தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மனநலத்தை மேம்படுத்த தோட்ட வேலை செய்யலாம்

2 mins read
8b56f86e-043a-46d9-a704-6f8e29ef9ead
உட்­லண்ட்ஸ் தாவ­ர­வி­யல் பூங்­கா­வைக் காண மக்­கள் திரளாக வருவது ­தன் நோக்­கம் நிறை­வே­றி­யதை உணர்த்துவதாகக் கூறினார் திரு கணேஷ். படம்: அருணா கந்தசாமி -

அருணா கந்­த­சாமி

முழு­நேர வேதி­யி­யல் துணைப்­பாட ஆசி­ரி­ய­ரா­கப் பணி­பு­ரி­யும் 37 வயது கணேஷ் குமார், மார்­சி­லிங் வட்­டா­ரத்­தில் ஒரு மன­ந­லப் பூங்­காவை உரு­வாக்­கி­யி­ருக்­கி­றார்.

சிறு வய­தி­லி­ருந்தே தோட்ட வேலை­யில் ஈடு­ப­டு­வது தனக்கு மகிழ்ச்­சி­ய­ளிக்­கும் பொழு­து­போக்கு என்று குறிப்­பிட்ட திரு கணேஷ், தன் தாயார் தவ­றி­ய­போது மன அழுத்­தத்­தி­லி­ருந்து மீண்­டு­வ­ரு­வ­தற்­குத் தோட்ட வேலை செய்­வது மிக­வும் உத­வி­யாக இருந்­த­தா­கக் கூறி­னார்.

தோட்­டத்­தைத் தற்­போது 20 தொண்­டூ­ழி­யர்­க­ளு­டன் சேர்ந்து பரா­ம­ரித்து வரு­கி­றார் இவர்.

மன அழுத்­தம், மன உளைச்­சல் ஆகி­ய­வற்­றால் அவ­தி­யு­று­வோ­ருக்கு உத­வும் நோக்­கில் தன் தந்தை திரு தேவ­கு­மா­ரு­டன் இணைந்து இந்த சமூ­கத் தோட்­டத்தை உரு­வாக்­கி­ய­தா­கப் பகிர்ந்­து­கொண்­டார் கணேஷ்.

மார்­சி­லிங் சாலை­யி­லி­ருக்­கும் புளோக்­கு­கள் 133, 134, 135 ஆகி­ய­வற்­றுக்­கும் 'உட்­லண்ட்ஸ் டவுன் பார்க் ஈஸ்ட்'க்கும் இடைப்­பட்ட மலைப்­ப­கு­தி­யில் அமைந்­தி­ருக்­கிறது உட்­லண்ட்ஸ் தாவ­ர­வி­யல் பூங்கா.

வண்ண மலர்­க­ளின் அணி­வகுப்பா­கக் காட்­சி­ய­ளிக்­கும் இ்ந்த இ­டம் வண்­ணத்­துப்­பூச்­சி­கள், தேனீக்­கள் போன்­ற­வற்­று­டன் பல வகைப் பற­வை­க­ளை­யும் ஈர்க்­கிறது.

வட்­டார மக்­க­ளால் புறக்­க­ணிக்­கப்­பட்ட கிளி­களும் இந்­தத் தோட்­டத்­தில் வளர்­கின்­றன.

தோட்­டத்­தின் நடை­பா­தை­கள், நுழை­வா­யில், கிளிக்­கூண்டு போன்­றவை தொண்­டூ­ழி­யர்­க­ளின் கைவண்­ணம்.

வருங்­கா­லத்­தில் விலங்­குப் பரா­ம­ரிப்பு நிலை­யம், கலை நிகழ்ச்­சி­கள், செயற்கை அருவி போன்­ற­வற்­றை­யும் அமைக்­கத் திட்­ட­மி­டு­வ­தாக கணேஷ் தெரி­வித்­தார்.

மன­ந­லப் பிரச்­சி­னை­க­ளி­லி­ருந்து மீண்­டு­வ­ரு­வ­தற்­குத் தோட்ட வேலை செய்­வது நல்ல தீர்வு என்ற விழிப்­பு­ணர்வை ஏற்­படுத்­த­வேண்­டும் என்­பதே இந்­தத் தோட்­டத்­தின் நோக்­கம் என்­றார் அவர்.

"முன்பு வீட்­டி­லேயே அடைந்து கிடந்த முதி­ய­வர்­கள் இப்­போது அன்­றா­டம் அழ­கிய தோட்­டத்­தில் நடைப்­ப­யிற்சி செய்­கி­றார்­கள்.

முதி­ய­வர்­க­ளுக்­கா­கவே மலை அடி­வாரத்தில் சம­த­ளப் பகு­தி­யி­லும் பூங்கா அமைக்­கப்­பட்­டி­ருக்­கிறது," என்­றார் கணேஷ்.

2020ஆம் ஆண்­டில் இந்த முயற்­சி­யைத் தொடங்­கி­ய­போது அண்­டை­வீட்­டார் தன்னை அதி­கம் ஊக்கு­வித்­த­தா­க­வும் தொடர்ந்து தேசியப் பூங்­காக் கழ­க­மும் மார்­சி­லிங் 'ஸோன் 3' நகர மன்­ற­மும் ஒத்­து­ழைப்பு அளித்­த­தா­க­வும் இவர் கூறினார்.

இது­போன்ற மன­ந­லப் பூங்­காக்கள் மற்ற குடி­யி­ருப்­புப் பேட்­டை­க­ளி­லும் அமைக்­கப்­பட வேண்­டும் என்­பது இவ­ரது விருப்­பம்.