தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

குரல் இனிமையால் கூடிவந்த பெருமை

2 mins read
683cae9d-d26d-4d1d-ae7f-ba591be1fc34
இந்தியத் திரைப்படங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்கள் பாடிய பிரியதர்ஷினியின் இசைப்பயணம் சிங்கப்பூரில் தொடங்கியது. படம்: முனைவர் பிரியதர்ஷினி -

கவின்­விழி கதி­ரொளி

சிங்­கப்­பூ­ர­ரான முனை­வர் பிரி­ய­தர்ஷினி இந்­திய திரை­யு­ல­கில் நூற்­றுக்­கும் மேற்­பட்ட படங்­களில் பாடி­யி­ருக்­கி­றார்.

இந்­துஸ்­தானி இசை, மேற்­கத்­திய இசை, கர்­நா­டக இசை ஆகி­ய­வற்­றில் நன்கு தேர்ச்சி பெற்­ற­வர் பிரி­ய­தர்­‌ஷினி. தமிழ், கன்­ன­டம், தெலுங்கு, மலை­யா­ளம் மற்­றும் இந்தி மொழி­களில் பாடிய இவ­ருக்கு, கடந்த ஆண்டு செப்­டம்­பரில் மைசூர் பல்­க­லைக்­க­ழ­கம் முனை­வர் பட்­டம் வழங்­கிக் கௌர­வித்­தது.

கன்­ன­டம் மற்­றும் தமிழ் திரைத்­து­றை­யில் இசை என்ற தனது ஆராய்ச்­சிக்­காக இசை­த்துறையில் முனை­வர் பட்­டம் பெற்ற இவர், அந்தப் பட்டத்தை இசைக்குச் சமர்ப் பிப்பதாகக் கூறினார்.

"நமது இந்­திய திரை­யு­ல­கில் பல இசை வகை­கள் உள்­ளன. திரைப்­பட இசை­யைப் பற்றி இது­வரை யாரும் ஆராய்ச்சி மேற்­கொண்டதாகத் தெரியவில்லை. இசைக்காக எனக்குக் கிடைத்த முனைவர் பட்டத்தை என்­னு­டைய சமர்ப்­ப­ண­மாகக் கரு­து­கி­றேன்," என்­றார் பிரி­ய­தர்­ஷினி.

சிங்­கப்­பூ­ரில்­தான் தமது இசைப்­ ப­ய­ணம் தொடங்­கி­யது என்­ப­தில் இவர் பெரு­மி­தம் கொள்­கி­றார். பள்­ளிப்பரு­வத்­தி­லி­ருந்தே பல போட்­டி­களில் பங்­கெ­டுத்து வெற்றிபெற்ற இவ­ருக்கு, இவர் கல்வி பயின்ற ஈசூன் உயர்­நி­லைப் பள்ளி 'நைட்­டிங்­கேல்' பட்­டம் வழங்­கி­யது.

'ஒலி 96.8' வானொலி நடத்­திய 'மாண­வர் பாட்­டுத்­தி­றன் போட்­டி'­யில் வென்ற பிரி­ய­தர்­ஷி­னிக்கு சிறப்­புப் பரி­சாக இந்­தியா சென்று, இளை­ய­ராஜா, வித்­யா­சா­கர், கமல்­ஹா­சன் போன்ற ஜாம்­ப­வான்­க­ளைச் சந்­திக்­கும் அரிய வாய்ப்பு அளிக்கப் பட்டது.

"இத்­த­கைய பெரும்­பி­ர­ப­லங்­க­ளைச் சந்­தித்து அவர்­க­ளி­ட­மி­ருந்து கற்­றுக்­கொள்­ளும் வாய்ப்பு கிடைத்­ததை நான் வாழ்­நா­ளில் கிடைத்த பாக்­கி­ய­மா­கக் கரு­து­கி­றேன்," என அவர் தெரிவித்தார்.

பாட்டு மட்­டு­மல்ல நடிப்­பி­லும் இவர் கைதேர்ந்­த­வர். பல சிங்­கப்­பூர் நிகழ்ச்­சி­களில் குழந்தை நட்­சத்­தி­ர­மாக நடித்­தி­ருக்­கி­றார். 'நினைத்­தாலே இனிக்­கும்' போன்ற வசந்­தம் தொலைக்­காட்சி நிகழ்ச்­சி­களில் கலை­ஞ­ரா­க­வும் இருந்­துள்ளார்.

விடு­மு­றைப் பயணமாக இந்­தி­யா­வுக்­குச் சென்­றி­ருந்­த­போது தமது தந்­தை­யின் நண்­ப­ரான இசை அமைப்­பா­ளர் பரத்­வாஜை இவர் சந்­தித்­தார்.

பிரி­ய­தர்­ஷி­னி­யின் இனிய குரல் திரு பரத்­வா­ஜைக் கவர்ந்­தது. அதன் தொடர்ச்­சி­யாக, 2003ஆம் ஆண்டு நன்­யாங் தொழில்­நுட்பப் பல்­க­லைக்­க­ழ­கத்­தில் படித்­துக்­கொண்­டி­ருந்தபோது, 'காதல் டாட் காம்' திரைப்­ப­டத்­தில் பாட­கர் ஹரி­ஹ­ர­னு­டன் தமது முதல் பின்­ன­ணிப் பாட­லைப் பாடும் வாய்ப்­புப் பெற்­றார். 'காதல் காதல்' என்­னும் அந்­தப் பாடலை பழ­னி­பா­ரதி எழுதி இருந்­தார்.