‘பேசாப் பொருளைப் பேசத் துணிந்தோம்’

மாத­வி­டாய் என்­பது பெரும்­பா­லான பெண்­க­ளுக்கு ஏற்­ப­டு­கின்ற சாதா­ர­ண­மான உடல் செயல்­பாடு ஆகும். ஆனால், அதைப் பற்­றிய அறி­யாமை நம் சமு­தா­யத்­தில் இன்­னும் நில­வு­கிறது.

அத­னால், ஏற்­கெ­னவே பொரு­ளா­தா­ரச் சிக்­கலை எதிர்­நோக்­கும் பெண்­களில் சில­ருக்கு அந்த காலக்­கட்­டத்­தில் பயன்­ப­டுத்­தத் தேவைப்­படும் விடாய்க்­கால அணை­யாடை (சானிட்­டரி நாப்­கின்) போன்ற பொருள்­களை வாங்க இய­லாத நிலை.

மாத­வி­டாய் பற்றி வெளிப்­ப­டை­யா­கப் பேசு­வதை அதி­க­ரித்து, 'சானிட்­டரி நாப்­கின்' வாங்­கு­வ­தில் உள்ள சிக்­கல் குறித்த விழிப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்­த­வேண்­டும் என்ற நோக்­கத்­து­டன் 'கோ வித் தி ஃபுளோ' அமைப்பு செயல்­ப­டு­கின்­றது.

சமூக மன்­றங்­க­ளின் வழி சேவை செய்­து­கொண்­டி­ருந்த சில இளை­யர்­கள், குறைந்த வரு­மா­னக் குடும்­பங்­க­ளுக்கு வழங்­கப்­படும் அத்­தி­யா­வ­சி­யப் பொருள்­களில் 'சானிட்­டரி நாப்­கின்' போன்ற மாத­வி­டாய்ப் பொருள்­கள் வழங்­கப்­ப­டு­வ­தில்லை என்­ப­தைக் கவ­னித்­தார்­கள். இந்­தப் பிரச்­சி­னையை கண்­ட­றிந்த இவர்­கள் மற்ற சில நண்­பர்­க­ளோடு சேர்ந்து 'கோ வித் தி ஃபுளோ' எனும் அமைப்­பைத் தொடங்­கி­னார்­கள்.

2017, 2018ஆம் ஆண்­டு­க­ளுக்­கான சிங்­கப்­பூர் அர­சாங்­கத்­தின் புள்­ளி­வி­வ­ரத் துறைத் தர­வு­க­ளின்­படி, இங்கு உள்ள குறைந்த வரு­மா­னக் குடும்­பங்­களில் கிட்­டத்­தட்ட 20 விழுக்­காட்­டி­னர் மாதா­மா­தம் சரா­ச­ரி­யாக 2,570 வெள்­ளி­யைச் செல­வி­டு­கிறார்­கள். ஆனால், இக்­கு­டும்­பங்­க­ளின் மாத வரு­மா­னம் ஏறக்­கு­றைய 2,235 வெள்­ளி­யாக இருப்­ப­தால், இவர்­க­ளுக்கு $335 வரை பற்­றாக்­குறை ஏற்­ப­டு­கிறது.

மேலும், மாத­வி­டாய்ச் சுழற்­சியை எதிர்­கொள்­ளும் ஒவ்­வொரு பெண்­ணும் மாத­வி­டாய்ப் பொருள்­க­ளுக்­காக 36 வெள்­ளி­யி­லி­ருந்து 72 வெள்­ளி­வரை ஒவ்­வோர் ஆண்­டும் செலவு செய்­கி­றார்.

இந்­நி­லை­யில், குறைந்த வரு­மா­னக் குடும்­பங்­க­ளைச் சேர்ந்த பெண்­கள் அவற்றை வாங்­கு­வ­தில் எதிர்­நோக்­கும் நிதிச் சிக்­க­லைத் தீர்க்க, 'கோ வித் தி ஃபுளோ' அமைப்பு 'சானிட்­டரி நாப்­கின்' பொட்­ட­லங்­கள் போன்ற மாத­வி­டாய்ப் பொருள்­க­ளைத் திரட்­டு­வ­தில் ஈடு­ப­டு­கின்­றது.

சமூக மன்­றங்­கள், கல்வி நிலை­யங்­கள், பேரங்­கா­டி­கள் ஆகிய இடங்­களில் பொருத்­தப்­பட்­டுள்ள பெட்­டி­களில் மாத­வி­டாய்ப் பொருள்­களை பொது­மக்­கள் நன்­கொ­டை­யாக வழங்­க­லாம்.

இது­வரை இவர்­கள் 6,000த்துக்­கும் அதி­க­மான 'சானிட்­டரி நாப்­கின்' பொட்­ட­லங்­க­ளைத் திரட்டி அவற்றை வெவ்­வேறு குறைந்த வரு­மா­னக் குடும்­பங்­க­ளுக்கு அளித்­துள்­ளார்­கள்.

"நம் சமு­தா­யத்­தில் எத்­தனை பேர் மாத­வி­டா­யைப் பற்றி வெளிப்­ப­டை­யா­கப் பேசு­கின்­றார்­கள்? இதைப் பற்­றிப் பேசா­த­தால்­தான் மாத­வி­டாய் தொடர்பான நோய்­கள், மாத­வி­டாய்ப் பொருள்­களை வாங்க இய­லாத வறுமை போன்ற பிரச்­சி­னை­க­ளைப் பற்­றிய அறி­யாமை நம்­மில் பல­ரி­டையே நில­வு­கின்­றது" என்­றார் 'கோ வித் தி ஃபுளோ' அமைப்­பின் சுந்­த­ரம் மோகன் ஷக்தி.

'கோ வித் தி ஃபுளோ' அமைப்பு அதன் சமூக ஊட­கப் பக்­கத்­தில், மாத­வி­டா­யைப் பற்­றி­யும் அது­தொ­டர்­பான நோய்­க­ளைப் பற்­றி­யும் பதி­வி­டு­கின்­றது. குறிப்­பாக, அவர்­கள் ஆண்­க­ளி­ட­மும் இவை பற்­றிய விழிப்­பு­ணர்வை அதி­க­ரிக்க விழை­கின்­றார்­கள்.

"மாத­வி­டாய் என்­பது பெண்­கள் சம்­பந்­தப்­பட்ட விஷ­யம் மட்­டும் அல்ல. ஆண்­களும் இதைப் பற்றி தெரிந்­து­கொண்­டால்­தான் மாத­வி­டாய் பொருள்­கள் ஓர் அடிப்­ப­டைத் தேவை என்­பதை உணர்­வார்­கள். அதோடு, இப்­பொ­ருள்­களை நன்­கொ­டை­யாக வழங்­க­வும் மேலும் பல­ரும் முன்­வ­ரு­வார்­கள்," என்­றும் இவர் கூறி­னார்.

மாதவிடாய் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த முனைந்துள்ள இளையர்கள்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!