தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தொலைதூரத்தில் வசதி; தொடும் தூரத்தில் உதவி

3 mins read
0349d3b0-5fc2-4ad7-88cb-470c3ecc8429
நிகழ்ச்சிக்கு வந்திருந்தோரில் சிலர். வசதி குறைந்த 16 மாணவர்களுக்கு வட்டியில்லாக் கல்விக்கடனும் கல்வி உதவி நிதியும் வழங்கப் பட்டது. படம்: உமறுப் புலவர் கல்வி உபகாரச் சம்பள அறங்காவல் நிதி -

கடந்த 38 ஆண்­டு­க­ளாக இந்­திய மாண­வர்­க­ளின் கல்­விக்­காக ஆத­ரவு நல்­கி­வ­ரும் உம­றுப் ­பு­ல­வர் கல்வி உபகாரச் சம்பள அறங்­கா­வல் நிதி, இவ்­வாண்டு 16 மாண­வர்­க­ளின் கல்வித் தேவை­க­ளைப் பூர்த்திசெய்ய முற்­ப­டு­கிறது.

உம­றுப் புல­வர் கல்வி உப­கா­ரச் சம்­பள அறங்­கா­வல் நிதி­யின் 2022-23 கல்வி ஆண்­டுக்­கான வட்­டி­யில்­லாக் கல்­விக் கடன் மற்­றும் கல்வி உப­கா­ரச் சம்­ப­ளம் வழங்­கும் நிகழ்ச்சி ஜூன் 26 ஞாயிற்­றுக்­

கி­ழமை சிண்டா கட்­ட­டத்­தில் நடை­பெற்­றது.

இவ்­வாண்டு ஏப்­ரல் மாதம் தமிழ், ஆங்­கில செய்­தித்­தாள்களில் விளம்­ ப­ரம் செய்­யப்­பட்­ட­தைத் தொடர்ந்து இவ்­வாண்­டுக்­கான வட்­டி­யில்லாக் கல்­விக்­க­ட­னுக்­கும் கல்வி உத­வி­நி­திக்­கும் 16 மாண­வர்­கள் விண்­ணப்­பித்­த­னர். இவர்­களில் அறு­வர் பட்­டப் படிப்­புக்­கும் ஐவர் பட்­ட­யப் படிப்­புக்­கும் மேலும் ஐவர் தொழில்­நுட்­பக் கல்­விக் கழக (ஐடிஇ) படிப்­புக்­கும் விண்­ணப்­பித்து இருந்­த­னர்.

தகு­தி­யின் அடிப்­ப­டை­யில் தேர்வு­ செய்­யப்­பட்ட இவர்­க­ளுக்கு $33,000 கல்­விக்­க­டன் மற்­றும் உப­கா­ரச் சம்­ப­ளம் வழங்­கப்­பட்­டது.

இந்­தத் தொகை­யில், பட்­டப் படிப்­புக்கு தலா $3,000, பட்­ட­யப் படிப்­புக்கு தலா $2,000 வட்­டி­யில்­லாக் கல்­விக்­க­ட­னும் தொழில்­நுட்­பக் கல்­விக்­க­ழ­கப் படிப்­புக்கு தலா $1,000 கல்வி உத­வி­நி­தி­யும் வழங்­கப்­பட்­டது.

அத்­து­டன், 18ஆம் ஆண்­டாக சிண்டா வழங்­கும் வரு­டாந்­திர கல்வி உதவி நிதிக்­காக 5,000 வெள்ளி நன்­கொ­டை­யா­கத் தரப்­பட்­டது. இவ்­வாறு, மொத்­தம் $38,000 நிதி உத­வி­யாக அளிக்­கப்­பட்­டது.

மாலை 5 மணி­ய­ள­வில் நடை­பெற்ற நிகழ்ச்­சியில், உம­றுப் புல­வர் கல்வி உப­கா­ரச் சம்­பள அறங்­கா­வல் நிதி­யின் தேர்­வுக்­கு­ழுத் தலை­வர் திரு எஸ். விவே­கா­னந்­தன், மாண­வர்­க­ளுக்­குக் காசோ­லை­களை வழங்­கி­னார். சிண்­டா­வுக்­கான நன்­கொடை நிதியை சிண்டா தலைமை நிர்­வாக அதி­காரி திரு அன்­ப­ரசு ராஜேந்­தி­ரன் பெற்­றுக்­கொண்­டார்.

நிகழ்ச்­சி­யில் கிட்­டத்­தட்ட 35 பேர் கலந்­து­கொண்­ட­னர்.

"மேற்­கல்வி படிப்­ப­தற்கு நிதிப் பற்­றாக்­கு­றையை எதிர்­நோக்­கும் மாண­வர்­க­ளுக்கு உதவி செய்­வதே எங்­க­ளது தலை­யாய பணி," என்­றார் அறங்­கா­வல் நிதி­யின் பொரு­ளா­ளர், திரு காதர் சுல்­தான், 78.

மேலும் அவர், "திரு அ.நா. மைதீன் தொடங்­கிய தென்­கி­ழக்­கா­சி­யா­வின் ஒரே தமிழ் உயர்­

நி­லைப்­பள்­ளி­யான உம­றுப்­பு­ல­வர் தமிழ் உயர்­நி­லைப் பள்ளி 1982ஆம் ஆண்டு மூடப்­பட்­டது. அர­சாங்­கத்­தால் வழங்­கப்­பட்ட இழப்­பீட்­டுத் தொகை­யோடு பள்­ளி­யி­லி­ருந்த இருப்­புத் தொகை­யை­யும் கொண்டு உம­றுப்­பு­ல­வர் கல்வி உதவி அறங்­கா­வல் நிதி 1985ல் அமைக்­கப்­பட்­டது. படிக்கும் காலத்தில் ஒவ்வோர் ஆண்டும் இவ்வுதவி நிதியைப் பெற மாணவர்கள் விண்ணப்பம் செய்யலாம். இது­வரை கிட்­டத்தட்ட 350 மாண­வர்­கள் கல்­விக்­க­ட­னு­த­வி­யும் 130 மாண­வர்­கள் கல்வி உதவி நிதி­யும் பெற்று பய­ன­டைந்­துள்­ள­னர்," என்று கூறி­னார்.

அறங்­கா­வல் நிதிக்கு ஆண்­டு­தோ­றும் $1,000 நன்­கொடை வழங்­கும் திரு சிவா கோவிந்­த­சாமி, 47, என்­ப­வர் கூறு­கை­யில், "உமறுப்­ பு­ல­வர் அறங்­கா­வல் நிதி வழங்­கிய வட்­டி­யில்­லாக் கடன் எனது பட்­டப்­ப­டிப்­புக்­குத் தேவை­யான கட்­ட­ணங்­க­ளைச் செலுத்த பேரு­த­வி­யாக இருந்­தது. வச­தி­யற்ற குடும்­பத்­தி­லுள்ள மற்ற மாண­வர்­களும் என்­னைப்போல் பய­ன­டை­ய­வேண்­டும் என்ற நோக்கத்தில் என்­னால் இயன்ற நிதியை வழங்கு­கி­றேன்," என்றார்.

வற்றிப்போன வசதி; தொற்றிக்கொண்ட வறுமை - இவற்றுக்கிடையே கற்றுக்கொண்டு படிப்பது எப்படி. வசதிகுறைந்த மாணவர் பலரின் இந்தக்

கேள்விக்கு விடையாக, 'நானிருக்கிறேன்' என ஆதரவுக்கரம் விரிக்கிறது அறங்காவல் நிதி ஒன்று.