சுய ஆற்றலை உணர்த்தும் நிச்சிரன் பௌத்தம்

சுய ஆற்றலை உணர்த்தும் நிச்சிரன் பௌத்தம்

2 mins read
8fcd9551-9003-4eec-8c6e-05674c44f510
நிச்சிரன் பௌத்தத்தின் 'டைமோக்கூ' மந்திர உச்சரிப்பில் நாள்தோறும் இருமுறை ஈடுபடுவது திரு பிரகாஷின் வழக்கம். படம்: பிரகாஷ் -

கிடங்கு ஒன்­றில் தர­நிலை மேலா­ள­ரா­கப் பணி­பு­ரி­யும் 53 வயது பிர­காஷ் ராம­கி­ருஷ்­ணன், ஜப்­பா­னில் தோற்­று­விக்­கப்­பட்ட நிச்­சி­ரன் பௌத்­தத்­தைப் பின்­பற்­று­கி­றார். உருவ வழி­பாடு இல்­லாத இந்த வகை, பௌத்­த­மதத்­தின் மற்ற பிரி­வு­க­ளி­லி­ருந்து வேறு­ப­டு­கிறது.

இந்­துக் குடும்­பத்­தில் பிறந்த இவ­ரின் பாட்டி பக்­க­வா­தத்­தால் பாதிக்­கப்­பட்டு உயி­ருக்­குப் போரா­டி­ய­போது நிச்­சி­ரன் பௌத்­தத்­தில் போதிக்­கப்­படும் 'டைமோக்கூ' மந்­தி­ரத்­தைத் தனது தாயார் திரும்­பத் திரும்­பச் சொன்­ன­தா­க­வும் அத­னைத் தொடர்ந்து பாட்டி குண­ம­டைந்­த­தா­க­வும் நினை­வு­கூர்ந்­தார்.

"அப்­போது எனக்கு 16 வயது. நான் விளை­யாட்­டுத்­த­ன­மாக இருந்­த­போ­தும் இந்­தச் சம்­ப­வம் என்­னில் ஒரு தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தி­யது," என்­றார் அவர்.

பிறகு தொடக்­கக்­கல்­லூ­ரி­யில் பயின்­ற­போது தனது பணப்­பை தொலைந்­த­தும் அதே மந்­தி­ரத்­தைச் சொன்­ன­தால் அது திரும்­பக் கிடைத்­த­தாக அவர் கூறி­னார்.

நிச்­சி­ரன் பௌத்­தத்­தில் தன்­னம்­பிக்கை பெரி­தும் வலி­யு­றுத்­தப்­ப­டு­வ­தால் அது தனக்­குப் பிடித்­துப்­போ­ன­தா­கக் கூறி­னர் பிர­காஷ்.

"என் வாழ்க்­கையை மாற்­றிக்­கொள்ள எனக்கு வெளியே உள்ள தெய்­வங்­க­ளையோ மனி­தர்­க­ளையோ சார்ந்­தி­ருக்க வேண்­டி­ய­தில்லை. எனது வாழ்க்கை நிலையை நான் உயர்த்­தும்­போது என் வருங்­கா­லம் மாறும் என்­பதே என் நம்­பிக்கை," என்­றார் அவர்.

வாழ்க்­கை­யில் முன்­செய்த வினை­க­ளால் ஏற்­படும் சவால்­களை எதிர்­கொண்டு அவற்றை நல்ல விளை­வு­களை உண்­டாக்­கப் பயன்­ப­டுத்­தும் முறையை 'நஞ்சை மருந்­தாக்­கு­வது' என்று பௌத்­தம் போதிப்­ப­தாக அவர் பகிர்ந்­து­கொண்­டார்.

அன்­றா­டம் இரண்டு ­முறை 'டைமோக்கூ' மந்­திர உச்­ச­ரிப்­பில் ஈடு­படும் இவர், பௌத்த நூல்­க­ளைப் படிப்­ப­து­டன் சிங்­கப்­பூர் சோக்கா கக்­காய் சங்­கத்­தின் நட­வ­டிக்­கை­க­ளி­லும் பங்­கு­கொள்­கி­றார்.

செய்தி: கி.ஜனார்த்­த­னன்