ஹர்ஷிதா பாலாஜி
இன்றைய சிங்கப்பூரில் பெண்
களுக்கு கிடைக்கக்கூடிய உரிமைகளைப் பற்றியும் உதவிகளைப் பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்த கலந்துரையாடல் ஒன்று நடத்தப்பட்டது.
'கோபியோ' (Gopio) எனப்படும் இந்திய வம்சாவளியினருக்கான உலகளாவிய அமைப்பின் சிங்கப்பூர் பெண்கள் பிரிவு தனது முதல் நிகழ்ச்சியான அந்தக் கலந்துரையாடலை மெய்நிகராக நடத்தியது.
ஜூன் 5ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் இரு பேச்சாளர்கள் உரையாற்றினர்.
மூத்த வழக்கறிஞர் தேவி ஹரிதாஸ் 1961ஆம் ஆண்டில் அறி
முகப்படுத்தப்பட்ட மாதர் சாசனம் பற்றிப் பேசினார்.
அன்றிலிருந்து இன்று வரை பெண்களின் உரிமைகளைக் காப்பது, சமுதாயத்தில் பெண்களை ஆணுக்குச் சமமான நிலைக்கு உயர்த்துவது என்பனவற்றில் அந்த சாசனம் ஏற்படுத்திய பயன்களை பெண்கள் தெரிந்துகொள்ளவேண்டியதன் அவசியம் பற்றி அவர் குறிப்பிட்டார்.
"ஒரு பெண் தனது குடும்பத்தினருடன் கொண்டுள்ள உறவுகள் எப்படி இருக்கவேண்டும் என்ற முடிவை எடுக்கும் உரிமை ஒரு காலத்தில் சட்டத்தின் கையில் இருந்தது. ஆனால், மாதர் சாசனம் இதனை மாற்றியது.
"அதன் மூலம் பிறந்த சுதந்திரத்தை பெண்கள் அனுபவிக்கவேண்டும் என்றால் அதைப் பற்றிய விழிப்புணர்வைக் கொண்டிருப்பது அவசியம்," என்றார் திருவாட்டி தேவி.
இதனையடுத்து, இன்றைய சமுதாயத்தில் பெண்கள் சந்திக்கும் வன்முறைகளுக்கு எதிராகக் குரல்கொடுக்கக்கூடிய அறிவியலாளர் டாக்டர் வாணி காரே உரையாற்றினார்.
குறிப்பாக, ஒரு பெண்ணின் துணை ஏற்படுத்தக்கூடிய வன்முறை எப்படிப்பட்ட விதங்களில் ஒருவரை தாக்கக்கூடும்; அதிலிருந்து ஏன் தப்பிக்க முடியாமல் பெண்கள் தவிக்கின்றார்கள் என்பதைப் பற்றிய விழிப்புணர்வை தனது உரையின்வழி ஏற்படுத்தினார் டாக்டர் வாணி.
"இச்சூழலில் வன்முறை என்றால் பெண்ணை அடிப்பது அல்லது உதைப்பது மட்டுமல்ல. வார்த்தை களாலும் செயல்களாலும் மனத்தளவில் புண்படுத்துதல், பாலிய ல்
கொடுமை புரிதல், ஒருவரின் ஒவ்வோர் அசைவையும் கண்காணித்தல், பயமுறுத்துதல் ஆகியவையும் கூட வன்முறையாகக் கருதப்படலாம்," என்றார் டாக்டர் வாணி.
அதே சமயத்தில், துணைவர் என்பதால் சமுதாயம் என்ன நினைக்கும், குடும்பத்தினர் என்ன நினைப்பார்கள் என்பன போன்றவற்றால் தொடர்ந்து வன்முறையை சகித்துக்கொள்ளவேண்டிய அவலநிலை பெண்களுக்கு ஏற்படுகின்றது என்றும் அவர் கூறினார்.
இனிமேல் பெண்கள் தங்களை வன்முறை மிகுந்த உறவுகளிலிருந்து காப்பாற்றிக்கொள்ள என்ன செய்யலாம் என்ற கலந்துரையாடலுக்குப் பிறகு, பெண்கள் தங்களுக்கு உதவக்கூடிய அமைப்புகள் பற்றி தெரிந்துகொள்ளவேண்டும் என்று வலியுறுத்தினார் டாக்டர் வாணி.