வி­யல், வர­லாற்­றுக் கதைப் போட்­டி­களும் அறி­விக்­கப்­பட்­டுள்­ளன.

பொதுமக்­கள் சிறு­க­தைப்

போட்­டிக்கான பரி­சு­கள்

முதல் பரிசு $500; 2ஆம் பரிசு $300; 3ஆம் பரிசு $200. மூன்று ஊக்­கப் பரி­சு­க­ளுக்கு தலா $100 ரொக்கமும் வழங்­கப்­படும்.

இப்­போட்­டிக்கு கதைக்கரு எது­வாக வேண்­டு­மா­னா­லும் இருக்­க­லாம். கதைகளைப் பதி­வேற்­றம் செய்ய வேண்­டிய கூகல் டிரைவ் இணைப்பு: https://forms.gle/L1f7RtYEGeFHp1hf7

சிறப்பு அறி­வி­யல் சிறு­க­தைக்கு டாக்­டர் காமேஸ்­வ­ரன் & டாக்­டர் லலிதா காமேஸ்­வ­ரன் நினை­வுப் பரிசு $250.

சிறப்பு வர­லாற்­றுச் சிறு­க­தைக்கு டாக்­டர் சங்­க­ரன் & முனை­வர் சித்ரா சங்­க­ரன் வழங்­கும் பரிசு $250.

இப்­போட்­டி­க­ளுக்கு எழு­தப்­படும் கதை­கள் சிங்­கப்­பூர்ச் சூழ­லைத் தள­மா­கக் கொண்ட அறி­வி­யல், வர­லாற்­றுக் கதை­க­ளாக இருக்க வேண்­டும்.

கதைகளைப் பதி­வேற்­றம் செய்ய வேண்­டிய கூகல் டிரைவ் இணைப்பு: https://forms.gle/RC3eRz4kqGmFqnq28

எல்­லாப் போட்­டி­க­ளுக்கும் கதை­களை அனுப்பி வைக்க வேண்­டிய இறுதி நாள்: 20.03.2022

சிங்­கப்­பூர்க் குடி­யு­ரிமை பெற்­ற­வர்­களும் நிரந்­த­ர­வா­சி­களும் இப்­போட்­டி­களில் பங்­கேற்­க­லாம்.

போட்டி முடி­வு­கள் ஏப்­ர­லில் நடக்க இருக்­கும் முத்­த­மிழ் விழா­வில் அறி­விக்­கப்­படும்.

மேல் விவ­ரங்­க­ளுக்கு எழுத்­தா­ளர் கழ­கத் துணைத் தலை­வர் திரு. சு. முத்­து­மா­ணிக்­கத்­தை 9675 3215 என்ற தொலை­பேசி எண்­ணில் தொடர்பு கொள்­ள­லாம்.