சமூக சேவையில் '18 படிகள்'

சமூக சேவையில் '18 படிகள்'

2 mins read
f4e67891-85fe-4e67-bfaa-d232e6f15508
நேற்று ஈஸ்ட் கோஸ்ட் பூங்காவில் சுற்றுப்புறத் தூய்மையில் களமிறங்கிய 'தி எய்ட்டீன் ஸ்டெப்ஸ்' குழுவினர். படம்: தி எய்ட்டீன் ஸ்டெப்ஸ் -

நம் இந்­திய சமு­தா­யத்­தில் மாற்­றங்­க­ளைக் கொண்டு வர நினைப்­ப­வர்­க­ளுக்கு ஓர் அரிய வாய்ப்பு. கடந்த ஜன­வரி 22ஆம் தேதி தொடங்­கப்­பட்ட 'தி எய்ட்­டீன் ஸ்டெப்ஸ்' எனும் குழு அனைத்து வய­தி­ன­ருக்­கும் சமூக சேவை ஆற்ற பல வாய்ப்­பு­களை அளிக்­கின்­றது.

முதன்­மு­த­லாக நன்­கொடை வழங்­கிய சில ஐயப்ப பக்­தர்­க­ளுக்கு நன்­றி­கூ­றும் வகை­யில் குழு­விற்கு இந்­தப் பெயர் சூட்­டப்­பட்­டது. சப­ரி­ம­லைக்­குச் செல்­லும் பதி­னெட்டு படி­க­ளை­யும், அவை கற்­றுக்­கொ­டுக்­கும் பதி­னெட்­டுப் பாடங்­க­ளை­யும் 'தி எய்ட்­டீன் ஸ்டெப்ஸ்' என்ற பெயர் குறிக்­கின்­றது.

"பதி­னெட்­டுப் பாடங்­களில், நாங்­கள் கடைசி இரண்டு பாடங்­க­ளான கல்வி மற்­றும் அறி­யா­மையை முதன்­மைப்­ப­டுத்­து­கி­றோம். அறி­யா­மையை அகற்­றிப் புதிய அம்­சங்­க­ளைக் கற்­பிப்­பதே எங்­கள் நோக்­கம்," என்­றார் குழு­வின் இணை நிறு­வ­ன­ரான ஷோபனா பன்­னீர்.

வெளி­நாட்டு ஊழி­யர்­கள் எதிர்­கொள்­ளும் சவால்­கள், சுகா­தா­ரம், பெண்­ணி­யம் போன்ற பிரச்­சி­னை­க­ளைப் பற்றி இந்­திய சமு­தா­யத்­தில் விழிப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்த இக்­குழு விரும்­பு­கின்­றது.

நேற்று ஈஸ்ட் கோஸ்ட் பூங்­கா­வின் 'சி' பகு­தி­யில் குப்பை அகற்­றும் நட­வ­டிக்­கையை, பொதுச் சுகா­தார மன்­றத்­து­டன் சேர்ந்து அது நடத்­தி­யது. காலை பத்­தரை மணி முதல் பிற்­ப­கல் ஒரு மணி வரை, ஏறக்­கு­றைய 20 தொண்­டூ­ழி­யர்­கள் சுற்­றுப்­பு­றத்­தைத் தூய்­மை­யாக்­கும் முயற்­சி­யில் இறங்­கி­னார்­கள்.

"சுகா­தா­ரத்­தைப் பற்­றிய விழிப்­பு­ணர்வு சிங்­கப்­பூ­ரில் அதி­க­ம். அந்த விதத்­தில், நாங்­களும் எங்­கள் பங்கை ஆற்றி இந்­திய சமு­தா­யத்­தில் இதைப் பற்­றிய விழிப்­பு­ணர்வை அதி­க­ரிக்க முயற்சி செய்­கி­றோம்," என்­றார் குழு­வின் இணை நிறு­வ­னர் இள­மா­றன்.

அனைத்­து­லக மக­ளிர் தின­மான மார்ச் எட்­டாம் தேதி­ முதல் 31ஆம் தேதிவரை தங்­கள் சமூக ஊட­கப் பக்­கத்­தில் 'அன்­ஸங் காட­ஸெஸ்' எனும் நட­வ­டிக்­கையை இவர்­கள் நடத்­து­கின்­றார்­கள். பல துறை­க­ளை­யும் பிண்­ண­னி­க­ளை­யும் சார்ந்த இந்­தி­யப் பெண்­க­ளின் அனு­ப­வங்­களை இதன் மூல­மாக பொது­மக்­க­ளு­டன் பகிர்ந்­து­கொள்­கி­றார்­கள்.

"பேர், புகழ் போன்­றவை இல்­லை­யென்­றா­லும் நம் சமு­தா­யத்­தில் முன்மாதிரியாக விளங்­கு­ம் பெண்களைக் கொண்­டா­டும் வகை­யிலான நட­வ­டிக்கை இது," என்­றார் இள­மா­றன்..