பல்வேறு கலாசாரங்களின் 45 வகை உணவு பற்றிய மின்னூல்

பல்வேறு கலாசாரங்களின் 45 வகை உணவு பற்றிய மின்னூல்

1 mins read
6f56df80-41d7-4325-8e9d-779dc3cf51b5
வெவ்வேறு கலாசார உணவுகளை சுவைத்துப் பார்க்கும் வாய்ப்பு வருகையாளர்களுக்குக் கிடைத்தது.படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

கணினி, கைய­டக்­கச் சாதனம் ஆகியவற்றில் படிக்­கக்­கூ­டிய புதிய சமை­யல் மின்னூல் நேற்று பிடோக் சமூக, வாழ்க்­கை பாணி மையத்­தில் வெளியிடப்பட்டது.

வெவ்­வேறு சமூக மக்­க­ளி­டையே பல கலா­சாரப் புரிந்­து­ணர்வை உணவு மூலம் மேம்­ப­டுத்­தும் நோக்­கத்­தில் இந்த மின்னூல் உருவாக்கப்பட்டுள்ளது.

மக்­கள் கழ­கம், மலாய் செயற்­குழு மன்­றம், மக்­கள் கழக இந்­திய நற்­பணிப் பேரவை, மக்­கள் கழக ஒருங்­கி­ணைப்பு மன்­றம் ஆகி­ய­வற்­றுக்கு இடை­யி­லான கூட்டு முயற்­சி­யில் இது உருவாகியுள்ளது.

இந்தப் புத்தகத்தில் 45 வகை­யான உணவு பற்­றிய விவரங்­கள் உள்­ளன.

இந்த மின்னூலை https://go.gov.sg/feastfromtheheart என்ற இணைய முக­வ­ரி­யிலிருந்து பதி­வி­றக்­கம் செய்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது.