புத்தாக்க இந்தியக் கலையகம், நாட்டின் 57வது தேசிய தினத்தை ஒட்டி இன்று பிற்பகல் மூன்று மணிக்கு, சிங்கப்பூர் முதல் கோலிவுட் வரை எனும் சிறப்பு மெய்நிகர் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது.
சிங்கப்பூரைச் சேர்ந்த திரைப்படக் கலைஞர் ஜேம்ஸ் துரைராஜ், இணைய நேர்காணலில் தனது திரைத்துறை அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளவிருக்கிறார்.
பல முன்னணிக் கலைஞர்களோடு பணியாற்றி வரும் ஜேம்ஸ் துரைராஜ், இதுவரை கடந்து வந்த கலைப்பாதை குறித்து சுவைபட எடுத்துரைப்பார்.
தமிழ்த் திரைப்படங்களில் தனது ஈடுபாடு, இன்றைய இளைய சமூகம் பயன்பெறும் சமூக ஊடகப் படைப்புகள், சிங்கப்பூரில் ஊடக வளர்ச்சியின் முன்னேற்றம் எனப் பல்வேறு அம்சங்கள் தொடர்பில் அவர் தனது கருத்துகளைப் பகிர்ந்துகொள்வார்.
உள்ளூர்க் கலைஞர் சி. குணசேகரன் மெய்நிகர் வழி நடத்தும் இந்நிகழ்ச்சியில், கலந்துரையாடல், இணைய கேள்வி பதில் அங்கம், போட்டிகள், பரிசுகள் எனப் பல அம்சங்கள் காத்திருக்கின்றன.
தேசியக் கலை மன்றத்தின் கலை வளர்ப்புத் திட்டத்தின்கீழ், ஸ்டம்ஃபர்ட் கலை நிலையத்தில் இருந்து நேரடியாக 'யூடியூபில்' ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சியை https://youtu.be/llkXsBwhhN8 என்ற முகவரியில் காணலாம்.