இந்திய கலாசாரத்தில் தலைமுறை தலைமுறையாக ஒரு பெண் எத்தனை குழந்தைகளை ஈன்றெடுக்கிறாள் என்பதைப் பொறுத்து அவளுக்கு அதற்கு ஏற்றவாறு மதிப்பும் மரியாதையும் தரப்படுகிறது.
கருத்தரிக்க முடியாமல் சிரமப்படும் இந்தியப் பெண்களைப் பற்றி அதிகம் பேசப்படுவதில்லை.
இந்நிலையில் கருவுறாமையால் பாதிக்கப்படும் இரண்டு இந்தியப் பெண்களைப் பற்றி திருவாட்டி மாலா மகேஷ் (படம்) கதை நூல் ஒன்றைப் புனைந்துள்ளார்.
'பத்மா' என்ற தலைப்பு கொண்ட இந்த நூல் அமேசான் இணையத் தளம் மூலம் நாளை வெளியிடப்
படுகிறது. நூலில் இரண்டு கதைகள் இடம்பெறுகின்றன.
அவற்றில் ஒன்று 1900களில் கேரளாவில் வாழும் 16 வயது அழகு சீமாட்டி பத்மாவைப் பற்றி விவரிக்கிறது.
இன்னொரு கதை இக்காலக்கட்டத்தில் மும்பையில் விளம்பர நிர்வாகியாகப் பணிபுரியும் நைனாவைப் பற்றியது.
திருமணமாகியும் இருவருக்கும் மகப்பேறு இல்லாத சூழ்நிலை. இதனால் அவர்களுக்கு ஏற்படும் சவால்கள், மனவேதனைகள் பற்றி 'பத்மா' கதைநூல் எடுத்துரைக்கிறது. மின்னூல் வடிவில் வாங்கினால் இதன் விலை $7.21. புத்தக வடிவில் வாங்கினால் இதன் விலை $23.99.

