இமைக்கதவு திறப்போம்; இன்னும் சாதிப்போம்

இமைக்கதவு திறப்போம்; இன்னும் சாதிப்போம்

3 mins read
e0023f90-578b-4b36-a43e-50d02fd2027e
விழித்துகொள்வது எவ்வாறு என்பதைக் கலந்துரையாடல்வழி கற்றுக்கொள்ள வந்த பெண்கள். படம்: சிண்டா -

சாதிக்கப் பிறந்தவள் பெண் என்பதில் வியப்பில்லை. பெண் என்னும் பிறவியே சாதனைதான். பெண்ணின் வயிற்றிலிருந்து பிறக்கும் பெண்ணைச் சுற்றிப் பிறக்கும் பிரச்சினைகள் ஏராளம். கொடுமையின் கடுமை சகித்து, வட்டம் போட்ட கோட்டுக் குள் வாழ்ந்து தேயும் பெண்கள் என்பது பழைய வரலாறு. நம்பிக்கைக்குள் உயிரை ஊற வைத்து நாளையாவது விடியுமா என விழித்திருந்து பெண்கள் காத்திருந்ததும் ஒரு காலம். இப்போது, விழித்துக்கொண்ட பெண் கள் முன்னேற்றத் தடைகளை உடைக் கிறார்கள்; உயரம் தொட உழைக்கிறார்கள். எதிலும் முந்தவேண்டும் என்ற உந்துதல் இப்பெண்கள் பலரின் உடன்பிறப்பு.

வீட்டை முன்னேற்றி, நாட்டையும் பெருமைப்படுத்தும் பெண்கள் பலரைக் கொண்டது நம் சிங்கப்பூர் சமூகம். அவர்களைப் பற்றிய தொகுப்பு இது.

சிங்­கப்­பூர் இந்­தியர் மேம்­பாட்டு சங்­கம் (சிண்டா) வாழ்க்­கைத் திறன்­களை இந்­தி­யப் பெண்­க­ளுக்கு கற்­பிக்­க­வும் நவீன சிங்­கப்­பூர் சமு­தா­யத்­தில் அவர்­கள் எதிர்­நோக்­கும் பிரச்­சி­னை­க­ளைப் பற்­றிய விழிப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்­த­வும் 'நான் ஒரு பெண்' எனும் தலைப்­பில் தொடர் பயி­ல­ரங்­கு­க­ளுக்கு ஏற்­பாடு செய்­தி­ருந்­தது.

ஜூன் 4ஆம் தேதி தொடங்­கிய பயி­லரங்கு, மூன்று வார­யி­று­தி

­க­ளுக்­குத் தொடர்ந்தது. இவற்றில் 13 வய­தி­லி­ருந்து 25 வய­திற்கு உட்­பட்ட சுமார் 50 சிங்­கப்­பூர் இந்­திய மக­ளிர் கலந்­து­கொண்­ட­னர்.

முதல் பயி­ல­ரங்­கின் நோக்­கம் பாலின நிலைப்­பா­டு­களை உடைப்ப தாக இருந்­தது. அதன் தலைப்பு, 'நான் திற­மை­யா­ன­வள்'.

ஆணுக்குப் பெண் எந்­த­வி­தத்­தி­லும் சளைத்­த­வரல்ல என்ற கருத்­தை­யொட்டி அது நடத்­தப்­பட்­டது.

ஆண் விளை­யாட்­டு­கள், பெண் விளை­யாட்­டு­கள் என பிரிப்­பது அர்த்­த­மற்­றது; நம் மன­திற்­குப் பிடித்­ததை நாம் செய்­ய­வேண்­டும் என்­னும் கருத்­தும் பயி­ல­ரங்­கில் வலி­யு­றுத்­தப்­பட்­டது.

'நான் அச்­ச­மற்­ற­வள்' என்ற தலைப்­பில் நடந்த 2ஆம் பயி­ல­ரங்­கின் பங்­கேற்­பா­ளர்­கள் உற­வு­க­ளுக்­குள் ஆரோக்­கி­ய­மான உரை­யா­டல் இருக்­க­வேண்­டி­ய­தன் அவ­சி­யத்தை கற்­றுக்­கொண்­ட­னர்.

ஆண், பெண் உற­வுக்கு அப்­பாற்­பட்டு, பெற்­றோர் பிள்ளை உறவு, நட்பு போன்ற உற­வு­களும் பேசப்பட வேண்டும். ஆரோக்­கி­ய­மான உரை­யா­டல் இல்­லாத உறவு கசப்­பா­கி­வி­டும் என்­ப­தையும் கற்­றுக்­கொண்­ட­னர். நேற்று நிகழ்ந்த, 'நான் அழ­கா­ன­வள்" என்ற பயி­ல­ரங்­கு­டன் இந்­தத் தொடர் நிறை­வு­பெற்­றது. பெண்­கள் தங்­க­ளு­டைய உட­லைக் குறை­கூறி விமர்­சிக்­கக் கூடாது என்­பது இப்­ப­யிலரங்­கில் வலி­யு­றுத்­தப்­பட்­டது. இக்­க­ருத்தை வலி­யு­றுத்­தும் வண்­ணம் பங்­கேற்­பா­ளர்­

க­ளுக்கு இல­வச மரு­தாணி சேவை­க­ளோடு இயற்கை அழகு சாத­னப் பொருள்­களும் விநி­யோ­கிக்­கப்­பட்­டன.

நன்­யாங் பல­துறைத் தொழிற் கல்லூரி மாணவி தங்க அகல்யா தேவி, 20, பயி­ல­ரங்­கில் பங்கேற்கும் முன் தன்­னம்­பிக்கை குறை­வாக இருந்­ததாகவும் சிண்­டா­வின் முயற்சி­யி­னால் இப்­போது தம்­மால் மற்­ற­வர்­கள் முன்­னி­லை­யில் தைரி­ய­

மா­கப் பேச முடி­கிறது என்­றும் கூறி­னார். ஆர்தி வெங்­கடா­ச­லத்­துக்கு, 17, இது ஒரு சிந்­திக்க வைக்­கும் அனு­ப­வ­மாக இருந்­தது.

சமூ­கத்­தில் ஒளிந்­தி­ருக்­கும் பிரச்­சி­னை­க­ளை கலந்­து­ரை­யா­டல்­ஆழ­மாக அலசியது என்றார் அவர்.

சிண்டா தலைமை நிர்­வாக அதி­காரி அன்­ப­ரசு ராஜேந்­தி­ரன் பேசு­கை­யில், "இந்­தி­யப் பெண்­கள் வீடு, பள்ளி, வேலை என பல்வேறு நிலை­ க­ளி­லும் சவால்­களை எதிர்­நோக்­கு­கி­றார்­கள்.

"அவர்­க­ளுக்கு உத்­வே­கம் கொடுக்க பயி­ல­ரங்கு நடத்­தப்­ப­டு­கிறது. சவால்­களை முறி­ய­டித்து வாழ்க்­கையை மேம்­ப­டுத்­து­வது எவ்­வாறு என்­ப­தைக் கற்­பிப்­ப­தும் பயி­ல­ரங்­கின் நோக்­கம்," என்­றார்.

சிண்­டா­வின் செயற்­குழு உறுப்­பி­னர் திரு­மதி ரதி பரி­ம­ளன், "மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது சிங்­கப்­பூ­ரில் பெண்­க­ளுக்­குப் பல வாய்ப்பு­கள் வழங்­கப்­ப­டு­கின்­றன.

"அவற்றைத் தங்களுக்குச் சாத­க­மா­கப் பயன்­ப­டுத்தி பெண்­கள் முன்­னே­ற­வேண்­டும்," என்­றார். தேசிய குத்­துச்­சண்டை வீராங்­கனை டனீஷா மதி­வ­ழ­கன், 25, பாலி­ன சமத்­து­வத்தை வலி­யு­றுத்­தும் 'அவேர்' அமைப்­பைச் சேர்ந்த சுகிதா நிதி, 58, 'TheCurveCult' நிறு­வ­னத்தை நிறு­விய ராணி தாட்­சா­யிணி, 32, ஆகி­யோர் கேள்வி-பதில் அங்­கத்­தில் பங்­கெ­டுத்­த­னர்.