பல இனத்தவர் கொண்டாடிய சித்திரைத் திருநாள்

பல இனத்தவர் கொண்டாடிய சித்திரைத் திருநாள்

2 mins read
ef5327c2-bad7-493e-b54a-285a8301a548
குத்துவிளக்கை ஏற்றிவைத்து நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்த ஜூரோங் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஷான் ஹுவாங் (நடுவில்). படம்: ஜூரோங் ஸ்பிரிங் இந்திய நற்பணிச் செயற்குழு -

ஆ. விஷ்ணு வர்­தினி

சித்­திரைப் புத்­தாண்டை தங்­கள் சீன, மலாய் நண்­பர்­க­ளு­டன் ஜூரோங் ஸ்பி­ரிங் வட்­டா­ரத்­தைச் சேர்ந்த தமி­ழர்­கள் கொண்­டா­டி­னர்.

ஜூரோங் ஸ்பி­ரிங் இந்­திய நற்­ப­ணிச் செயற்­கு­ழு­வும் பல இன, பல சமய குழு­வும் இணைந்து நடத்­திய சித்­தி­ரைத் திரு­நாள் கொண்­டாட்­டம் கடந்த சனிக்­கி­ழமை மாலை நடை­பெற்­றது.

டமாரு குழு­வி­ன­ரின் பறை

இசை­யு­டன் தொடங்­கிய விழா­வில், புஷ்­பார்ப்­ப­ணம் நட­னக்

குழு­வின் தமி­ழர் பாரம்­ப­ரிய நட­னங்­களும் சிலம்­பம் சிங்­கப்­பூர் அமைப்­பின் சிலம்­பாட்­ட­மும் இடம்­பெற்­றன.

ஏறத்­தாழ 150 பேர் நிகழ்ச்­சியை நேரில் கண்டு களித்­த­னர்.

ஜூரோங் குழுத் தொகுதி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ஷான் ஹுவாங் சிறப்பு விருந்­தி­ன­ரா­கக் கலந்­து­கொண்­டார்.

தமிழ் இசை­யு­டன், சீன, மலாய் பாடல்­களும் பார்­வை­யா­ளர்­களை மகிழ்­வித்­தன. சீன, மலாய் படைப்­பா­ளர்­க­ளு­டன் பல இன பார்­வை­யா­ளர்­களும் விழா­வில் கலந்­து­கொண்­ட­தாகக் கூறி­னார் ஜூரோங் ஸ்பிரிங் இந்­திய நற்­ப­ணிச் செயற்­குழு உறுப்­பி­னர் திரு ஷியாம் கண்­ணன்.

"சிலர் தீபா­வ­ளி­யைத்­தான் தமி­ழர்­க­ளின் புத்­தாண்­டாக நினைக்­கின்­ற­னர். அவ்­வ­கை­யில் விழிப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்­தி­யது இந்­நி­கழ்வு. இவ்­வி­ழா­வில் பல இனத்­த­வர்­களும் கலந்­து­கொண்­ட­னர். நிகழ்ச்­சி­யைப் பார்த்து ரசித்­த­தாக அவர்­கள் எங்­க­ளி­டம் தெரி­வித்­த­னர். அது எங்­க­ளுக்கு மன­நி­றை­வைத் தந்­தது," என்­றார் அவர். பஞ்­சா­பிய பாரம்­ப­ரிய

நட­னமான பாங்க்ராவோடு நிகழ்ச்சி முடிவுற்றது.

பார்­வை­யா­ளர்­க­ளை­யும் மேடை­யில் ஆட வைத்­து­விட்­ட­னர் ஜோஷிலி பாங்க்ரா நட­னக்­கு­ழு­வின் நட­ன­ம­ணி­கள்.

நிகழ்ச்­சி­யின் ஏற்­பாட்­டா­ளர்­கள் ­வ­சதி குறைந்த 15 மூத்­தோ­ருக்கு விழா­வில் கலந்­து­கொள்ள அழைப்பு விடுத்­திருந்தது குறிப்­பி­டத்­தக்­கது.

எண்­ணெய், அரிசி உட்­பட அத்­தி­யா­வ­சி­யப் பொருள்­கள் அடங்­கிய அன்­ப­ளிப்­புப் பைகள் அவர்­க­ளுக்கு வழங்­கப்­பட்­டன.

சித்­திரைப் புத்­தாண்டை முன்­னிட்டு சமுதாயத்திற்கு முடிந்த வகை­யில் உதவ ஏற்­பாட்­டா­ளர்­கள் முற்­பட்­ட­தைப் பற்றி திரு ஷியாம் பகிர்ந்­து­கொண்­டார்.