லிட்டில் இந்தியாவின் மறுபக்கம்

பல­ருக்கு அதி­கம் தெரி­யாத லிட்­டில் இந்­தியா வட்­டா­ரத்­தின் சிறப்பம்சங்களை எடுத்­துச் சொல்­வது 'ரீ-ரூட்' எனும் மாறுபட்ட விழா­வின் இலக்கு.

புதி­தா­கத் தொடங்­கப்­பட்­டுள்ள இந்த விழா­வில் உண­வுச் சுற்­று­லாக்­கள், பயி­ல­ரங்­கு­கள் உள்­ளிட்­டவை இடம்­பெ­று­கின்­றன. அவை லிட்டில் இந்தியாவின் பல்­வேறு பகுதிகளில் அமைக்­கப்­பட்­டுள்­ளன.

"பிர­ப­ல­மா­ன­வற்­றை­யும் தாண்டி லிட்­டில் இந்­தி­யா­வில் மேலும் பல அம்சங்கள் இடம்­பெ­றுள்­ளன. சுற்றுப்­ப­ய­ணி­கள்­கூட பொது­வாக தேக்கா சந்­தை­யில் தொடங்கி ஆல­யம் ஒன்­றுக்கு நடந்து சென்ற பிறகு படங்­கள் எடுக்க டான் டெங் நியா வில்­லா­விற்­குச் செல்­வர்; அதற்­குப் பிறகு கிளம்­பி­வி­டு­வர்," என்­றார் திரு மெர்­வின் டான். 'டிசைன் ஸ்டு­டியோ பிளஸ்' நிறு­வனத்­தின் உரி­மை­யா­ளர்­க­ளான திரு டானும் திரு­வாட்டி ஷெரில் சிம் என்­ப­வ­ரும்­தான் இந்த விழா உரு­வா­கக் கார­ண­மா­ன­வர்­கள்.

முஸ்­தஃபா கடைத்­தொ­கு­திக்கு அரு­கில் இருக்­கும் லெம்பு ஸ்கு­வே­ரில் உள்ள 10 மீட்­டர் உய­ரம் கொண்ட ­பார்­வை­யா­ளர் கோபு­ரம், ராட்­சத விளை­யாட்­டுப் பொருள் பந்­து­களைப் போல் இருக்­கும் யோகா­ச­னப் பந்­து­களை வழங்­கும் முன்று மீட்­டர் உய­ர 'வெண்­டிங் மிஷின்' பொருள் விநி­யோக இயந்­தி­ரம் போன்­றவை விழா­வில் இடம்­பெ­றும் ஆறு அங்­கங்­களில் சில.

சிங்­கப்­பூர் பய­ணத்­து­றைக் கழ­கம் அளித்த தக­வல்­க­ளைக் கொண்டு விழா­வின் அங்­கங்­களும் உண­வ­கங்­களும் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­ட­தா­கத் திரு டான் தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!