வீட்டுக்கொடுமை விட்டொழிய உதவிக்கரம்

வீட்டுக்கொடுமை விட்டொழிய உதவிக்கரம்

2 mins read
dd920c95-23c2-467e-9064-48f3270f177c
பிரச்சினையைச் சந்திக்கும் பெண்களுக்கு ஓடிச்சென்று உதவியதால் சிறப்பிக்கப்பட்ட பீவி அயோப் (இடது), நோர்ஹாபிசா நிஜாம் முகமது. படங்கள்: இவ்விருவரும் -
multi-img1 of 2

'இக்ஸ்­னிடா சாபா' எனும் மலே­சிய அரசு சாரா தொண்டு நிறு­வ­னம் வழங்­கிய 'தலை­சி­றந்த பெண் 2022' என்னும் விருதை வழங்கியது.

குடும்ப வன்­முறை, வேலை­யின்மை போன்ற பிரச்­சி­னை­களை எதிர்­நோக்­கும் பெண்­க­ளுக்கு ஆத­ரவு அளிக்­கும் சிங்­கப்­பூர் பெண்­கள் மேம்­பாட்­டுக் குழுவை நிறு­விய முழு­நேரத் தாதி­யான நோர்­ஹா­பிசா நிஜாம் முக­மது, சமூக சேவை­யா­ள­ரு­ம் சாஃப்ரான்ஸ் உண­வ­கத்­தின் நிறு­வ­ன­ரு­மான பீவி அயோப் ஆகிய இரு­வ­ரும் விரு­து பெற்ற 42 மக­ளிர் பட்­டி­ய­லில் அங்­கம் வகித்த­னர். சிங்­கப்­பூ­ரைச் சேர்ந்த மொத்­தம் 10 பேர் அந்த விரு­தைப் பெற்­ற­னர்.

தன்­மு­னைப்­புப் பேச்­சா­ள­ராக ஒன்­று­கூ­டல் நிகழ்ச்­சி­க­ளின் மூலம் சமூக சேவைக்கு ஈர்க்­கப்­பட்ட நோர்­ஹா­பிசா, மக­ளிர் மேம்­பாட்­டுக்­கென ஒரு குழுவை நிறு­வ­வேண்­டும் என்று எண்ணி 2014ஆம் ஆண்­டில் அதைத் தொடங்­கி­னார். இன்று 200க்கும் மேற்­பட்ட தொண்­டூ­ழி­யர்­கள் அதில் இருக்­கி­றார்­கள்.

இனம், மொழி, சமய வேறு­பாடு இன்றி, ஆத­ரவு தேவைப்­படும் குடும்­ பங்­க­ளுக்­குச் சமை­யல் பொருள்­கள், பற்­றுச்­சீட்­டு­கள், ஒற்றை பெற்­றோ­ரு­டைய குழந்­தை­க­ளுக்­கான பொருள்­களை விநி­யோ­கிப்­ப­தோடு பெண்­கள் மனம் விட்டு பேச பாது­காப்­பான சூழ­லை­யும் இக்குழு ஏற்­ப­டுத்­தித் தரு­கிறது.

மக­ளிர் மேம்­பாட்­டுக்கு ஆத­ரவு வழங்கி சேவை புரிந்­து­வ­ரும் பீவி அயோப், தமது நான்கு பிள்­ளை­களை வளர்த்து ஆளாக்­கக் கர­டு­மு­ர­டான பாதை­யைத் தாண்டி வந்­த­வர்.

விருது பெற்­ற­தில் பெரு­மி­தம் கொள்­ளும் இவர், கடந்த 26 ஆண்டு­ க­ளாக உண­வ­கத்தை நடத்தி வரு­கி­றார்.

1994ஆம் ஆண்டு தெம்­ப­னி­ஸில் சிறு கடை­யா­கத் தொடங்­கிய உண­வ­கம், இன்று மூன்று கிளை­களாக விரிந்­தி­ருக்­கிறது.

"நான்கு பிள்­ளை­க­ளைக் கரை­யேற்­றக் காசு சேமிக்­கத்­தான் உண­வ­கத்­தைத் தொடங்­கி­னேன். இன்று நால்­வ­ரும் பெரிய உத்­தி­யோ­கங்­களில் இருப்­பது மகிழ்ச்­சி­யாக இருக்­கிறது" என்று அவர் சொன்­னார்.

இம்­மா­தம் 4ஆம் தேதி மலேசி யாவில் விருது வழங்­கும் விழா நடை­பெற்­றது.

கொவிட்-19 கட்­டுப்­பா­டு­க­ளால் சிங்­கப்­பூ­ரைச் சேர்ந்­த­வர்­கள் தங்­க­ளது விருதை இங்கு உள்ள ரெகேல் @ வாரன் கோல்ஃப் கன்ட்ரி கிளப் வளா­கத்­தில் பெற்­றுக்­கொண்­ட­னர்.

நி­கழ்­வின் சிறப்பு விருந்­தி­னர்­க­ளாக 'இஆர்ஏ' நிறு­வ­னத்­தின் சிங்­கப்­பூர் பிரிவு இயக்­கு­நர் இனா சுல்­தா­னும் சிங்­கப்­பூர் மலாய் வர்த்­த­கத் தொழில் சபை­யின் அனைத்­து­ல­கப் பெண்­கள் பிரி­வின் சிறப்பு ஆலோ­ச­கர் ரோஸ்னா டின்­னும் கலந்­துகொண்­டனர்.

செய்தி: அருணா கந்­த­சாமி