இந்திய முஸ்லிம் பேரவைக்குப் புதிய தலைவர்

இந்திய முஸ்லிம் பேரவைக்குப் புதிய தலைவர்

2 mins read
6687925e-2936-48c9-b3ce-a071de006be7
-

சிங்­கப்­பூ­ரி­லுள்ள 19 இந்­திய முஸ்­லிம் அமைப்­பு­களை ஒரே குடை­யின்கீழ் கொண்­டுள்ள இந்­திய முஸ்­லிம் பேர­வைக்­குப் புதிய தலை­வ­ராக ரத்­தி­னக்­கல் வணி­கர் சங்கத் தலை­வர் அ. முக­மது பிலால் தேர்­வு­செய்­யப்­பட்­டுள்­ளார்.

கொளம் ஆயர் சிம்ஸ் விஸ்டா குடி­யி­ருப்­பா­ளர் குழுவின் துணைத்­தலை­வ­ரான திரு பிலால், கொளம் ஆயர் குடி­யி­ருப்­பா­ளர் ஆலோ­ச­னைக் குழுவின் (சிசிசி) உத­விச் செய­லா­ள­ரா­க­வும் கேலாங் மேற்கு சமூக மன்ற இந்­தி­யர் நற்­ப­ணிச் செயற்­குழுவின் துணைத்­த­லை­வ­ரா­க­வும் சேவை­யாற்­று­கி­றார்.

முஸ்­லிம் லீக் (சிங்­கப்­பூர்) சமூக நல்­லி­ணக்கச் சேவை அமைப்­பின் துணைத்­த­லை­வ­ர், தமி­ழர் பேரவை, ஜாமியா சிங்­கப்­பூர், ஜாமியா அற­நி­று­வன நல­ நி­தி­யத்­தின் உறுப்­பினர் போன்ற பொறுப்­பு­களில் இவர் சமூக சேவை­யாற்றி வரு­கி­றார்.

கடந்த மாதம் 20ஆம் தேதி டன்­லப் ஸ்தி­ரீட்­டி­லுள்ள அப்­துல் கஃபூர் பள்­ளி­வா­ச­லில் நடை­பெற்ற சிறப்புப் பொதுக்­கூட்­டத்­தில் முஸ்லிம் பேரவையின் புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

முன்னைய தலை­வர் முக­மது கெளஸ் கூட்­டத்­திற்­குத் தலைமை தாங்­கி­னார். சட்ட ஆலோ­ச­கர் ஹபீப் தேர்­தல் அதி­கா­ரி­யா­க­வும் இந்­திய முஸ்­லிம் பேர­வை­யின் ஆலோ­ச­கர்­க­ளான எம்.ஒய். முக­மது ரஃபீக், நசீர்­கனி ஆகி­யோர் உதவி தேர்­தல் அதி­கா­ரி­க­ளா­க­வும் செயல்­பட்­ட­னர்.

புதிய தலை­வர் பிலால், உறுப்­பி­னர்­க­ளுக்கு நன்றி தெரி­வித்­துக் கொண்­ட­தோடு புத்­தாக்­கச் சிந்­த­னை­யு­டன் இணக்­கத்­தோடு பேர­வையை வழி­ந­டத்த அனை­வ­ரின் பேரா­த­ரவு தொடர வேண்டுமெனக் கேட்­டுக்­கொண்­டார்.

தலை­மைத்­து­வத்தை ஏற்ற பின்­னர் இம்­மா­தம் 4ஆம் தேதி அடுத்த இரண்டு ஆண்­டுக்­கான நிர்­வா­கக் குழுவைத் திரு பிலால் அறி­வித்­தார்.

அதன்­படி ராஜா முக­மது துணைத் தலை­வ­ரா­க­வும் உத­வித் தலை­வர்­க­ளாக முக­மது ஜாஃபர், ஆதம் ஷாஹுல் ஹமீது, சையது அப்­துல் ரஹீம் ஆகி­யோரும் பொறுப்பு வகிப்­பர்.

பொதுச் செய­லா­ள­ராக முனை­வர் முஹை­தீன் நிசார் அன்­வர், துணைச் செய­லா­ள­ராக ஹுசைன் பாதுஷா, உத­விச் செய­லா­ள­ராக அப்­துல் மாலிக் ஆகி­யோர் பதவி ஏற்­ற­னர். பொரு­ளா­ள­ராக முக­மது அஸீம், உத­விப் பொரு­ளா­ள­ராக நசீர் முக­மது ஆகி­யோ­ரும் உள் கணக்கு தணிக்­கை­யா­ள­ராக யூசுப் ஷாவும் பொறுப்­பேற்­ற­னர்.

செய்தி, படம்:

இந்திய முஸ்லிம் பேரவை