சிங்கப்பூர் செய்தித்தாளின் வரலாறு சொல்லும் தமிழ்ச் சுற்றுலா

எஸ்.விக்­னேஸ்­வரி

செய்­தித்­தாள்­கள் எப்­போ­துமே சமூ­கத்­தின் உயிர்­நா­டி­யாக விளங்கி வரு­கின்­றன. இணை­ய­மும் வானொலி, தொலைக்­காட்சி போன்ற ஊட­கங்­களும் கண்­டு­பி­டிக்­கப்­ப­டு­வ­தற்கு முன்­னர் செய்­தித்­தாளே தக­வல்­க­ளை­யும் செய்­தி­க­ளை­யும் மக்­க­ளுக்கு அறி­விக்­கும் ஒரே ஊட­க­மாக விளங்­கி­யது.

சிங்­கப்­பூ­ரில் 19ஆம் நூற்­றாண்­டின் பிற்­ப­கு­தி­யில் இருந்து தமிழ் பத்­தி­ரி­கை­கள் அச்­சி­டப்­பட்டு வரு­கின்­றன. சிங்­கப்­பூ­ரின் முதல் தமிழ் நாளி­த­ழாக அறி­யப்­படும் 'சிங்கை வர்த்­த­மானி' 1875ஆம் ஆண்டு வெளி­வந்­தது. இதை வெளி­யிட்­ட­வர் சி.கே.மகு­தூம் சாஹிப். இதை­ய­டுத்து 1876ல் 'தங்கை நேச­னும்', 1877ஆம் ஆண்டு 'சிங்கை நேச­னும்' வெளி­யி­டப்­பட்­டன.

பெரும்­பா­லும் தமிழ் முஸ்­லிம்­கள், ஜாவி பெர­னாக்­கான் சமூ­கங்­க­ளைச் சேர்ந்­த­வர்­கள் செய்­தித்­தாள்­க­ளை­யும், அச்சு பிர­சு­ரங்­க­ளை­யும் வெளி­யிட்டு வந்­தனர்.

இந்­திய அர­சி­யல், சமூ­கச் சீர்­தி­ருத்­தம், உள்­ளூர் நடப்பு விவ­கா­ரங்­கள் போன்­றவை தொடர்­பான செய்­தி­களை வழங்­கி­ய­தோடு, முக்­கிய நிகழ்­வு­கள் குறித்த கருத்­து­க­ளை­யும் பத்­தி­ரி­கை­யா­ளர்­கள் பதி­விட்­டுள்­ள­னர்.

ஏறக்­கு­றைய நூறாண்­டு­க­ளுக்கு முன்­னர் 1922ஆம் ஆண்டு அச்­சி­டப்­பட்ட 'தமி­ழ­கம்' எனும் செய்­தித்­தாள் இங்­குள்­ள­வர்­க­ளி­டையே மொழி உணர்­வைத் தட்டி எழுப்­பி­யது. 'தமிழ் நேசன்', 'முன்­னேற்­றம்', 'சீர்­தி­ருத்­தம்' போன்ற செய்­தித்­தாள்­கள் தமிழ்ச் சமூ­கத்­தி­னரிடையே சீர்­தி­ருத்த எண்­ணங்­க­ளைத் தூண்­டி­ய­தோடு, அர­சி­யல் கட்­டு­ரை­க­ளை­யும் வெளி­யிட்­டன.

தொடர்ந்து, 1930களில் தமிழ் அச்­சுக் கலா­சா­ரம் சிங்­கப்­பூ­ரில் மறு­ம­லர்ச்சி காணத் தொடங்­கி­யது. 1935ஆம் ஆண்டில் தமிழ் சீர்­தி­ருத்­தச் சங்­கம் திரு கோ. சாரங்­க­பாணியை ஆசி­ரி­ய­ரா­கக் கொண்டு தொடங்­கிய 'தமிழ் முரசு' இன்று வரை சிங்­கப்­பூ­ரில் செய்­திப் பணி­யாற்றி வரு­கிறது.

சிங்­கப்­பூர் இந்­திய சமூ­கத்­தின் பண்­பாட்டு அடை­யா­ளத்தை உரு­வாக்­கு­வ­தில் செய்­தித்­தாள்­கள் முக்­கி­யப் பங்­காற்­றின. தமி­ழர்­களை ஒன்­றி­ணைக்­கும் கரு­வி­க­ளாக அக்­கா­லச் செய்­தித்­தாள்­கள் இருந்­தன. பொது அறிவை வளர்த்­த­தோடு, பகுத்­த­றி­வை­யும் அவை வளர்த்­தன.

சிங்­கப்­பூ­ரில் அந்­தக் காலத்­தில் வெளி­வந்த தமிழ் சஞ்­சி­கை­களும் நாளி­தழ்­களும் இந்­திய மர­பு­டைமை நிலை­யத்­தில் காட்­சிக்கு வைக்­கப்­பட்­டுள்­ளன.

இவற்­றைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள விரும்­பு­வோர், நிலை­யம் ஏற்­பாடு செய்­யும் சுற்­று­லா­வில் கலந்­து­கொள்­ள­லாம்.

ஒவ்­வொரு மாத­மும் முதல் சனிக்­கி­ழ­மை­யில் தமி­ழில் நடை­பெ­றும் இச்­சுற்­றுலா பற்­றிய மேல் விவ­ரங்­க­ளுக்கு https://www.indianheritage.gov.sg என்ற இணை­யத்­தள முக­வ­ரியை நாட­லாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!