தனயனைக் காக்கும் தாய்

திரு­மதி நாக­ஜோதி மாரி­முத்து கடந்த 24 ஆண்­டு­க­ளாக தனக்­கென வாழா­மல் மக­னுக்­கா­கவே வாழ்ந்­து­வ­ரு­கி­றார்.

மழ­லைச் சிரிப்­பும் வெள்­ளந்­திக் குண­மும் கொண்ட 27 வயது கிர­ணுக்கு பக்­க­ப­ல­மாக இருக்­கி­றார் இவர்.

இன்று 'எஸ்­ஐஏ-மைண்ட்ஸ்' வேலை­வாய்ப்பு மேம்­பாட்டு மையத்­தில் முழு நேரப் பயிற்சி அதி­காரி இவர். இதற்கு முக்­கி­யக் கார­ணம் குழந்­தை­யாக இருந்த கிர­ணுக்கு ஏற்­பட்ட திடீர்த் துய­ரம். 1998ஆம் ஆண்டு மூன்று வயது கிர­ணுக்கு திடீ­ரன்று வலிப்பு ஏற்­பட்­டது. நாள­டை­வில் ஒரே நாளில் முப்­பது முறை­கூட வலிப்பு ஏற்­பட்­ட­தால் கிர­ணு­டைய மூளை வளர்ச்சி பெரி­தும் பாதிக்­கப்­பட்­டது.

முத­லில் தமது மக­னின் நிலை­மையை ஏற்­றுக்­கொள்ள முடி­யா­மல் திண்­டா­டி­னா­லும் பின்­னர் அதி­லி­ருந்து மீண்டு கிர­ணுக்­குத் தாமே சில திறன்­களைக் கற்­றுக்­கொ­டுக்­கத் தொடங்­கி­னார் ஜோதி. சில அடிப்­ப­டை­யான வாழ்க்­கைத் திறன்­களை மக­னுக்­குப் புரி­யும்­வரை, நினை­வில் பதி­யும்­வரை கற்­றுக்­கொ­டுத்­தார் அன்னை.

கேலி­யும் கிண்­ட­லும் செய்த அனை­வ­ருக்­கும் தம் பைய­னா­லும் சாதா­ரண பிள்­ளை­க­ளைப் போல வாழ்­வில் வெற்­றி­பெற முடி­யும் என நிரூ­பிக்க விரும்பி மேன்­மே­லும் பல முயற்­சி­களில் ஈடு­பட்­டார்.

கிர­ணுக்கு 10 வய­தா­ன­போது லீ கொங் சியான் கார்­டன் பள்­ளி­யில் இடம் கிடைக்­கவே வங்­கி­யா­ளர் பணியை விட்­டு­விட்டு, மக­னின் முழு­நே­ரப் பரா­ம­ரிப்­பா­ளர் ஆனார். ஆசி­ரி­யர் ஒரு­வ­ரின் தூண்­டு­த­லில் பெற்­றோர் ஆத­ர­வுக் குழு­வில் சேர்ந்­தார் ஜோதி. பின்னர் பயிற்சி அதிகாரியாகப் பணியாற்றும் வாய்ப்பும் கிடைத்தது. 'மைண்ட்ஸ்' நிலை­யத்­தோடு மட்­டும் அவ­ரது சேவை நிறை­வ­டை­ய­வில்லை. விளை­யாட்­டு­களில் ஆர்­வம் கொண்ட கிர­ணுக்­கும் வேறு சில பிள்­ளை­க­ளுக்­கும் ஒவ்­வொரு வார­மும் பயிற்சி அளிக்­கி­றார்.

விளைவு? இரண்டு முறை சிங்­கப்­பூர் தேசிய விளை­யாட்டு சிறப்பு ஒலிம்­பிக்ஸ் போட்­டி­களில் 'போச்சே' எனப்­படும் பந்து விளை­யாட்­டில் தங்­கப் பதக்­கம் வென்­றார் கிரண்.

தம்­மைத் தட்­டிக்­க­ழித்த அனை­வருக்­கும் தம் திற­மையை நிரூ­பித்த இவ­ருக்கு இப்­போது புகைப்­ப­டம் எடுப்­ப­தி­லும் ஆர்­வம் ஏற்­பட்­டுள்­ளது. மக­னின் ஆசை­கள் அனைத்­தை­யும் பூர்த்தி செய்­வதே அன்­புத் தாயார் ஜோதி­யின் இலக்கு.

மகனை எப்­போ­துமே சிறு­பிள்ளை போல நடத்­தா­மல் உலக நிய­தி­க­ளைக் கற்­றுக்­கொ­டுத்து அவ்­வப்­போது வெளி இடங்­க­ளுக்கு கிர­ணைத் தனி­யாக அனுப்­புகிறார் ஜோதி. மகன் சொந்­தக் காலில் நிற்க இது உத­வும் என்­கி­றார் இந்தத் துணிச்சலான தாயார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!