வலிக்கு வழியனுப்பு; வலிமைக்கு வரவேற்பு

வலிக்கு வழியனுப்பு; வலிமைக்கு வரவேற்பு

2 mins read

ஓர் அரிய வகை நிமோ­னியா நோயால் 2012ஆம் ஆண்டு முதல் பாதிக்­கப்­பட்ட 51 வயது தீபா மௌரியா (படம்) தமது நுரை

­யீ­ரலை சோத­னை செய்ய ஆறு மாத­ங்களுக்கு ஒருமுறை மருத்­து­வ­ரைக் காண­வேண்டி இருந்­தது.

ஆனால், 2016 மே மாதம் அவ­ரால் அச்­சோ­த­னைக்கு செல்­ல

­மு­டி­ய­வில்லை, நண்­பர்­க­ளோடு ஒரு நாள் நடக்­கச் சென்­ற­போது, திடீ­ரென தடுக்கி கீழே விழுந்­தது அதற்­குக் கார­ணம். அடுத்த இரு மாதத்­தில் தீபா­வின் நுரை­யீ­ரல் பரி­சோ­திக்­கப்­பட்­ட­போது அவ­ருக்கு முதற்கட்ட நுரை­யீ­ரல் புற்­று­நோய் இருப்­பது தெரி­ய­வந்­தது. புற்­று நோயை அறிந்து அதிர்ந்­தா­லும் துணிச்­சலை வர­வ­ழைத்து உட­ன­டி­யாக தம் இடது நுரை­யீ­ர­லில் இருந்த புற்றுநோய்க் கட்­டியை அகற்ற அவர் ஏற்­பா­டு­ செய்­தார்.

2017 ஏப்­ரலில் தீபா­வுக்­குக் கடு­மை­யான கால் வலி ஏற்­பட்­ட­தால் அவ­ரால் சரி­யாக நடக்­க­மு­டி­ய­வில்லை. கால் வலிக்­கான கார­ணம் அறிய பரி­சோ­திக்­கச் சென்­ற­போது மருத்­து­வர்­க­ளால் அதன் மூலகார­ணத்­தைக் கண்­டு­பி­டித்து தீர்மானமாக எதையும் கூற முடிய வில்லை. குழப்­பத்­தில் தவித்­துக்­கொண்­டி­ருந்த தீபா, மீண்­டும் ஒரு பரி­சோ­த­னைக்­குக் சென்­ற­போது அவ­ருக்கு புற்­று­நோய் மீண்­டும் வந்­துள்­ள­தா­க­வும் அது நான்­காம் கட்­டத்­தில் இருப்­ப­தா­க­வும் மருத்­து­வர் கூறி­னார்.

புற்றுநோய்க் கிருமி அவ­ரு­டைய உட­லெங்­கும் பரவி, இடது காலின் எலும்­பைத் தாக்­கி­யதை உணர்ந்­த­போது உல­கமே இடிந்­ததுபோல தீபா உணர்ந்­தார்.

இடது காலில் இரண்டு உலோ­கக் கம்­பி­க­ளைப் பொறுத்­த­வேண்­டிய கட்­டா­யம் இருந்­த­தோடு அவர் கீமோ­தெ­ர­பிக்­கும் இம்­மி­யூ­னோ­தெ­ர­பிக்­கும் சென்­றார். அதன் பிறகு குண­ம­டை­யத் தொடங்­கிய தீபா­வுக்கு 2018 டிசம்­ப­ரில் இடது தோள்­பட்­டை­யில் பயங்­கர வலி உண்­டா­னது.

பல சோத­னைக­ளுக்­குப் பின் புற்­று­நோய் அவ­ரது இடது கையின் 'ஹியூ­ம­ரஸ்' எலும்பைப் பாதித்­தது. இதனால் கதிர்வீச்சு சிகிச்சைக்கு 2 மாதங்கள் தீபா சென்­றார்.

2019, 2020 ஆம் ஆண்­டு­களில் மூளை­யி­லும் உட­லின் வெவ்­வேறு பகு­தி­

க­ளி­லும் புற்­று­நோய் பர­வி­ய­போது வேலைக்­கும் தனிப்­ப­ட்ட வாழ்க்­கைக்­கும் இந்­நோய் ஏற்­

ப­டுத்­திய சிக்­கல்­க­ளை­யும் சிர­மங்­க­ளை­யும் அவர் முழு­மை­யாக உண­ரத் தொடங்­கி­னார்.

அது­மட்­டு­மல்­லா­மல் கீமோதெரபி, கதிர்வீச்சு சிகிச்­சை­கள் உண்­டாக்­கிய பக்­க­வி­ளை­வு­க­ளைச் சமா­ளிக்க முடி­யா­மல் அவர் திக்­கு­

முக்­கா­டி­னார்.

கண் பார்வை, நுக­ரும் தன்மை, சுவை அறியும் உணர்வு ஆகி­ய­வற்­றில் பிரச்­சி­னை­களை எதிர்­நோக்­கிய தீபா, அவ­ரு­டைய படுக்கை அறை­யில் தனி­யாக இருந்து தொலைக்­காட்­சி­கூட பார்க்­க­மு­டி­யா­மல் இருக்க வேண்­டிய நிலைமை அவ­ரது மனதை மேலும் புண்­ப­டுத்­தி­யது.

சென்ற ஆண்டு முதல், ஆறு மாதங்­க­ளுக்கு ஒரு முறை எலும்புகளை வலு வாக்க ஊசி போட்­டுக்­கொள்­கி­றார் தீபா.

இடது கை முழு­மை­யா­கப் பாதிக்­கப்­பட்­டி­ருந்­தா­லும் அவர் அதை ஒரு பொருட்­டா­கக் கரு­தா­மல் மன வலி­மை­யோ­டுத் திகழ்­கி­றார்.

இந்த ஆண்டு நரம்­புத் தூண்டி ஒன்று உட­லில் பொருத்­தப்­பட்­ட­தால் தீபா­வின் கையி­லி­ருந்த வலி மறைந்­தது.

சிங்­கப்­பூ­ரி­ல் முதன்­மு­றையாக புற்­று­நோ­யாளி ஒரு­வ­ருக்கு நரம்­புத் தூண்டி பொருத்­தப்­பட்­டது இவ­ருக்­குத்­தான்.