தொடர்ந்து தொண்டூழியம் செய்வோர் கௌரவிப்பு

தொடர்ந்து தொண்டூழியம் செய்வோர் கௌரவிப்பு

1 mins read
13d0a577-2169-4b67-8dc7-ffdf7cd6c341
தொண்டூழியர்களுடன் திரு முரளி பிள்ளை (இடமிருந்து நான்காவது). படம்: இந்து அறக்கட்டளை வாரியம் -

பாதி நூற்­றாண்­டுக்­கும் மேலாக ஸ்ரீ மாரி­யம்­மன் கோயிலில் வேப்­பி­லைக் குழு­வின் தலை­வ­ரா­கப் பொறுப்­பேற்­றுள்ள ஓய்­வுப்­பெற்ற, 73 வய­தான திரு பன்­னிர்­செல்­வம் ஆத்­ம­நா­தன், இந்து அறக்­கட்­டளை வாரி­யம் ஏற்­பாடு செய்த விருது நிகழ்ச்­சி­யில் உன்னத விருது பெற்ற 71 தொண்­டூ­ழி­யர்­களில் ஒருவர்.

உன்னத விருது பெற்ற தொண்­டூ­ழி­யர்­களில் மற்­றொ­ரு­வர் திரு­வாட்டி நாக­லிங்­கம் சர­ஸ்வதி, 70. சிங்­கப்­பூர் பொது மருத்­து­வ­ம­னை­யில் மூத்த தாதி­யாகப் பணி­பு­ரி­யும் திரு­வாட்டி சரஸ்­வதி, கிட்­டத்­தட்ட 20 ஆண்­டு­க­ளாக இந்து அறக்­கட்­டளை வாரி­யத்­தின் தொண்­டூ­ழி­ய­ராக இருக்­கி­றார்.

இவர்­க­ளைப் போல் 2,000க்கும் மேற்­பட்ட தொண்­டூ­ழி­யர்­க­ளைக் கொண்ட இந்து அறக்­கட்­டளை வாரி­யம் அவர்­க­ளின் பங்­க­ளிப்பை அங்­கீ­க­ரிக்க 24 ஆண்­டு­க­ளாக விருது நிகழ்ச்­சியை நடத்தி வரு­கிறது. ஆர்க்­கிட் கண்ட்ரி கிளப்­பில் நேற்று நடை­பெற்ற நிகழ்ச்­சி­யில் புக்­கிட் பாத்­தோக் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் முரளி பிள்ளை சிறப்பு விருந்­தி­ன­ரா­கக் கலந்­துக்­கொண்­டார்.

செய்தி: அனுஷா செல்­வ­மணி