சுப. அருணாசலம் நினைவு பாடல் எழுதும் போட்டி

1 mins read
d6677bf4-0354-44f0-b897-4ef1a145516e
-

சிங்­கப்­பூர்த் தமிழ் எழுத்­தா­ளர் கழ­கம் ஆண்­டு­தோ­றும் ஏற்­பாடு செய்­யும் கவி­ய­ரசு கண்­ண­தா­சன் விழா, வரும் நவம்­பர் மாதம் 19ஆம் தேதி நடை­பெற உள்­ளது.

அதை முன்­னிட்டு, 25 ஆண்டு ­க­ளுக்கு மேலா­கச் சிங்­கப்­பூர்த் தமிழ் எழுத்­தா­ளர் கழ­கத்­தில் அர்ப்­ப­ணிப்பு உணர்­வு­டன் பணி­யாற்­றி­ய­வ­ரும் மறைந்த அதன் முன்­னாள் தலை­வ­ரு­மான சுப. அரு­ணா­ச­லம் (படம்) நினை­வாக, சூழ­லுக்­குப் பாடல் எழு­தும் போட்­டிக்கு ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது.

அவ­ரது குடும்­பத்­தி­ன­ரின் நிதி­யா­த­ர­வு­டன் இந்­தப் போட்டி நடை­பெ­றும்.

போட்­டிக்­கான விதி­கள்:

சுற்­றுச்சூழல் பாது­காப்­பை­யும் அதன் முக்­கி­யத்­து­வத்­தை­யும் வலி­யு­றுத்­திப் பாடல் வரி­களை எழுத வேண்­டும். பாடல் சிங்­கப்­பூர்ச் சூழ­லில் ஒரு­வர் பாடு­வ­தாக அமைந்­தி­ருக்க வேண்­டும்.

பாடலில் ஒரு பல்­லவி, நான்கு சர­ணங்கள் இருக்க வேண்­டும். ஒவ்­வொன்­றும் நான்கு வரி­களில் மொத்­தம் 20 வரி­கள் மட்­டுமே இருக்க வேண்டும்.

ஒரு­வர் அதி­க­பட்­ச­மாக மூன்று பாடல்­கள்­வரை அனுப்­ப­லாம்.

சிங்­கப்­பூர்க் குடி­யு­ரிமை பெற்­ற­வர்­களும் நிரந்­த­ர­வா­சி­களும் மட்­டுமே போட்­டி­யில் பங்­கேற்­க­லாம்.

எழுத்­தா­ளர் கழ­கச் செயற்­குழு உறுப்­பி­னர்­கள் 11 பேரும் போட்­டி­யில் பங்­கேற்க முடி­யாது. மற்ற உறுப்­பி­னர்­கள் பங்­கேற்­க­லாம்.

போட்டி குறித்த நடு­வர்­க­ளின் முடிவே இறு­தி­யா­னது.

http://singaporetamilwriters.com/suba எனும் இணைய முகவரியில் காணப்படும் கூகல் படிவத்தை நிரப்பி, பாடல்களுடன் அனுப்ப வேண்டிய இறுதி நாள் 30.09.2022.

போட்டியில் முதல் பரிசாக $300, இரண்டாம் பரிசு $250, மூன்றாம் பரிசு $150 வழங்கப்படும். முதல் பரிசு பெறும் பாடல் இசை­ய­மைக்­கப்­பட்டு கண்­ண­தா­சன் விழா­வில் ஒலி­ப­ரப்­பப்­படும்.