இன, சமய பேதமின்றி உதவியோரை வாழ்த்தும் உள்ளம்

இன, சமய பேதமின்றி உதவியோரை வாழ்த்தும் உள்ளம்

2 mins read
4924dfca-a868-436a-a685-68422859a4ff
தொண்டூழியர் பூனம் தாபரிடமிருந்து உணவுப் பொட்டலங்களைப் பெறும் திரு அப்துல் காதர் (வலது). படம்: தமிழ் முரசு -

யானைக்­கால் நோயால் கடந்த இரு­பது ஆண்­டு­க­ளாக அவ­தி­யு­றும் சடை­யன் கரா அப்­துல் காதர், 85, சமூ­கத் தொண்­டர்­கள் தரும் ஆத­ரவு, தமக்கு உந்­து­ சக்­தி­யாக இருந்து துணிச்­ச­லு­டன் வாழ ஊக்­கு­விப்­ப­தா­கக் கூறி­னார்.

சை சீ சாலை­யில் உள்ள ஓர் அறை வீட்­டில் தனி­யாக வசிக்­கும் திரு காதர், முன்­ன­தாக மளி­கைக் கடை வைத்­தி­ருந்­தார்.

இந்­தி­யா­வில் வசிக்­கும் தமது மனை­விக்­கும் எட்டு பிள்ளை

களுக்­கும் பணம் அனுப்பி ஆத­ரித்­து­வந்த அவரை முது­மைப் பரு­வத்­தில் பரா­ம­ரிக்க யாரும் இல்லை.

சமு­தாய, குடும்ப மேம்­பாட்டு அமைச்­சின் பொது உத­வித் திட்­டத்­தின் மூல­மாக மாதத்­திற்கு $600 பெறும் திரு காதர், பெரும்­பா­லும் சாப்­பி­டு­வது ரொட்டி, ஓட்ஸ் அல்­லது சில நேரங்­களில் அவ­ருக்கு விநி­யோ­கம் செய்­யப்­படும் சமைக்­கப்­பட்ட உணவு.

புனித ரம­லான் மாதத்­திற்­காக இந்­திய முஸ்­லிம்­க­ளின் நிபு­ணத்­து­வத் திறன்­களை வளர்க்க முற்­படும் இம்­பு­ரோஃப் அமைப்பு ஏற்­பாடு செய்­துள்ள 'ரம­லான் டியன்ஸ்' என்ற உணவு விநி­யோ­கத் திட்­டம் மூன்­றா­வது ஆண்­டாக ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது.

22 ஏப்­ரல் முதல் நாளை வரை நீடிக்­கும் இந்த விநி­யோ­கத் திட்­டத்­தில் 15 குடும்­பங்­க­ளுக்கு மொத்­தம் 539 உண­வுப் பொட்­ட­லங்­கள் வழங்­கப்­படும்.

திரு காத­ருக்கு சமைத்த உணவு எப்­போ­தும் கிடைப்­ப­தில்லை. சில நேரங்­களில் மிக­வும் பசித்­தா­லும் அத­னைப் பொறுத்­துக்­கொண்டு போவது தமக்கு வழக்கமாகி­விட்­ட­தாக தமிழ் முர­சி­டம் அவர் பகிர்ந்­து­கொண்­டார்.

ஆயி­னும், தற்போது

தொண்­டூழி­ய­மும் உத­வும் மனப்­பான்­மை­யும் பெரு­கி­விட்­ட­தைக் காணும்­போது பெரி­தும் மகிழ்­வ­தாக திரு காதர் கூறி­னார்.

"நான் சிறு வய­தாக இருந்த கால­கட்­டத்­தில் இருந்­தோ­ரை­விட இப்­போ­துள்ள இளை­யர்­க­ளி­டையே உத­வும் மனப்­பான்­மையை அதி­கம் காண்­கி­றேன்.

"இன, சமய பேத­மின்றி உதவி செய்­யும் அவர்­க­ளுக்கு என் மன­மார்ந்த பிரார்த்­த­னை­கள் என்­றென்­றும் இருக்­கும்," என்று அவர் மனம் நெகிழ்ந்து கூறி­னார்.

திரு காத­ரின் வாழ்த்து மொழி

தமக்கு மன­நிம்­ம­தி­யை­யும் மகிழ்ச்­சி­யை­யும் அளிப்­ப­தாக அவ­ரி­டம் உணவை நேர­டி­யாக வழங்­கிய தொண்­டூ­ழி­ய­ரான தொடக்­கப்­பள்ளி ஆசி­ரி­யர் பூனம் தாபர், 58 மன­நி­றை­வு­டன் தெரி­வித்­தார்.

இஸ்­லா­மிய சம­யத்­தின் முக்­கிய போத­னை­களில் பிர­தி­ப­லன் எதிர்­பா­ரா­மல் பிற­ருக்கு உத­வு­வ­தும் ஒன்று.

எனவே, தம்­மால் முடிந்­த­வ­ரைத் தொடர்ந்து உதவி தேவைப்­ப­டு­வோ­ருக்கு உணவு வழங்கி ஆத­ர­வுக்

கரம் நீட்­டப்­போ­வ­தாக இம்­புரோஃப் அமைப்புடன் இணைந்து இவ்­வாண்டு உணவு விநி­யோ­கத்­தில் முதன்­மு­றை­யாகப் பங்­கேற்ற 'நியூ­ரெ­சிக்கி' உண­வ­கத்­தின் உரி­மை­யா­ளர் திரு அப்­துல் கரீம், 46, தெரி­வித்­தார்.

செய்தி: கி. ஜனார்த்­த­னன்