வெளிநாட்டு ஊழியர்களுக்காக நடத்தப்படும் இசை நிகழ்ச்சி

வெளிநாட்டு ஊழியர்களுக்காக நடத்தப்படும் இசை நிகழ்ச்சி

1 mins read

தொழி­லா­ளர் தினத்தை முன்­னிட்டு லிஷா இலக்­கிய மன்­றம், அபி­ராமி நகைக்­கடை மற்­றும் சென்னை டிரே­டிங் ஆத­ர­வு­டன் வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளுக்­காக இசை, நடன நிகழ்ச்சி ஒன்று அவர்­கள் தங்­கும் கோக்­ரேன் பொழு­து­போக்கு மையத்­தில் இன்று இரவு 7 மணிக்கு நடத்­தப்­ப­டு­கிறது.

நிகழ்ச்­சி­யில் மணி­மா­றன் குழு­வி­ன­ரின் நட­னம், லிஷா இலக்­கி­ய­மன்­றத்­தின் பாட­கர்­கள் பர­சு­கல்­யான், விக்­டர், நிர்­மலா, அயந்­திகா, லட்­சுமி சங்­க­ரன், அமர்த்­திகா சக்­ர­வர்த்தி ஆகி­யோர் இன்­னிசை மழை பொழிய இருக்­கி­றார்­கள்.

நிகழ்ச்­சியை கண்­ணன் சேஷாத்ரி மற்­றும் அனின் அன்­சாரி தொகுத்து வழங்க உள்­ள­னர். ஊழி­யர்­க­ளின் பங்­க­ளிப்பை அங்­கீ­க­ரித்து அவர்­க­ளது உழைப்­புக்கு நன்றி கூறும் வகை­யில் இந்த நிகழ்ச்­சிக்கு ஏற்­பாடு செய்­யப்­

பட்­டுள்­ளது.