வாழும் வரலாறு கோ.சா.விற்கு கௌரவம்

சிங்­கப்­பூ­ரின் புகழ்­பெற்ற ஊட­க­வி­ய­லா­ளர்­கள் பட்­டி­ய­லில் தமிழ் முரசு நாளி­த­ழின் நிறு­வன ஆசி­ரி­யர் தமி­ழ­வேள் கோ. சாரங்­க­பாணி, முன்­னாள் தலைமை ஆசி­ரி­யர் வை. திரு­நா­வுக்­க­ரசு ஆகிய இரு­வ­ரும் சிறப்­பிக்­கப்­பட்­டுள்­ள­னர்.

சிங்­கப்­பூர் செய்­தி­யா­ளர் மன்­றத்­தின் 50ஆம் ஆண்டு செய்­தி­யா­ளர் விழா­வைக் கொண்­டா­டும் வகை­யில் சிங்­கப்­பூர் ஊட­கத்­துறையில் தடம் பதித்த 50 சாத­னை­யா­ளர்­களை அங்­கீ­க­ரிக்­கும் ‘ஹால் ஆஃப் ஃபேம்’ எனப்­படும் புகழ்­பெற்­ற­வர்­கள் பட்­டி­யல் நேற்று முன்­தி­னம் வெளி­யி­டப்­பட்­டது.

தமி­ழர் சீர்­தி­ருத்­தச் சங்­கம் 1935ஆம் ஆண்டு தமிழ் முரசு நாளி­த­ழைத் தொடங்­கி­யது. சங்­கத்­தின் தலை­வ­ராக இருந்த தமி­ழ­வேள் கோ. சாரங்­க­பாணி, 1936ஆம் ஆண்டு முதல் தமிழ் முர­சின் ஆசி­ரி­ய­ரா­கப் பொறுப்­பேற்று, பல சிர­மங்­க­ளை­யும் சவால்­க­ளை­யும் சமா­ளித்து, 1974ல் தமது இறு­தி­மூச்சு வரை­யில் தொடர்ந்து நடத்­தி­னார்.

மலே­சியா, சிங்­கப்­பூர் இரு­நாடு­களி­லும் தன்­னி­க­ரற்ற நாளி­த­ழா­கத் திகழ்ந்த தமிழ் முர­சின் மூலம் சமூ­கச் சீர்தி­ருத்­தங்­க­ளை­யும் முன்­னேற்­றங்­க­ளை­யும் முன்­னெ­டுத்­த­தால் இன்­ற­ள­வும் சிங்­கப்­பூ­ரின் தன்­னி­க­ரற்ற தமிழ் ஊட­க­வி­ய­லா­ள­ரா­கப் போற்­றப்­ப­டு­கி­றார் தமி­ழ­வேள் கோ. சாரங்­க­பாணி.

அவர் இந்­தி­யன் டெய்லி மெயில் ஆங்­கில நாளி­த­ழை­யும் நடத்­தினார்.

தமிழ் முரசு நாளிதழின் துணை­யா­சி­ரி­யர் பத­வி­யேற்று 1952ஆம் ஆண்டு தமது 26வது வய­தில் தமி­ழ­கத்­தி­லி­ருந்து சிங்­கப்­பூர் வந்த வை. திரு­நா­வுக்­க­ரசு, சிறந்த ஊட­க­வி­ய­லா­ள­ரா­கச் செயல்­பட்­ட­து­டன் மாண­வர் முரசு, எழுத்­தா­ளர் பேரவை உள்­ளிட்ட பல புதிய பகு­தி­களை அப்போதைய தமிழ் முர­சில் அறி­மு­கப்­ப­டுத்­தி­ய­வர். பின்­னர் கலா­சார அமைச்­சின் ‘தி மிரர்’ பத்­தி­ரிகை உள்­ளிட்ட பல பிர­சு­ரங் களின் ஆசி­ரி­ய­ராக இருந்­தவர்்.

அர­சாங்கச் சேவை­யில் ஓய்­வு­பெற்ற பின்­னர் தமிழ் முர­சின் தலைமை ஆசி­ரி­ய­ராக 1988இல் பொறுப்பு ஏற்­றார். 2000ஆம் ஆண்­டில் தமிழ் முர­சி­லி­ருந்து ஓய்வு பெறும் வரை­யில் தமிழ் முரசு நீடித்து நிலைத்­தி­ருக்க அவர் மேற்­கொண்ட பல்­வேறு முயற்­சி­களில் முக்­கி­ய­மா­னவை, முரசை கணி­னி­ம­யப்­ப­டுத்­தி­ய­தும் சிங்­கப்­பூர் பிரஸ் ஹோல்­டிங்ஸ் நிறுவனம் நாளிதழை ஏற்று நடத்த மேற்­கொண்ட முயற்­சி­யும் அடங்கும்.

சிங்­கப்­பூர் ஒளி­ப­ரப்­புத் துறை­யின் முன்­னோ­டி­யான அன்­றைய சிங்­கப்­பூர் ஒளி­ப­ரப்பு நிறு­வ­னத்­தின் (‘எஸ்பிசி’) செய்தி இயக்­கு­நர் வி. ஆனந்தா பெரேரா, ‘ஒளி­ப­ரப்பு செய்­தித்­து­றை­யின் தந்தை’ என்ற மதிப்­பைப்­பெற்ற ‘எஸ்­பி­சி’­யின் நடப்பு விவ­கா­ரப் பிரி­வின் மூத்த துணைத் தலை­வர், இயக்­கு­நர் பத­வி­களை வகித்த எஸ். சந்­தி­ர­மோ­கன், மலாய் நாளி­த­ழான ‘உத்­து­சான் மலா­யுவை’ தொடங்­கிய சிங்­கப்­பூ­ரின் முதல் அதி­பர் யூசுப் இஷாக், சிங்­கப்­பூர் செய்­தி­யா­ளர் மன்­றத்தைத் தொடங்­கிய அதே நேரத்­தில் ‘தி ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ்’ நாளி­த­ழில் நிர்வாக ஆசி­ரி­ய­ராகப் பணி­யாற்­றிய சிங்­கப்­பூ­ரின் நான்­காம் அதி­பர் வீ கிம் வீ, உத்­து­சான் மலா­யு­வின் துணை ஆசி­ரி­ய­ரும் முன்­னாள் அமைச்­ச­ரு­மான ஓத்­மன் வோக், அன்­றைய சிங்­கப்­பூர் ஒளி­பரப்பு நிறு­வ­னத்­தின் மூத்த நிர்­வா­கத் தயா­ரிப்­பா­ளர் திரு ரெமேஷ் குமார் உள்­ளிட்ட காலஞ்சென்ற 14 ஊடக முன்­னோ­டி­கள் பட்­டி­ய­லில் அங்­கீ­கரிக்கப்­பட்­டுள்­ள­னர்.

‘தி பிஸ்­னஸ் டைம்ஸ்’ நாளி­த­ழின் முன்­னாள் செய்­தி­யா­ள­ரும் ‘டுடே’ பத்­தி­ரி­கை­யின் தலைமை ஆசி­ரி­ய­ரு­மான கான்­ராட் ராஜ், ‘தி ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ்’ நாளி­த­ழின் விளை­யாட்­டுச் செய்தி ஆசி­ரி­யர் காட்­ஃப்ரீ ராபர்ட், ‘தி நியூ பேப்­பர்’ நாளி­த­ழின் முன்­னாள் ஆசி­ரி­ய­ரும் டுடே பத்­தி­ரி­கை­யின் முன்­னாள் தலைமை ஆசி­ரி­ய­ரும் மீடி­யா­கார்ப் பிரஸ்­சின் முன்­னாள் தலைமை நிர்­வாக அதி­கா­ரி­யு­மான பி. என். பால்ஜி, அன்­றைய ‘எஸ்பிசி’ தமிழ்த் தொலைக்­காட்சிப் பிரி­வின் முன்னாள் தலைமைத் தயா­ரிப்­பா­ள­ரும் தலை­வ­ரு­மான வி. கலைச்­செல்­வன் ஆகி­யோ­ர் வாழும் முன்­னோ­டி­களாக ‘ஹால் ஆஃப் ஃபேமில்’ இடம்­பெற்­றுள்ள இந்­தி­யர்­களில் சிலர்.

ஊட­கத்­து­றை­யில் 25 ஆண்­டு­க­ளுக்­கும்மேல் பங்­காற்­றிய 50 முன்­னோ­டி­க­ளு­டன் வரும் ஆண்­டு­களில் தொடர்ந்து பல சாத­னை­யா­ளர்­க­ளின் பெயர்­களும் ‘ஹால் ஆஃப் ஃபேமில்’ இடம்­பெ­று­ம் என்று கூறி­னார் சிங்­கப்­பூர் ஊட­க­வி­ய­லா­ளர் சங்­கத்­தின் த­லை­வர் திரு பேட்­ரிக் டேனி­யல்.

“ஹால் ஆஃப் ஃபேமில் இடம் பெற்றுள்ள 50 முன்­னோ­டி­களை சிங்­கப்­பூர் ஊட­க­வி­ய­லா­ளர் மன்­றத்­தின் உறுப்­பி­னர்­களும் நண்­பர்­களும் வாக்­க­ளிப்­பின் மூலம் தேர்ந்­தெ­டுத்­த­னர்,” என்று அவர் கூறினார்.

“இந்த 50 முன்­னோ­டி­களும் சிங்­கப்­பூர் சுதந்­தி­ரம் பெற்ற காலத்­தில் ஊட­கத்­து­றை­யில் பணி­பு­ரிந்­த­வர்­கள். அர­சாங்­கத்­துக்­கும் மக்­க­ளுக்­கும் இடை­யி­லான பால­மாக ஊட­கம் அமைந்­ததை பார்த்­த­வர்­கள் இவர்­கள். நம்­பிக்­கையை வளர்க்­க­வும், புரிந்­து­ணர்­வை­யும் நல்­லி­ணக்­கத்தையும் மேம்­ப­டுத்­த­வும் ஊட­கம் ஒரு கருவி. அதைப் புரிந்­து­கொண்டு தொண்­டாற்­றிய 50 முன்­னோ­டி­க­ளுக்­கும் இந்த அங்­கீ­க­ரிப்பு அவ­சி­ய­ம்,” என்­றார் வாழும் முன்­னோ­டி­யாக ‘ஹால் ஆஃப் ஃபேமில்’ இடம்­பெற்ற ‘பெரித்தா ஹரி­யான்’ மலாய் நாளி­த­ழின் முன்­னாள் செய்தி ஆசி­ரி­ய­ரும் முன்­னாள் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான சைனுல் அபி­தீன் ரஷீத்.

தற்­போது குவைத்துக்கான சிங்கப்பூர்த் தூத­ரா­க இவர் பணியாற்றுகிறார்.

“இந்தப் ­பட்­டி­ய­லில் இடம்­பெற்­றி­ருக்­கும் ஒவ்­வொ­ரு­வ­ரும் தனித்­தன்­மை­ வாய்ந்த­வர்­கள். இவர்­க­ளது பங்­க­ளிப்பு என்­றென்­றும் நினை­வு­கூர்ந்து போற்­றத்­தக்­கது.

“சிங்­கப்­பூ­ரின் தேசிய வர­லாற்­றை­யும் மக்­க­ளின் வாழ்­வை­யும் பதிவு செய்­வ­தில் இவர்­கள் முக்­கியப் பங்­காற்­றி­யுள்­ள­னர்,” என்­று திரு பேட்­ரிக் டேனியல் குறிப்­பிட்­டார்.

சிங்­கப்­பூ­ரின் முதல் பிர­த­மர் லீ குவான் இயூ, மலே­சி­யா­வி­லி­ருந்து சிங்­கப்­பூர் பிரி­யும் சோக­மான செய்­தி­யைக் கூறி கண்­ணீர்விடும் காட்சி, பதிவாகி, வரலாற்று நிகழ்வாக ஆகக் காரணமானவர் அன்­றைய ‘எஸ்­பிசி’ நடப்பு விவ­கா­ரப் பிரி­வின் அம­ரர் எஸ்.சந்­தி­ரன். சிங்­கப்­பூ­ரில் ஆக அதிக காலம் விளை­யாட்­டுச் செய்­தி­யா­ள­ரா­கத் தடம் பதித்­த­வர் திரு காட்­ஃப்ரீ ராபர்ட்.

சிங்கப்பூர் ஊடகத்துறையில் புகழ்பெற்றவர்களின் பட்டியலில் தமிழ் முரசின் முன்னாள் ஆசிரியர்கள்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!