நாட்டியம் மாலிக்கா நடனப் பள்ளியின் 'ஆத்ம அர்ப்பணம்', 'மோகினி மாயவா'

2 mins read
adb6e3dd-2d2c-4981-b518-d7d11b97dd81
மோகினி மாயவா நடன நிகழ்ச்சியில் மோகினியாக மாலிக்கா பணிக்கர் (இடது படம்), ஆத்ம அர்ப்பணம் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவரது மாணவிகள். படம்: நாட்டியம் மாலிக்கா -
multi-img1 of 2

'சிஃபாஸ்' எனப்­படும் சிங்­கப்­பூர் இந்­திய நுண்­க­லைக் கழ­கத்­தி­லும், மகாத்மா காந்தி நினை­வ­ரங்­கத்­தி­லும், இம்­மா­தம் 4ஆம் தேதி முதல் 7ஆம் தேதி வரை நடந்­தே­றி­யது ஆத்ம அர்ப்­ப­ணம் எனும் பர­த­நாட்டிய நிகழ்ச்சி.

இதில் நடன ஆசி­ரி­யர் மாலிக்கா பணிக்­க­ரின் மூத்த மாண­வி­கள் ஆதிரா உன்­னித்­தன், நித்தியலக்‌ஷ்மி கும­ரே­சன், தனுஷ்ரி பால­சுப்பி­ர­ம­ணி­யம், உமா கல்­யாணி ஆகி­யோர் பங்­கேற்­ற­னர்.

மாலிக்கா பணிக்­கர் நிறு­விய நாட்­டி­யம் மாலிக்கா எனும் நட­னப் பள்­ளி­யின் 10ஆம் ஆண்டு நிறைவு விழா­வின் ஓர் அங்­க­மாக இந்­நிகழ்ச்சி படைக்­கப்­பட்­டது. இந்த ­வி­ழா­வில் கலைத்­து­றைக்­குப் பெரி­தும் பங்­க­ளித்த ஆசி­ரி­யர்­களும் முன்­னாள் மாண­வர்­களும் கௌர­விக்­கப்­பட்­ட­னர்.

மண்­ணு­ல­கில் வாழும் ஆத்­மாக்­க­ளோடு விண்­ணு­ல­கில் உறை­யும் ஆத்­மாக்­க­ளுக்­கும் மாதா, பிதா, குரு, தெய்­வம் என ஒரு­வ­ரின் வாழ்க்­கை­யில் போற்­றப்­படும் உயர்ந்­தோ­ருக்­கும் சமர்ப்­ப­ண­மாக அமைந்­தது ஆத்ம அர்ப்­ப­ணம் நாட்­டிய நிகழ்ச்சி.

பர­தக் கலை காலத்­துக்­கேற்ப புது மெரு­கூட்­டப்­பட்­டா­லும் 3,000 ஆண்­டு­கள் பழமை வாய்ந்த இதன் சிறப்பை அடுத்த தலை­மு­றை­யி­ன­ருக்­குக் கொண்­டு­சேர்க்க நடன ஆசி­ரி­யர் மாலிக்­கா­வும் அவரின் மாணவர்களும் முனைந்­துள்­ள­னர்.

ஐந்து வய­தில் பர­தக்­க­லை­யைப் பயி­லத் தொடங்கி பின்­னர் கேர­ளா­வின் மோகி­னி­யாட்­டத்­தை­யும் பயின்­ற­வர் மாலிக்கா. இவர், மோகி­னி­யாட்­டத்தை மைய­மா­கக் கொண்டு 'மோகி­னி­யின் அற்­பு­த­மான காவி­யங்­கள்- மாயக்­கா­ரி­யின் பய­ணம், மோகினி மாயவா' எனும் நிகழ்ச்­சியை ஆகஸ்ட் 18 முதல் 20ஆம் தேதி வரை மகாத்மா காந்தி நினைவு மண்­ட­பத்­தில் படைத்­தார்.

முனை­வர் ரச்­சிதா ரவி, முனை­வர் இந்­திரா ராணி லவன் ஈஸ்­வ­ரன் இரு­வ­ரும் நாட்­டிய அமைப்­பில் உத­வி­ய­தா­கக் கூறப்­பட்­டது.

பரத நாட்­டி­யம், மோகி­னி­யாட்­டம் இரண்­டை­யும் கலந்த புத்­தாக்­க­மிக்க இப்­ப­டைப்­பில் நாட்­டுப்­புறக் கதை­கள் துடிப்­பு­மிக்க ராகங்­களில் நட­னம் மூலம் வரு­ணிக்­கப்­பட்­டன.

செய்தி: பொன்மணி உதயகுமார்