தோட்டக் கலை விழாவில் பரிசு வென்ற இந்தியர்

தோட்டக் கலை விழாவில் பரிசு வென்ற இந்தியர்

3 mins read
d768e45a-41ed-4173-a8da-8a8c543ed921
நீ ஆன் சிட்டிக்கு அருகே மறுசுழற்சிப் பொருள்களைக் கொண்டு திரு குருமூர்த்தி வடிவமைத்த தோட்டத்தைக் கண்டு ரசிக்கும் பார்வையாளர்கள். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

பொன்­மணி உத­ய­கு­மார்

மறு­சு­ழற்­சிப் பொருள்­க­ளைக் கொண்டு பூச்சி வகை­க­ளின் மாதி­ரி­யைத் தனது தோட்­டத்­தில் வடி­வ­மைத்­துள்­ளார் பசுமை வனப்­புத் துறை­யைச் சேர்ந்த பி. குரு­மூர்த்தி.

தேசிய பூங்­காக் கழ­கத்­தின் சிங்­கப்­பூர் தோட்­டக்­கலை விழாவை ஒட்­டிய 'ஷோ கார்­டன்' போட்­டி­யில் இந்­தத் தோட்­டம் வெண்­க­லப் பதக்கத்தை வென்­றுள்­ளது.

இதனை உரு­வாக்க இரண்டு மாத காலம் பிடித்­த­தாக அவர் கூறி­னார். உல­கப் பேர­ழி­வுக்­குப் பின்­னர் இயற்கை வளம் பெருகி, பூச்சி இனம் மனி­தர்­க­ளை­வி­டப் பெரி­தாக வளர்ந்­தது போன்ற கற்­ப­னை­யில் இந்­தத் தோட்­டத்தை இவர் வடி­வ­மைத்­துள்­ளார்.

1970களி­லி­ருந்து 1990 வரை காணப்­பட்ட பேருந்து நிறுத்­தங்­களை நினை­வூட்­டும் வகை­யில் அன்­றைய பேருந்து நிலை­யக் கூரை­யை­யும் தன் தோட்­டத்­தில் சேர்த்­துள்­ளார்.

போட்­டி­யில், ஆஸ்­தி­ரே­லி­யா­வைச் சேர்ந்த கிறிஸ்­டி­யன் ஜென்­கின்­சின் தோட்­ட­மும் சிங்­கப்­பூ­ரைச் சேர்ந்த இலி­யம் எங், ஆன்டி எங் இணைந்து வடி­வ­மைத்த தோட்­ட­மும் தங்­கப் பதக்கத்தைத் தட்­டிச் சென்றன.

'கம்­யூ­னிட்டி கார்­டன் எடி­பல்ஸ்', மலர் வடி­வ­மைப்­பு போன்ற மேலும் சில போட்­டி­க­ளுக்­கும் ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது.

குருமூர்த்தி, ஏற்கெனவே மூன்று முறை தோட்டக்கலை விழாவின்போது தோட்ட வடி­வ­மைப்பைச் செயல்­ப­டுத்­தும் குழு­வில் இருந்­துள்­ளார். முதன்­மு­றை­யாக தோட்ட வடி­வ­மைப்­பா­ள­ர் இல்லாமல் சுய­மாக இப்­போட்­டி­யில் பங்­கேற்­றதாக அவர் கூறினார்.

இத்தகைய விழாக்­கள் தேசிய வளர்ச்­சிக்­கும் தோட்­டக்­க­லைத் துறை­யின் தொடர் வளர்ச்­சிக்­கும் பங்­க­ளிப்­ப­தாக அவர் கருதுகிறார்.

­நேற்று முதல், ஆகஸ்ட் ஒன்­ப­தாம் தேதி வரை அயோன் ஆர்ச்­சர்ட், நீ ஆன் சிவிக் பிளாசா, சிங்­கப்­பூர் பூமலை, மரினா பே சேண்ட்­சில் நடை­பெ­றும் தோட்டக் கலை ­வி­ழா தொடர்பான நிகழ்ச்சிகளைப் பொதுமக்கள் கண்டு ரசிக்கலாம்.

தேசிய அள­வில் பரவி இருக்­கும் தோட்­டக்­கலை ஆர்­வத்தைக் கொண்­டா­ட­வும் அதை வளர்க்­க­வும் 2006ல் தொடங்­கிய சிங்­கப்­பூர் தோட்­டக்­கலை விழாவை நான்கு ஆண்­டு­க­ளுக்குப் பிறகு மீண்டும் நடத்­து­வ­தில் மகிழ்ச்சி கொள்­வ­தாக விழா­வில் சிறப்பு விருந்­தி­ன­ராகக் கலந்துகொண்ட துணைப் பிர­த­மர் ஹெங் சுவீ கியட் தெரி­வித்­தார்.

ஒரே இடத்­தில் நடை­பெ­றா­மல், சிங்­கப்­பூர் பூமலை, ஆர்ச்­சர்ட் சாலை என இரண்டு இடங்களில் இந்த விழா நடை­பெ­று­வது இந்த ஆண்டின் சிறப்பு என்பதைத் துணைப் பிரதமர் ஹெங் சுட்டினார். நிகழ்ச்சியில், தேசிய வளர்ச்சி அமைச்­சர் டெஸ்­மண்ட் லீயும் கலந்து­கொண்­டார் .

ஈராண்டுக்கு ஒரு முறை நடை­பெறும் இவ்­விழா 2020ல் கொவிட்-19 கிருமிப்பரவலை முன்னிட்டு ரத்து செய்­யப்­பட்­டது. அவ்­வே­ளை­யில், சிங்கப்பூரில் பலர் தோட்­டக்­க­லை­யி­லும் பசுமை வெளி­கள் மீதும் ஆர்­வம் செலுத்­தத் தொடங்கியதாக அவர் குறிப்பிட்டார்.

ஒரு வாரத்­தில் ஒன்­றி­லி­ருந்து நான்கு மணி நேரம் வரை தோட்­டக்­க­லை­யில் ஈடு­ப­டு­வோ­ரின் மீள்­தி­றன் மற்­ற­வர்­க­ளை­விட சிறந்­து இ­ருப்­ப­தாக ஆய்­வு­கள் கண்­ட­றிந்­துள்­ளதாகத் துணைப் பிரதமர் பகிர்ந்து கொண்­டார்.

தேசிய பூங்காக் கழ­கத்­தின் 'கம்­யூ­னிட்டி இன் புளூம்', 'ஸ்கை­ரைஸ் இன் கிரீ­னரி' திட்­டங்களின் இயக்­கு­ந­ரான கே. பூங்­கோதை, இவ்­வாண்டு வி­ழா­வில் 40 சமூகக் குழுக்­கள் பங்­கேற்­ற­தாகத் தெரிவித்தார்.

மக்­களை தோட்­டக்­க­லை­யில் ஈடு­பட ஊக்­கு­விப்­பதே 'கம்­யூ­னிட்டி இன் புளூம்' திட்­டத்­தின் நோக்­கம். இத்­திட்­டத்­தில் வயது, பாலின வேறுபாடின்றி அனை­வ­ரும் பங்­கேற்று வரு­வ­தாக பூங்கோதை கூறி­னார். இதன்கீழ் 45,000 தோட்­டக்­கலை ஆர்­வ­லர்­கள் இயங்கி வரு­வ­தா­க­வும் ஆர்­வம் கொள்­ளும் அனை­வ­ருக்­கும் வழி­காட்ட இத்­திட்­டம் உதவுமென்றும் அவர் கூறினார். 2005ல் தொடங்­கிய இத்­திட்­டத்­தின் மூலம் சிங்­கப்­பூ­ரில் 1,800 சமூக தோட்­டங்­கள் உருவாகி­உள்­ளன. இவற்றில் பாதி சமூகத் தோட்­டங்­கள் பள்ளி வளா­கங்­களில் அமைக்­கப்­பட்­டுள்­ளன.