தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கணையாழி விருது பெற்ற தமிழாசிரியர் சி. சாமிக்கண்ணு

1 mins read
77085be2-5fed-47f1-b70d-da81c0d0b940
கணையாழி விருதை சிறப்பு விருந்தினரும் வளர்தமிழ் இயக்கத்தின் தலைவருமான திரு மனோகரனிடம் இருந்து பெறும் தமிழாசிரியர் சி. சாமிக்கண்ணு (வலமிருந்து மூன்றாவது). படம்: கவிமாலை -

கவி­மாலை ஆண்­டு­தோ­றும் வழங்­கும் கணை­யாழி விருது இவ்­வாண்டு சிங்­கப்­பூர் தமி­ழா­சி­ரி­யர் சங்­கத்­தின் முன்­னாள் தலை­வர் சி. சாமிக்­கண்­ணு­விற்கு வழங்­கப்­பட்­டுள்­ளது.

சிங்­கப்­பூ­ரில் தமிழ்­மொழி சிறந்­தி­ருக்க அவர் ஆற்­றிய பங்­க­ளிப்­பிற்­காக இம்­மா­தம் 1ஆம் தேதி 'சிவில் சர்­விஸ் கிளப்' அரங்­கில் நடை­பெற்ற தமிழ்­மொழி விழா­வின் நிறைவு நிகழ்ச்­சி­யான கவி­மாலை நிகழ்ச்­சி­யில் அவ­ருக்கு கணை­யாழி விருது வழங்கி கௌர­விக்­கப்­பட்­டது.

திரு சாமிக்­கண்ணு தமி­ழா­சி­ரி­யர் சங்­கத்­தின் தலை­வ­ராக இருந்­த­போது தமிழ்ச் சமூ­கத்­துக்­குப் பல்­வேறு வகை­யில் பங்­க­ளித்து உள்­ளார்.

தமிழ் மொழி வாரம் தொடங்­கப்­ப­டு­வ­தற்­கும் சிங்­கப்­பூ­ரில் தமி­ழில் பட்­டக்­கல்வி சாத்­தி­ய­மா­வ­தற்­கும் உந்­து­சக்­தி­யாக விளங்­கி­ய­வர்­களில் திரு சாமிக்­கண்­ணு­வும் ஒரு­வர். வளர்­த­மிழ் இயக்­கத்­தின் தொடக்க கால உறுப் பினர்களிலும் ஒருவராக இவர் இருந்தார். "மாறி­வ­ரும் மொழிச்­சூ­ழ­லுக்கு ஏற்ப நாம் இளைய தலை­மு­றை­யி­ன­ருக்­கான நவீ­ன­ம­ய­மான முயற்­சி­கள் குறித்து ஆலோ­சிக்க வேண்­டும்.

"தமி­ழில் சிறந்து செயல்­படும் மாண­வர்­க­ளுக்கு மட்­டு­மின்றி அனைத்­துத் தமிழ் மாண­வர்­க­ளுக்­கு­மான நிகழ்ச்­சி­க­ளைப் படைக்க முயற்சி செய்­ய­வேண்­டும்," என்று அவர் கேட்­டுக்­கொண்­டார்.