தமிழர்களின் புத்தாக்கத்தை உணர்த்திய 'அக்னி 2022'

தமிழர்களின் புத்தாக்கத்தை உணர்த்திய 'அக்னி 2022'

2 mins read

ஆ. விஷ்ணு வர்­தினி

நேற்று, இன்று, நாளை எனும் கருப்பொருளுடன் நடைபெற்ற 'அக்னி 2022' நிகழ்ச்சியில் பங்கேற்ற மாண­வர்­கள்,

தமி­ழர் வாழ்­வில் நேற்று இருந்த, இனி இருக்­கக்­கூ­டிய புத்­தாக்­கத்தை நாட­க­மா­கப் படைத்­த­னர்.

ஆண்­டர்­சன் சிராங்­கூன் தொடக்­கக்­கல்­லூ­ரி­யின் தமிழ் மொழி விருப்­பப்­பா­டத்­திட்ட மாண­வர்­களும் தமிழ்­மொழி மன்ற மாண­வர்­களும் நட­னம், இசை, நாட­கம் கொண்டு பார்­வை­யா­ளர்­க­ளைச் சிரிக்­க­வும் சிந்­திக்­க­வும் வைத்­த­னர். நிகழ்ச்­சி­யின் ஓர் அங்­க­மாக சங்க கால பாண்­டிய மன்­ன­ரா­க­வும் மகா­கவி பார­தி­யா­க­வும் மாண­வர்­கள் வேட­மிட்டு பழங்­கா­லத்­தி­லும் புத்­தாக்­கம் இருந்­தது என்­பதை உணர்த்­தி­னர்.

சோழர்­க­ளின் கட்­ட­டக்­கலை, கல்­வெட்டு உரு­வாக்­கும் முறை முத­லி­ய­வற்றை கலை­ந­யத்­தோடு விவ­ரித்­த­னர். தமி­ழர் பண்­பாட்­டுக் கூறு­க­ளாக இருந்த ஆரோக்­கிய உணவு முறை­யி­லும் உள்ள புத்தாக்கம் பார்­வை­யா­ளர்­க­ளுக்கு எடுத்­து­ரைக்­கப்­பட்­டது.

தமிழ்­மொ­ழி­யின் அருமை பெரு­மை­க­ளைப் பற்றி பாடி­யும் பேசி­யும் நவீன கலா­சா­ரக் கூறு­க­ளு­டன் கதா­கா­லட்­சேப முறை­யி­லும் மாண­வர்­கள் நிகழ்ச்­சி­யைப் படைத்­த­னர்.

அக்னி 2022ல் மேடை நாட­கம் முத்­தாய்ப்­பாக அமைந்­தது. புத்­தாக்க முறை­யில் இளை­யர்

களைப் படைக்க ஊக்­கு­விக்­கும் நோக்­கில் நட­னப் போட்­டி­யும் குறும்­பட போட்­டி­யும் இடம்­பெற்­றன.

நடன இயக்­குநர் திரு­மதி பார்­வதி, திரு­மதி ராகினி தேவி கணே­சன், குமாரி கல்­பனா ஆகி­யோர் நடு­வர்­க­ளாக இருந்து மதிப்­பிட்­ட­தில் தேசிய தொடக்­கக்­கல்­லூரி, மில்­லெ­னியா கல்­விக்­க­ழ­கம், ஜூரோங் பைனி­யர் தொடக்­கக்­கல்­லூரியின் நட­னக்­கு­ழுக்­கள் முறையே முதல் மூன்று வெற்­றி­யா­ளர்­க­ளாக அறி­விக்­கப்­பட்­ட­ன.

தமி­ழை­யும் அத­னோடு இணைந்த வாழ்­வி­ய­லை­யும் மைய­மா­கக் கொண்டு குறும்­ப­டம் படைத்த மூன்று வெற்­றி பெற்ற அணி­க­ளின் குறும்­ப­டங்­களும் சிறப்­பங்­க­மாக நிகழ்­வில் இடம்­பெற்­றன. உள்­ளூர் திரைப்­பட இயக்­கு­நர் திரு சலீம் ஹாடி, முன்­னாள் மாண­வர்­கள் திரு யோகேஷ், குமாரி மரியா ஆகி­யோ­ரின் மதிப்­பீட்­டில், ஈசூன் இன்­னோவா தொடக்­கக்­கல்­லூரி, தேசிய தொடக்­கக்­கல்­லூரி, தெம்­ப­னிஸ் மெரி­டி­யன் தொடக்­கக்­கல்­லூரி, ஆகிய அணி­கள் முறையே முதல் மூன்று இடங்­க­ளைப் பிடித்­தன.