இளையர்க்கு வாழ்வியல் கற்றுத்தந்த கருத்தரங்கு

2 mins read
2b1bfc2a-9429-49dd-8c9b-b885ef751ad2
50க்கும் அதிகமான இளையர்கள் ஆர்வத்துடன் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். படம்: த. கவி -

கி. ஜனார்த்தனன்

இந்து அறக்­கட்­டளை வாரி­யத்­தின் இந்து இளை­யர் கட்­ட­மைப்பு இம்­மா­தம் 14ஆம் தேதி இளை­யர்­க­ளுக்­கான சிறப்பு ஒன்­று­கூ­டல் நிகழ்ச்­சிக்கு ஏற்­பாடு செய்­தி­ருந்­தது.

அறச் சிந்­த­னை­க­ளை­யும் வாழ்­வி­ய­லை­யும் இளை­யர்­க­ளுக்கு அறி­மு­கப்­ப­டுத்­து­வதே இதன் நோக்­கம்.

சிராங்­கூன் சாலை­யில் உள்ள 'பிஜிபி' மண்­ட­பத்­தில் நடை­பெற்ற நிகழ்ச்­சி­யில், 15 முதல் 35 வயது வரை­யி­லான 50க்கும் மேற்­பட்ட இளை­யர்­கள் பங்­கேற்­ற­னர்.

இந்து சம­யம், ஆயுர்­வே­தம் போன்­றவை குறித்த கருத்­த­ரங்­கு­கள், உரை­கள் ஆகி­ய­வற்­றின் மூலம் தக­வல்­களை அறிந்­து­கொள்­வது மட்­டு­மின்றி சந்­தே­கங்­க­ளைக் கேட்­டுத் தெளி­வு­பெ­ற­வும் இளை­யர்­களுக்கு வாய்ப்பு கிடைத்­தது.

பாரம்­ப­ரி­யத் தற்­காப்­புக் கலை­யான கள­ரிப்­ப­யிற்றை இளை­யர்க்­குக் கற்­றுத்­தந்­தார் 'களரி அகடமி'யின் ஜி. வேத­கிரி. 'வாழும் கலை' அமைப்­பின் ராஜ­ரத்­னம் சதா­சி­வம் தியான அங்­கத்தை வழி­ந­டத்­தி­னார்.

பங்­கேற்ற இளை­யர்­க­ளி­டம் ஆயுர்­வே­தக் குறிப்­பு­க­ளைப் பகிர்ந்து­கொண்­டார் 'யூனி­யன் யோகா ஆயுர்­வேதா சிங்­கப்­பூர்' அமைப்­பைச் சேர்ந்த திரு­வாட்டி பர்­னெல்லா ராயப்­பன்.

நிகழ்ச்­சி­யில் சிறப்பு விருந்­தி­ன­ரா­கக் கலந்­து­கொண்ட இந்து அறக்­கட்­டளை வாரி­யத்­தின் நிர்­வாக உறுப்­பி­ன­ரும் இந்­துக் கல்­விப் பிரி­வில் இந்து மதம் குறித்து கற்றுத் தருபவருமான திரு க. செங்­குட்­டு­வன், சைவ உணவு முறை, ஊழ்­வினை போன்­றவை தொடர்­பான கேள்­வி­க­ளுக்கு எளி­மை­யாக விளக்­க­ம­ளித்­தார்.

எது சரி எது தவறு என்­பதை பல்­வேறு கண்­ணோட்­டங்­கள் மூலம் விளக்கி இளை­யர்­கள் சுய­மாக முடி­வெ­டுக்க இந்­நி­கழ்ச்சி உத­வு­வ­தா­கக் கூறி­னார் இந்து இளை­யர் கட்­ட­மைப்­பின் தலை­வ­ரான 30 வயது கார்த்­திக் ராம­சாமி.

"கண்­டறிதல், விவா­தம், புதிய அனு­ப­வம் என இன்­றைய இளை­யர்­க­ளின் நாட்­டங்­களை மனத்­தில் கொண்டே இப்­ப­யி­ல­ரங்கு வடி­வ­மைக்­கப்­பட்­டது," என்று வாரி­யத்­தின் ஆய்­வுக்­கு­ழுத் தலை­வர் மது­பாலா பால­கி­ருஷ்­ணன் கூறி­னார்.

குழுக்­க­ளா­கப் பிரிக்­கப்­பட்ட இளை­யர்­களை வழி­ந­டத்­தியோரில் ஒரு­வ­ரான 29 வயது பவித்­திரா ஷர்­மு­கம், மன­நல விவ­கா­ரங்­களில் இந்து சமயத்­தின் வெவ்­வேறு பார்­வை­கள் குறித்து அவர்­க­ளுக்கு விளக்­கப்­பட்­ட­தா­கக் குறிப்­பிட்­டார்.

20 வயது தேசிய சேவை­யா­ள­ரான நவீன் குமார், இறை வழி­பாட்­டில் ஈடு­ப­டு­வ­தற்­கான வழி­முறை­களை இந்­நி­கழ்ச்­சி­யில் கற்­றுக்­கொண்­ட­தா­கக் கூறி­னார்.

சமய நடை­மு­றை­க­ளுக்­கான பின்­னணி தெரி­யா­மல் பெரி­ய­வர்­கள் சொன்­னதை அப்­ப­டியே பின்­பற்­றி­ய­தா­கக் கூறிய 22 வயது தாதிமை மாணவி ஷாலினி செல்­வ­ராஜு, சில சடங்­கு­கள் ஏன் செய்­யப்­ப­டு­கின்­றன என்று புரிந்­து­கொண்­ட­தாகவும் அத்துடன் மனத்தை அமை­திப்­ப­டுத்­தும் உத்­தி­க­ளைக் கற்­றுக்­கொண்­ட­தா­கக் கூறி­னார்.

ஐந்து வயது முதல் பதி­னைந்து வயது வரை­யி­லான பிள்­ளை­க­ளுக்கு 'புரோ­ஜெக்ட் பக்தி' திட்­டத்தை நடத்­து­வ­தால் அதற்கு மேற்­பட்ட வய­து­டைய இளை­யர்­க்­காக இம்­மு­யற்சி மேற்­கொள்­ளப்­பட்­ட­தாக ஏற்பாட்டாளர்கள் கூறினர்.