போர்க்காலத்தின்போது தனிமை

போர்க்காலத்தின்போது தனிமை

2 mins read
455ae218-218f-4466-9d0f-c178b9887ce3
மனைவி, கொள்ளுப் பேரன் ஜேவியனுடன் திரு காளிமுத்து. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

1930களில் சிங்­கப்­பூரை வலம் வந்த உயிர்க்­கொல்லி தொற்­று­நோய்­க­ளால் தாயா­ரை­யும் சகோ­தரி­க­ளை­யும் இழந்த 89 வயது தங்­க­வேலு காளி­முத்­து­வின் பிள்­ளைப்­ ப­ரு­வத்­தில் தனி­மையை உணர்ந்­த­தா­கக் கூறி­னார். சிறு­வ­னாக இருந்­த­போது ஜப்­பா­னிய வீர­ரால் கன்னத்தில் அறை­யப்­பட்ட தரு­ணம், வாழ்­நாளில் மறக்க இய­லா­தது என்றார் திரு காளி­முத்து.

சுமார் ஏழு வய­தில் இச்சம்­ப­வம் நடந்­த­தா­கக் கூறிய திரு காளி­முத்து, சாலை­யோ­ரத்­தில் அமர்ந்து அழு­ததை நினை­வு­கூர்ந்­தார். "வழி­யில் சென்­று­கொண்­டி­ருந்த ஒரு தமி­ழர் விசா­ரித்­த­போது நடந்­ததைக் கூறி­னேன். அவர் ஜப்­பானிய உயர் அதி­காரி ஒரு­வ­ரி­டம் பேச, என்னை அறைந்­த­வர் கண்­டிக்­கப்­பட்­டார்," என்றார்.

1935ஆம் ஆண்­டில் சிங்­கப்­பூ­ரின் தேக்கா வட்­டா­ரத்­தி­லுள்ள டன்­லப் ஸ்தி­ரீட்­டில் தங்­க­வேலு காளி­முத்து பிறந்­தார். "என் அப்­பா­வும் சிங்­கப்­பூ­ரில் பிறந்­த­வர். தாத்தா இந்­தி­யா­வி­லி­ருந்து வந்­த­வர்," என்று கூறி­னார்.

திரு தங்­க­வே­லு­வின் தம்­பி­யைப் பெற்­றெ­டுத்த பிறகு அவ­ரது தாயார் காச நோயால் உயி­ரி­ழந்­தார். ராஃபிள்ஸ் ஹோட்­ட­லில் உப­ச­ரிப்­புத் துறை­யில் தந்தை பணி­யாற்­றிய சம­யத்­தில் தமது பாட்டி 'நாசி லிமாக்' எனும் மலாய் உணவு விற்று வந்­ததைப் பகிர்ந்துகொண்டார்.

பேராக் ரோட்­டில் பாட்­டி­யு­டன் தங்­கிய ஒரு வீட்­டின் கீழ் சுரங்­கம் இருந்­த­தால் போர் விமா­னக் குண்­டு­க­ளி­லிருந்து தப்­பித்­த­தா­கக் கூறி­னார். போர் முடிந்த பிறகு ராயல் இங்கிலிஷ் பள்ளியில் நான்­காம் வகுப்பை முடித்­தார் திரு காளிமுத்து.

1957ல் இவர் சிலாங்­கூ­ரில் பிறந்த கம­லா­வைத் திரு­ம­ணம் செய்­து­கொண்­டார். தற்­போது சிராங்­கூன் வட்­டா­ரத்­தில் வசிக்­கும் இவ­ருக்கு ஜப்­பா­னிய தேசிய கீதம் இன்­னும் நினை­வில் உள்­ளது. மூன்று பிள்­ளை­கள், ஐந்து பேரப்­பிள்­ளை­கள், ஒரு கொள்­ளுப் பேரன் இவ­ருக்கு உள்­ள­னர்.