தெற்காசியா மீதான அதீத ஆர்வத்திற்குக் கிடைத்த பரிசு

தெற்காசியா மீதான அதீத ஆர்வத்திற்குக் கிடைத்த பரிசு

2 mins read
4c790fd7-5202-4468-9f8c-7d3a973f60f5
-

சிறு­வ­ய­தி­லி­ருந்து கர்­நா­டக இசை பயின்­றும் நாட்­டுப்­புற கதை­கள் கேட்­டும் வளர்ந்த 22 வயது அர்ச்­சனா தின­கர் பாலா­விற்கு (படம்) வளர்ந்து வரும் நாடு­க­ளின் பொரு­ளா­தா­ரத்­தில், குறிப்­பாக தெற்­கா­சி­யப் பகுதி மீது அதீத ஆர்­வம்.

அதற்­கேற்ப அவர் தன் படிப்­பி­லும் இணைப்­பாட நட­வ­டிக்­கை­களி­லும் தெற்­கா­சிய நாடு­க­ளின் பொரு­ளி­யல் மீது தொடர்ந்து கூடு­தல் கவ­னம் செலுத்­தி­யி­ருக்­கி­றார்.

இதைக் கண்­ட­றிந்த சிங்­கப்­பூர் தேசி­யப் பல்­க­லைக்­க­ழ­கத்­தின் பல்­க­லைக்­க­ழ­கக் கல்­வி­மான் திட்­டம், முதல்­மு­றை­யாக வழங்­கப்­படும் சையத் அஹ்­மத் கான் ஏ.எம்.யூ. நினை­வுப் பரிசை அர்ச்­ச­னா­வுக்கு வழங்­கி­யி­ருக்­கிறது.

தெற்­கா­சி­யக் கற்­ற­லுக்­கும் கலா­சா­ரத்­துக்­கும் பங்­க­ளிக்­கும், இரண்டு மாண­வர்­க­ளுக்கு இவ்­வாண்­டு முதல் இந்­தப் பரிசு வழங்­கப்­படும். இந்­தி­யா­வின் அலி­கார் முஸ்­லிம் பல்­க­லைக்­க­ழ­கத்­தின் முன்­னாள் மாண­வர்­கள் சங்­கத்­தின் ஆத­ர­வில் இது வழங்­கப்­பட்­டுள்ளது.

இவ்­வாண்டு பல்­க­லைக்­க­ழ­கக் கல்­வி­மான் திட்­டத்­தின் சிறந்த மாண­வ­ருக்­கான விரு­தை­யும் ஜோவானா வோங் பதக்­கத்­தை­யும் அர்ச்­சனா வென்­றுள்­ளார்.

இவ்­வி­ரு­து­க­ளை­யும் பரி­சு­க­ளை­யும் பெற வேண்­டும் என்ற முனைப்­போடு தான் எதை­யும் செய்­ய­வில்லை என்ற அர்ச்­சனா இவற்­றைப் பெற்­ற­தில் பெரு­ம­கிழ்ச்சி கொண்­டுள்­ளார்.

பல்­க­லைக்­க­ழ­கத்­தில் பயின்­ற­போது 'கொன்­ஜங்ட் கன்­சல்­டிங்' நிறு­வ­னத்­து­டன் இணைந்து பல சமூ­க­நல அமைப்­பு­கள் மூலம் தொண்­டூ­ழி­யம் புரிந்­துள்­ளார் அர்ச்­சனா. குறிப்­பாக வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளுக்­கான திட்­டங்­களில் தொடர்ந்து ஈடு­பட்டு வந்­துள்­ளார். கிரு­மிப்­ப­ர­வல் சூழ­லின்­போது அவர்­கள் பெரும் அவ­திக்கு ஆளா­னதை எண்ணி வருத்­தம் அடைந்­த­தா­க­வும் சிங்­கப்­பூ­ரின் மேம்­பாட்­டுக்கு வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளின் பங்கு மிக அவ­சி­யம் என்று நம்­பு­வ­தா­க­வும் இவர் கூறி­னார். ஆங்­கி­லம், தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழி­க­ளைப் பேசக் கூடிய அர்ச்சனா, தனது தொண்­டூ­ழிய நட­வ­டிக்­கை­கள் மூலம் கட­மை­ உணர்வு, உறுதி, நேரந்­த­வ­றாமை, மீள்­தி­றன் போன்­ற­வற்­றின் அவ­சி­யத்தை அறிந்து கொண்­ட­தா­கக் கூறி­னார்.

இணைப்­பாட நட­வ­டிக்­கை­க­ளால் பட்­டப் படிப்­பில் கவ­னம் சித­றி­விடக்­கூ­டாது என்ற தீர்­மா­னத்­து­டன் இருந்த அர்ச்­ச­னா­விற்கு நண்­பர்­க­ளின் ஆத­ரவு மிக­வும் உத­வி­யது.

சிங்­கப்­பூர் தேசி­யப் பல்­க­லைக்­க­ழ­கத்­தில் ஆராய்ச்சி உத­வி­யா­ள­ரா­கத் தற்­போது பணி­பு­ரியும் இவர் முனை­வர் பட்­டம் பெறு­வதை இலக்­கா­கக் கொண்­டுள்­ளார்.

தொடர்ந்து தெற்­கா­சிய நாடு­க­ளின் பொரு­ளா­தா­ரத் துறை­யில் கவ­னம் செலுத்­த­வும் தன்­னால் முடிந்த பங்­க­ளிப்­பைத் தெற்­கா­சியச் சமூ­கங்­க­ளுக்கு அளிக்­க­வும் அர்ச்சனா விரும்பு­கிறார்.

செய்தி: பொன்மணி உதயகுமார்