மேடைத் திறன்களை கற்க உதவும் '4ஜி' பயிலரங்கு

மேடைத் திறன்களை கற்க உதவும் '4ஜி' பயிலரங்கு

1 mins read

ஹர்ஷிதா பாலாஜி

சிங்­கப்­பூ­ரின் பிர­பல மூத்த நாட­கக் கலை­ஞர்­க­ளி­ட­மி­ருந்து பல்­வேறு திறன்­க­ளைக் கற்­றுக்­கொள்ள உத­வும் நாட­கப் பயி­ல­ரங்கை நடத்­த­வுள்­ளது அவான்ட் நாட­கக்­குழு.

பயி­ல­ரங்கு ஜூன் 18,19 ஆகிய தேதி­களில் ஸ்டாம்­ஃபர்ட் கலை நிலை­யத்­தில் காலை 11 மணி­யில் இருந்து மாலை நான்கு மணி­வரை நடை­பெ­றும். 13 வய­துக்கு மேற்­பட்­டோர் இதில் கலந்­து­கொள்­ள­லாம்.

சிங்­கப்­பூர் மேடை நாடக நடி­கர்­களை ஒன்­றி­ணைக்­கும் முழு நீள நகைச்­சுவை நாட­கம் '4ஜி'.

முதி­யோர் பரா­ம­ரிப்பு இல்­லத்­தில் வசிக்­கும் ஐந்து முதி­ய­வர்­களை இது மையப்­ப­டுத்­துகிறது. இந்த ஐவ­ரும் கொவிட்-19 கிரு­மித்­தொற்றை எப்­ப­டிப் புரிந்­து­கொள்­கி­றார்­கள் என்று இது சித்­திரிக்­க­வுள்­ளது.

புதிய கொவிட்-19 பாது­காப்பு முறை­கள், அவை தொடர்­பான விதி­மு­றை­க­ளைப் புரிந்­து­கொள்­ளும் முயற்­சி­யில் இந்த முதி­யோ­ரின் நகைச்­சு­வைச் செயல்­பா­டு­களை உள்­ளூர்க் கலை­ஞர்­கள் நம் கண்­முன் நிறுத்­து­வர் என்­கின்­ற­னர் ஏற்­பாட்­டா­ளர்­கள்.

நாட­கப் பயி­ல­ரங்கு பற்­றி­யும் '4ஜி' நாட­கத்­தைப் பற்­றி­யும் மேலும் தெரிந்­து­கொள்ள விரும்­பு­வோர் https://avanttheatre.com/workshops எனும் இணைய முக­வ­ரியை நாடும்­படி கேட்­டுக்­கொள்­ளப்­ப­டு­கி­றார்­கள்.