தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கவிஞனின் காவியக் காதலை இசைக்கும் 'ருபையத் கவிதை'

2 mins read
954df46a-a425-42f9-800f-f7689a3769ab
தத்துவப் படைப்புகளின் தாக்கத்தைத் தனது பாடல்களில் நிறையக் காணலாம் என்கிறார் ஷபிர். படம்: ஷபிர் மியூசிக் ஏஷியா -

மாதங்கி இளங்­கோ­வன்

அழ­கிய கதக் நட­ன­ம­ணி­யின் மீது ஒரு கவி­ஞன் கொண்­டுள்ள காதலை வரு­ணிக்­கிறது உள்­ளூர்க் கலை­ஞர் ஷபி­ரின் புதிய பாட­லான 'ருபை­யத் கவிதை'.

நேற்று முன்­தி­னம் வெளி­யி­டப்­பட்ட இப்­பா­டல், 11ஆம் நூற்­றாண்­டில் வாழ்ந்த பார­சீ­கக் கவி­ஞர் உமர் கய்­யா­மி­னு­டைய கவி­தைத் தொகுப்­பின் சில அம்­சங்­க­ளை­யும் கவி­நயத்­தை­யும் தழுவி உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது.

நவீன சிந்­த­னை­களை சூஃபி ஆன்­மீ­கத்­தோடு கலந்து படைக்­கும் உமர் கய்­யாம், நான்கு வரி­களைக் கொண்ட பத்­தி­களில் 'ருபை­யத்' பாடல்­களை வடிப்­பார். அதே வடி­வில் 'ருபை­யத் கவிதை' பாடலை எழுத முயன்றுள்­ளார் ஷபிர்.

சிறந்த ஒலிப்­ப­திவு, ஒலி வடி­வம் போன்ற அம்­சங்­கள் நிச்­ச­யம் இப்­பா­ட­லில் இருக்க வேண்­டு­மென்ற குறிக்­கோள் ஷபிர் குழு­வி­ன­ருக்கு இருந்­த­தால் இதனை உரு­வாக்க ஈராண்­டு­ எடுத்­துக்­கொண்­ட­னர்.

உமர் கய்­யா­மின் 'ருபை­யத்' கவி­தை­கள், வாழ்க்கை, மர­ணம், காதல், சம­யம் போன்ற வாழ்க்­கை­யின் முக்­கிய அங்­கங்­க­ளைப் பற்­றிய தத்­து­வங்­களை எடுத்­துச் சொல்­பவை. "சூஃபி தத்­து­வங்­களும் இசை­யும் எனது வாழ்க்­கை­யை­யும் பாடல்­க­ளை­யும் ஒரு விதத்­தில் பாதித்­துள்­ளன," என்று சொல்­லும் ஷபிர், "சூஃபி தத்­து­வக் கவி­தை­கள் மட்­டு­மல்­லா­மல் திருக்­கு­றள், குறுந்­தொகை போன்ற தத்­து­வம் நிறைந்த படைப்­பு­க­ளின் தாக்­கத்­தை­யும் என் பாடல்­களில் நிறை­யவே பார்க்­க­லாம்," என்­று கூறுகி­றார்.

காத­லுக்கு வரை­யறை ஏது­மில்லை என்­பதை வெளிக்­கொ­ண­ரும் 'ருபை­யத் கவிதை', இசைக்­கும் எல்­லை­க­ளில்லை என்­ப­தைப் பறை­சாற்­று­கின்­றது. இந்­தி­யப் பாரம்­ப­ரிய இசை­யோடு 'இடி­எம்' எனும் நாட்­டிய இசை­யைக் கலந்து ரசி­கர்­க­ளுக்­குப் புதிய அனு­ப­வத்­தைத் தரு­கிறார் ஷபிர்.

இந்­தப் பாட­லின் துணை இசை­ய­மைப்­பா­ள­ரான புவ­னேஸ்­வ­ரன், 10 ஆண்­டு­க­ளாக ஷபி­ரி­டம் இசை தயா­ரிப்பு குறித்­துக் கற்­று­கொண்­ட­வர். ஷபி­ரோடு இணைந்து சில பாடல்­க­ளுக்கு இசை­யும் அமைத்­துள்­ளார் இவர்.

ஷபி­ரின் 'யூடி­யூப்' பக்­கத்­தில் 'ருபை­யத் கவி­தை­யின்' உயி­ரோ­வி­யக் காணொளி நாளை வெளி­யா­க­வுள்­ளது. இதில் கவி­ஞ­னா­கக் காணப்­படும் ஷபிர், கதக் நட­ன­ம­ணி­யின் நடன அசை­வு­களில் மயங்­கும்­போது உமர் கய்­யா­மின் கவிதை வரி­க­ளைப் புரிந்­து­கொள்­கி­றார். 'டூடல்­ரெப்ஸ்' அமைப்­பும் காணொ­ளித் தொகுப்­பா­ளர் ரஞ்­சித்­தும் இந்தக் காணொளியைத் தயா­ரித்­துள்­ள­னர்.