கி. ஜனார்த்தனன்
பல்வேறு சமயங்களைச் சேர்ந்த பிரதிநிதிகளை வரவழைத்து 'ரோசஸ் ஆஃப் பீஸ்' என்ற அமைப்பு, நோன்பு துறப்பு விருந்தை நடத்தியது.
ராஃபிள்ஸ் டவுன் கிளப்பில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்த விருந்தில் அனைத்துலகத் தூதர்கள், சமூக அமைப்புகளின் தலைவர்கள் சுமார் 30 பேர் கலந்துகொண்டனர்.
சிங்கப்பூருக்கான அமெரிக்கத் தூதர் ஜோனதன் கேப்லன், சிங்கப்பூருக்கான மலேசியத் தூதர் அஸ்ஃபார் முகம்மது முஸாஃபர், சிங்கப்பூருக்கான இந்தோனீசியத் தூதர் சூர்யோ பிரதோமோ உள்ளிட்ட அனைத்துலகப் பிரமுகர்கள், இந்நாட்டின் தலைவர்களுடன் பழகி சமயம் சார்ந்த தகவல்களைப் பற்றி கலந்துரையாடினர்.
ஈராண்டுகளுக்குப் பிறகு அனைவரும் நேரடியாக ஒன்றுகூடி தங்களது நட்பைப் புதுப்பிக்கும் வாய்ப்பினைப் பெற்றுக்கொண்டனர். புதிய அறிமுகங்களின் மூலம் நல்லிணக்கத்தை வளர்க்கவும் இந்த விருந்து ஏற்பாடு செய்யப்பட்டதாக 'ரோசஸ் ஆஃப் பீஸ்' அமைப்பின் நிறுவனரும் தலைவருமான முகம்மது இர்ஷாத், 32, தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவருமே தங்களது கருத்துகளை வெளிப்படையாகப் பேச அழைக்கப்பட்டிருந்தனர்.
தற்காப்பு, மனிதவள மூத்த துணை அமைச்சர் ஸாக்கி
முகம்மது இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். இன நல்லிணத்துக்கான வலுவான அடித்தளத்தை நம் முன்னோர்கள் விட்டுவைத்துள்ளதாகவும் அதனைக் கொண்டு அமைதி யான நாட்டை உருவாக்கும் பொறுப்பு தற்போதைய சமுதாயத்திற்கு இருப்பதாகவும் அவர் கூறினார். இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சிங்கப்பூரின் முதல் பிரதமர் திரு லீ குவான் இயூவின் பிரதானச் செயலாளராகவும்
ஜிஐசியின் தலைவராகவும் இருந்த லிம் சியோங் வான், "கௌரவம் சிங்கப்பூருக்கு மிகவும் முக்கியம். சொன்ன சொல்லைக் கட்டிக்காப்பதிலும் மக்களின் மனிதத்
தன்மைக்கு மதிப்பு கொடுப்பதிலும் சிங்கப்பூர் பெருமைகொள்கிறது," என்று தெரிவித்தார்.
1950ல் சிங்கப்பூரில் இனக் கல
வரத்தைக் கண்கூடாகக் கண்ட சிங்கப்பூரின் முன்னாள் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரான திரு ஸைனுல் அபிதீன் ரஷித், சிங்கப்பூர் வெகுவாக முன்னேறிஉள்ளதைக் கண்டு அகமகிழ்வ
தாகக் கூறினார்.

