சிங்கப்பூர் வான்வெளியின் கவசமாக இருக்கும் பவானி

சிங்கப்பூர் வான்வெளியின் கவசமாக இருக்கும் பவானி

2 mins read
2ab46439-6acb-46a4-bb11-98c4e2cc1592
ராணுவ நிபுணர் லட்சுமணன் பவானி. படம்: சிங்கப்பூர் ஆயுதப் படை -

கி. ஜனார்த்­த­னன்

ராணு­வத்­தில் பெண்­கள் ஆண்

களுக்கு எந்த விதத்­தி­லும் சளைத்­த­வர்­கள் அல்ல. நேர்­ம­றை­யான எண்­ணங்­களே வெற்­றி­யின் இர­க­சி­யம் என்­கி­றார் சிங்­கப்­பூர் ஆகா­யப் படை­யில் ராணுவ நிபு­ண­ரா­கப் பணி­யாற்­றும் லட்­சு­ம­ணன் பவானி, 49.

சிங்­கப்­பூ­ரின் வான்­வெ­ளியை உற்றுக் கண்­கா­ணிக்­கும் படை­களில் ஒன்­றான 'ஸ்கு­வாட்­ரன் 200'ல் திரு­மதி பவானி பணி­யாற்று­ கி­றார். 'ஜிசிஇ' சாதா­ரண நிலை தேர்வை முடித்து 1989ஆம் ஆண்­டில் சிங்­கப்­பூர் ஆயு­தப் படை­யில் சேர்ந்த பவானி, 'எம்இ3' தர­நி­லைக்கு உயர்ந்­துள்­ளார். 24 மணி நேர­மும் செயல்­படும் ஒரு பிரி­வைச் சேர்ந்­த­வர்­க­ளின் பாது­காப்பு, பயிற்சி மற்­றும் நல­னைக் கண்­கா­ணித்து வரு­கி­றார். சிங்­கப்­பூ­ரில் நடந்த வட­கொ­ரிய-அமெ­ரிக்க உச்­ச­நிலை சந்­திப்­பும் ஆண்­டு­தோ­றும் நிக­ழும் தேசிய தின அணி­வ­குப்­பு­களும் இவ­ருக்கு மறக்க முடி­யாத தரு­ணங்­க­ளைத் தந்­துள்­ளன.

தமது வேலைக்­குக் கவ­னம் மிக அதிக அள­வில் தேவைப்­பட்­டா­லும் அத­னைப் பதற்­ற­மில்­லா­மல் நிதா­னத்­து­டன் தமது குழு­வி­ன­ரு­டன் அவர் செய்து வரு­கி­றார். 2001ஆம் ஆண்டு நடந்த செப்­டம்­பர் 11 தாக்­கு­தல் முதல் உக்­ரேன் மீதான தற்­போ­தைய ரஷ்ய படை­யெ­டுப்பு வரை, உல­கில் நிக­ழும் ஒவ்­வொரு பயங்­க­ர­வா­தத் தாக்­கு­தல் அல்­லது பூச­லி­லி­ருந்து தாமும் தமது குழு­வி­ன­ரும் கற்­றுக்­கொள்­வ­தா­கக் கூறி­னார்.

பெண்­க­ளுக்­குத் தரப்­படும் பயிற்சி ஆண்­க­ளுக்கு எந்த விதத்­தி­லும் மாறு­பட்­ட­தல்ல என்­றார் திரு­மதி பவானி. சிங்­கப்­பூர் ஆகா­யப் படை­யில் பாலி­ன பேதம் இல்லை என்று அவர் கூறி­னார்.

எந்த வேலை­யாக இருந்­தா­லும் கொடுக்­கப்­பட்ட பணி­யைச் சிறப்­பா­கச் செய்ய முடிந்­தால் பிறர் கூறு­வ­தைப் பற்றி அதி­கம் கண்டு கொள்ள வேண்­டிய அவ­சி­ய­மில்லை என்­பது திரு­மதி பவா­னி­யின் கருத்து.

"என்­னைப் பொறுத்­த­வ­ரை­யில் நான் ஆயு­தப் படை­யில் மதிப்­பு­மிக்­க­வ­ரா­கத் திகழ்­கி­றேன்," என்­றார் 2019ல் செயல்­தி­ற­னுக்­கான தேசிய தின விரு­தைப் பெற்ற திரு­வாட்டி பவானி. அவ­ரது கண­வ­ரும்

ஆகா­யப் படை­யில் ஒரு நிபு­ண­ரா­கப் பணி­யாற்­று­கி­றார் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

வேலை கார­ண­மாக குடும்ப நிகழ்­வு­களில் கலந்­து­கொள்ள முடி­யாத நிலை ஏற்­பட்­டா­லும் குடும்ப உறுப்­பி­னர்­கள் புரிந்­து­ணர்­வு­டன் நடந்­து­கொள்­வ­தாக திருவாட்டி பவானி தெ­ரி­வித்­தார்.