ஏறத்தாழ 22 ஆண்டுகளுக்கு முன்பு சிட்டிகார்ப்பும் டிராவலர்ஸ் குழுமமும் இணைந்து சிட்டி குழுமமானது. அப்போது அதற்குள்
அடியெடுத்து வைத்தார் மணி கே. என்று அழைக்கப்படும் திரு மணி கனகசபாபதி.
அக்காலகட்டத்தில் உலகின் ஆகப் பெரிய நிதிச் சேவை நிறுவனமாக சிட்டி குழுமம் திகழ்ந்தது.
"சிட்டி குழுமம் நிறுவப்பட்டபோது பல சவால்களைச் சந்தித்தோம். எங்களுக்கென ஓர் அடையாளத்தை ஏற்படுத்திக்கொள்ளச் சிரமப்பட்டோம்," என்று திரு மணி பகிர்ந்துகொண்டார்.
சிட்டி குழுமத்தின் உருமாற்றம் ஒருபுறம் இருக்க, திரு மணியும் தொழில் ரீதியாகப் புதிய அத்தியாயத்தைத் தொடங்கினார்.
கிட்டத்தட்ட பத்து ஆண்டு
களாக சந்தைப்படுத்துதல் மற்றும் தொடர்புத் துறையில் பணிபுரிந்த பிறகு முதல்முறையாக அவர்
வங்கித் துறையில் இணைந்தார்.
"'அக்காலகட்டத்தில் சிங்கப்பூர் அதன் நிதிச் சேவைத் துறையை தாராளமயமாக்கிக்கொண்டிருந்தது. இத்துறையில் சேர்ந்தால் ஒளிமயமான எதிர்காலம் அமையும் என்பதை நான் உணர்ந்தேன். புதிய வாய்ப்புகள் கிடைக்கும் எனப்
புரிந்துகொண்டேன். எனவே, சிட்டி குழுமத்தில் இணைய விண்ணப்பம் செய்தேன். அதிர்ஷ்டவசமாக எனக்கு வேலை கிடைத்தது," என்றார் திரு மணி.
சிட்டி குழுமத்தின் மக்கள் தொடர்புப் பிரிவின் தலைவராகப் பொறுப்பேற்ற திரு மணி, 2003ஆம் ஆண்டில் தனியார் வங்கிப்
பிரிவுக்கு மாறினார். எதிர்காலத்தில் செல்வ மேலாண்மைப் பிரிவில் பல நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் என்பது அவரது கணிப்பாக இருந்தது. அவர் எடுத்த முடிவு அவருக்குக் கைமேல் பலன் அளித்தது.
இன்று அவர் சிட்டி குழுமத்தின் உலகளாவிய வாடிக்கையாளர் சேவைப் பிரிவின் தலைவராகப் பதவி வகிக்கிறார்.
உயர்மட்ட வாடிக்கையாளர்
களுக்கு இப்பிரிவு சேவை வழங்கு கிறது. இப்பிரிவு ஒவ்வோர் ஆண்டும் ஏறத்தாழ 200 மில்லியன்
அமெரிக்க டாலர் ஈட்டுகிறது.
"95 நாடுகளில் இயங்கும் உலகளாவிய அமைப்பில் பணிபுரியும்போது பங்காளித்துவத்தின்
முக்கியத்துவத்தைப் பற்றி விரைவில் கற்றுக்கொள்ளலாம்.
"பங்காளித்துவத்துக்கும் ஒத்துழைப்புக்கும் சிட்டி குழுமம் மிகுந்த முக்கியத்துவத்தைக் கொடுக்கிறது," என்று திரு மணி தெரிவித்தார். சிங்கப்பூரில் சிட்டி குழுமம் தனது சேவைகளைத் தொடங்கி இவ்வாண்டுடன் 120 ஆண்டுகள் ஆகின்றன. இந்நிலையில், ஆசியாவில் மேலும் 2,300 செல்வ மேலாண்மைப் பிரிவு ஊழியர்களை வேலையில் அமர்த்த அது திட்டமிட்டுள்ளது.
"சிட்டி குழுமத்திலேயே தொடர்ந்து பணிபுரிந்து ஓய்வு
பெறுவேன் என்று நினைக்கிறேன். சிட்டி குழுமத்தில் நான் இருந்த இத்தனை நாள்கள் மிகவும்
சுவாரசியமானவை. சவால்களைக் கண்டு சிட்டி குழுமத்தின் ஊழியர்கள் அஞ்சுவதில்லை. இதுவே என்னை மிகவும் கவர்ந்த அம்சமாகும்," என்றார் திரு மணி.
செய்தி: வெங்கா சுப்பிரமணியம்

