தேசிய தினத்தன்று திருக்குறள் முழக்கம்

காயத்­திரி காந்தி

தேசிய தினத்­தன்று தமிழ்­மொழி பண்­பாட்­டுக் கழ­கம், சிங்­கப்­பூர் சாத­னைப் புத்­த­கத்­தில் இடம்­பிடிக்கும் இரண்டு சாத­னை­க­ளைப் படைக்­கும் முயற்­சி­யில் ஈடு­பட்­டது.

நாடு முழு­வ­தும் உள்ள 1330 பேருந்து நிறுத்­தங்­கள் ஒவ்­வொன்­றி­லும் ஒரு திருக்­கு­றள் என மொத்­தம் 1330 திருக்­கு­றள்­க­ளை­யும் கழ­கத்­தின் தொண்­டூ­ழி­யர்­கள் வாசித்­தனர். மேலும் தேசிய தின வாழ்த்­துச் செய்­தி­களைத் தமி­ழி­லும் ஆங்­கி­லத்­தி­லும் அவர்­கள் கூறி­னர்.

வள்­ளு­வத்­தைப் போற்றி அதனை அடுத்த தலை­மு­றைக்கு எடுத்­துச் செல்­வதே இம்முயற்­சி­யின் நோக்­கம் என்று கழ­கத்­தின் தலை­வர் மு. ஹரி­கி­ரு­‌ஷ்­ணன் கூறி­னார்.

தேசிய தினத்­தன்று காலை ஏழு மணிக்கு பீட்டி சாலை­யி­லுள்ள சிண்டா வளா­கத்­தில், இந்த முயற்­சி­யைத் தொடங்­கி­வைத்­தார் சிண்­டா­வின் தலைமை நிர்­வாக அதி­காரி அன்­ப­ரசு ராஜேந்­தி­ரன்.

கிட்­டத்­தட்ட ஆறு மணி நேரம் வரை தொடர்ந்து நடந்த நிகழ்ச்­சி­யில், வெயி­லை­யும் பொருட்­ப­டுத்­தா­மல் தொண்­டூ­ழி­யர்­கள் அவ­ர­வ­ருக்கு ஒதுக்­கப்­பட்ட பேருந்து நிறுத்­தங்­க­ளுக்­குச் சென்று சாதனை நட­வ­டிக்­கை­களில் பங்­கெ­டுத்­த­னர்.

“இளை­யர்­கள் தமி­ழில் பேச­வும் குடும்­பத்­தோடு சேர்ந்து செயல்­ப­ட­வும் இந்­நி­கழ்ச்சி ஒரு தூண்­டு­த­லாக அமைந்­தது.

“பொது இடத்­தில் கூச்­ச­மின்றி திருக்­கு­றளை வாசித்தது, தேசிய தின வாழ்த்­து­க­ளைக் கூறி­யது ஆகியவற்றின் மூல­மா­க இளை­யர்­கள் வீட்­டி­லும் தமி­ழில் பேசவேண்­டும் என்ற உணர்வை வளர்த்­துக்­கொண்­ட­னர்,” என்று திரு ஹரி­கி­ரு­‌ஷ்­ணன் கூறினார். மூன்று வயதுக் குழந்தை முதல் 83 வய­து முதியவர் வரை இந்த நிகழ்ச்சியில் கலந்து­கொண்­ட­னர்.

நண்­ப­கல் 12 மணிக்கு திரு ஹரி­கி­ருஷ்­ணன், திரு அன்­ப­ரசு இரு­வ­ரின் வாழ்த்­துச் செய்­தி­களுடன் கடந்த 57 ஆண்டு கால சிங்­கப்­பூ­ரின் முக்­கிய நிகழ்­வு­களைத் தொகுப்­பாக வாசிக்­கும் நேர­லையை, நிகழ்ச்சி ஒருங்­கி­ணைப்­பா­ளர் திரு­மதி லீலா­ராணி வழி நடத்­தி­னார். நிகழ்ச்­சி­யில் கலந்­து­கொண்ட சிங்­கப்­பூர் சாத­னை­கள் புத்­தக நிறு­வ­னத் தலை­வர் ஓங் எங் ஹுவாட், பங்­கேற்­றோ­ரின் தமிழ் உணர்வு தன்னை மிகவும் கவர்ந்­த­தா­கக் கூறி­னார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!