தமிழவேள் நற்பணி மன்றத்தின் 'நாளை நமதே'

தமிழவேள் நற்பணி மன்றத்தின் 'நாளை நமதே'

1 mins read

தமிழ் மொழி விழா 2022ன் ஓர் அங்­க­மாக தமி­ழ­வேள் நற்­பணி மன்­றம், "நாளை நமதே" என்ற நிகழ்ச்­சியை நடத்­த­வுள்­ளது. இந்­நி­கழ்ச்சி மெய்நிகரில் அடுத்த மாதம் மூன்­றாம் தேதி­யன்று காலை மூன்று மணி முதல் நண்­ப­கல் 12 மணி­வரை நடைபெறும்.

"சிங்கப்பூரின் 4 அதிகாரத்துவ மொழிகளில் இளம் பேச்சாளர்கள் உரையாற்றவிருப்பது நிகழ்ச்சியின் சிறப்பு அம்சமாகும்.

"தமிழ் மொழி­யின் வருங்­காலம், மொழி­யின் தேவை­க­ளைச் சமூ­கத்­தி­டம் எப்­படிக் கொண்டு சேர்ப்­பது, இளை­யர்­கள் அனைத்­து­லக அரங்­கில் தனித்­து­வம் பெற எவ்­வாறு திறன்­களை வளர்த்­துக்­கொண்டு சமூ­கத்­திற்­குப் பங்­க­ளிப்­பது, மாறி­வ­ரும் கலா­சா­ரப் பின்­ன­ணி­யில் வாழும் மொழி­யாகத் தமிழ் நீடித்து நிலைத்­தி­ருப்­ப­தற்­கான வழி வகை­கள், இரு மொழித் திறன் ஆகி­யவை குறித்­தும் அலசி ஆரா­யப்­படும்," என்று நிகழ்ச்சி ஏற்­பாட்­டுக் குழுத் தலை­வ­ரும் சிறப்புப் பேச்­சா­ளர்­களில் ஒரு­வ­ரு­மான, குமாரி கலை­வாணி இளங்கோ தமிழ்­ மு­ர­சி­டம் தெரி­வித்­தார்.

இந்நிகழ்ச்சியில் இணைய ஸூம் எண்: 828 4471 9127, கடவுச்­சொல்: 019728.

செய்தி: எம். இலியாஸ்