தேசியக் கலை மன்றத்தின் கலை உபகாரச் சம்பளம் பெற்ற இந்தியர்

தேசியக் கலை மன்றத்தின் கலை உபகாரச் சம்பளம் பெற்ற இந்தியர்

2 mins read
20265938-f4a3-405a-a10c-32d9ae5eec9a
-

திவ்­யா­தாக்­‌ஷாய்னி

முழு­மை­யான மனி­தர்­களை உரு­வாக்­கு­வ­தற்­குக் கலை அவ­சி­யம் என்­கி­றார் தேசி­யக் கலை மன்­றத்­தின் கலை உப­கா­ரச் சம்­ப­ளம் பெற்ற ஐஸ்­வர்யா ஷண்­மு­க­நா­தன் (படம்).

கலை­களில் தீவிர நாட்­டம் கொண்ட இவர், சிங்­கப்­பூர் நாட­கக் கல்­வி­யா­ளர் சங்­கத்­தின் தலை­வர். இம்­மா­தம் 16ஆம் தேதி, வெவ்­வேறு கலைத்­து­றை­க­ளைச் சேர்ந்த எட்டு தலை­சி­றந்த கல்­வி­மான்­க­ளுக்கு, மன்­றம் இந்த உப­கா­ரச் சம்­ப­ளத்தை வழங்­கி­யது.

நிகழ்ச்­சி­யில் கலந்­து­கொண்ட கலா­சார, சமூக, இளை­யர் துறை அமைச்­சர் எட்­வின் டோங், சமூ­கத்­தின் பங்­க­ளிப்­போடு அர­சாங்­கம், கலைக்­கும் மர­பு­டை­மைக்­கும் தொடர்ந்து ஆத­ரவு அளிக்­கும் என்­றார்.

தேசி­யக் கல்­விக் கழ­கத்­தில், கல்­வி­யில் முனை­வர் பட்­டப் படிப்­பில் பயி­லும் ஐஸ்­வர்யா, "15ஆண்டு­களுக்கு முன் நான் நாடக ஆசி­ரி­ய­ரா­கப் பணி­பு­ரிந்­த­போது, அது ஒரு தொழி­லா­கக்­கூட அங்­கீ­க­ரிக்­கப்­ப­ட­வில்லை. நாட­கம் வெறும் வள­மூட்­டும் நட­வ­டிக்­கை­யா­க­வும் பொழு­து­போக்கு அம்­ச­மா­க­வும் கரு­தப்­பட்­டதே தவிர கல்­வி­யின் ஓர் அம்­ச­மாகக் கரு­தப்­ப­ட­வில்லை," என்று கூறி­னார்.

இந்த உப­கா­ரச் சம்­ப­ளம், நாடக ஆசி­ரி­யர் துறையை அங்­கீ­க­ரிக்­கும் விதத்­தில் உள்­ள­தா­க­வும் தன்னை ஊக்­கு­விப்­ப­தா­க­வும் ஐஸ்­வர்யா கூறி­னார்.

நாடக ஆசி­ரி­ய­ரும் பயிற்­று­விப்­பா­ள­ரு­மான இவர் 10 ஆண்­டு­க­ளுக்கு மேலாக சமூ­கம், பள்ளி ஆகி­யவை சார்ந்த கலைத்­திட்­டங்­களில் அதிக ஆர்­வத்­து­டன் ஈடு­பட்­டு­வ­ரு­கி­றார். தனது வளர்ச்­சிக்கு கலைத்­து­றை­யில் பெற்ற தொடக்க அனு­ப­வ­மும் பங்­கேற்­பும் முக்­கி­யக் கார­ணங்­கள் என்­றார் இவர்.

தேசிய பாடத்­திட்­டத்தில் கலை­க­ளுக்கு ஒரு குறிப்­பிடத் தகுந்த இடம் கிடைக்க வேண்­டும் என்­பது ஐஸ்­வர்­யா­வின் விருப்­பம். இன்­னும் பல கலை­ஞர்­களை என்­றில்­லா­மல் முழு­மை­யான மனி­தர்­களை உரு­வாக்க இது அவ­சி­யம் என்றார். கலைத்துறைப் படிப்பில் ஆர்வம் உள்ள இளையர்கள் துணிந்து இந்தப் பாதையில் செல்ல அவர் ஊக்குவித்தார்.