தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஈகை நெறி மறவாத நோன்புப் பெருநாள்

2 mins read
fbb7c455-ea0a-4a38-afab-212288881a7e
சிண்டாவின் தலைமை நிர்வாக அதிகாரி திரு அன்பரசு ராஜேந்திரன், சிங்கப்பூர் கடையநல்லூர் முஸ்லிம் லீக்கின் ஜலாலுதீன் பீர் முகம்மது ஆகியோர் வசதி குறைந்த குடியிருப்பாளருக்கு அன்பளிப்புப் பையை விநியோகித்தனர். படம்: தமிழ் முரசு -

ஹர்­ஷிதா பாலாஜி

நோன்புப் பெரு­நாளை முன்­னிட்டு சிண்டா அதன் 'செலப்­ரேட்' பண்­டிகை அன்­ப­ளிப்புப் பைகளை நேற்று விநியோகித்தது.

தீவெங்கும் ஏறத்தாழ 400 வசதி குறைந்த குடும்­பங்­க­ளுக்கு மற்ற சில அமைப்­பு­க­ளின் உத­வி­யோடு அன்­ப­ளிப்புப் பைக­ளை­யும் $120 பெறுமானமுள்ள 'என்­டியுசி'

பற்­றுச்­சீட்­டு­க­ளை­யும் சிண்டா வழங்­கி­யது.

அரிசி போன்ற அத்­தி­யா­வ­சியப் பொருள்­க­ளு­டன் பண்­டி­கை­க்கால பல­கா­ரங்­களும் அன்­ப­ளிப்புப் பைகளில் இருந்­தன.

"ஒரு­வர் சிரமத்தில் இருக்­கும்­போது அவரை ஆத­ரிக்க இந்­திய சமூ­க­மும் சிண்டா போன்ற சமூக அமைப்­பு­களும் இருக்­கின்­றன என்ற நம்­பிக்­கையை வளர்ப்­பதே இது போன்ற அறப்பணிகளின் முக்­கிய நோக்­க­மா­கும்.

"அத்­து­டன், உதவி கேட்டு முன்­வர மேலும் பலர் ஊக்­கு­விக்­கப்

­ப­டு­வார்­கள்," என்­றார் சிண்­டா­வின் தலைமை நிர்வாக அதி­கா­ரி­யான திரு அன்­ப­ரசு ராஜேந்­தி­ரன்.

கடந்த 21 ஆண்­டு­க­ளாக நடை­பெற்று வரும் இந்த அறப்­பணி மூலம் தொடர்ந்து பய­ன­டை­யும் ஒரு­வ­ரான திரு பதார்த்­தீன் அப்­துல் ரஹீம் இந்த ஆண்­டி­லும்

அன்­ப­ளிப்­புப் பைக­ளைப் பெற்­றுக்­கொண்­டார்.

நோன்புப் பெரு­நாளை முன்­னிட்டு இது­போன்ற ஆத­ரவு கிடைப்­பது அவ­ருக்­குப் பேரு­த­வி­யாக இருக்­கிறது என்­றும் எவ்­வித தயக்­க­மும் இல்­லா­மல் அவ­ருக்கு சிண்டா ஒவ்­வோர் ஆண்­டும் உதவி செய்து வரு­கிறது என்­றும் அவர் கூறி­னார்.

"கொவிட்-19 கிரு­மித்­தொற்று நெருக்­க­டி­நி­லைக்­குப் பிறகு பல­ருக்கு உதவி தேவைப்­ப­டு­கிறது, ஆனால் அவர்­கள் முன்­வந்து உதவி கேட்க தயங்­கு­கி­றார்­கள்.

"சிண்­டா­வின் உத­வித் திட்­டம் மூலம் வசதி குறைந்­த­வர்­க­ளுக்கு உதவ வாய்ப்பு கிடைத்­தி­ருப்­பது எனக்கு மகிழ்ச்­சி­யைத் தரு­கிறது" என்று தொண்­டூ­ழி­ய­ரான திரு சீனி ஜஹாங்­கிர் கனி கூறி­னார்.

இந்த அறப்­ப­ணி­யில் சிண்­டா­வு­டன் சிங்­கப்­பூர் கடை­ய­நல்­லூர் முஸ்­லிம் லீக், ஜாலான் புசார் தொண்­டூ­ழி­யர் மையம், இந்­திய முஸ்­லிம் பேரவை, இந்து இளை­யர் அணி, ஸ்ரீ நாரா­யண மிஷன், காத்­தோங் சத்ய சாய்பாபா நிலை­யம், இந்­திய மக­ளிர் சங்­கம் ஆகிய அமைப்­பு­கள் பங்­கேற்­றன.

"சிண்­டா­வு­டன் சேர்ந்து நாங்­கள் இந்த அறப்­ப­ணி­யில் ஈடு

படு­வ­தால் எங்­க­ளால் மேலும் சிறப்­பான முறை­யில் வசதி குறைந்­த­வர்­க­ளுக்கு உதவ முடி­கிறது.

"மேலும், பல­ரும் எங்­கள் அமைப்பை நம்பி முன்­வந்து தங்­கள் பிரச்­சினை­க­ளைப் பகிர்ந்­து­கொண்டு உதவி கேட்­ப­தால் நாங்­கள் சிண்­டா­வுக்­கும் பல வசதி குறைந்த குடும்­பங்­க­ளுக்­கும் இடையே ஒரு பால­மாக அமை

கிறோம்" என்­றார் சிங்­கப்­பூர் கடை­ய­நல்­லூர் முஸ்­லிம் லீக்­கின் தலை­வர் திரு ராஜா முஹம்­மது.