கி. ஜனார்த்தனன்
புனித மரம் ஸ்ரீ பாலசுப்பிரமணியர் ஆலயத்தின் இவ்வாண்டு பங்குனி உத்திரத் திருவிழா, மார்ச் 18ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறவுள்ளது.
கிட்டத்தட்ட 10,000 பக்தர்கள் இவ்விழாவில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போதைய கொவிட்-19 நில
வரத்தால் இவ்வாண்டு பால்குடங்களுக்கு மட்டுமே அனுமதி உண்டு. 3,600 பால்குட பக்தர்கள் வரை அனுமதிக்கப்படுவார்கள்.
பால்குடம் செலுத்த விரும்பும் பக்தர்கள் முன்பதிவு செய்துகொள்ளவேண்டும். அத்துடன் அவர்கள் தடுப்பூசி முழுமையாகப் போட்டவர்களாக இருக்கவேண்டும் என்று ஆலயம் தெரிவித்துள்ளது.
மேலும், ஆலயத்தில் தயாரிக்கப்படும் பால்குடங்களையே பக்தர்கள் சமர்ப்பிக்கவேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
பால்குடத்திற்காகப் பதிவு செய் பவர்கள், கூடுதலாக தங்களுடன் செல்ல விரும்பும் ஒருவருக்காகப் பதிவுசெய்யலாம்.
அலகுக் காவடிகளுக்கு இவ்வாண்டும் அனுமதியில்லை. ஆனால் குழந்தைகளுக்கான முடிக்காணிக்கைக்கு அனுமதி உண்டு.
பொது தரிசனத்திற்கும் முன்
பதிவு தேவைப்படும். தரிசனத்திற்காகச் செல்ல விரும்பும் பக்தர், தான் உட்பட அதிகபட்சமாக ஐந்து பேர் வரை பதிவுசெய்யலாம்.
கிருமிப்பரவல் மிகுந்த 2020ஆம் ஆண்டு பங்குனி உத்திரத் திருவிழாவில் பொதுமக்கள் கலந்துகொள்ள அனுமதிக்கப்படாததை அடுத்து கடந்த ஆண்டு பால்
குட பக்தர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர்.
அப்போது பால்குட பக்தர்கள் 3,500 முதல் 4,000 வரையிலும் பொது தரிசன பக்தர்கள் 3,000 முதல் 3,500 வரையிலும் அனு
மதிக்கப்பட்டனர்.

