குரு ஜெயந்தி கொண்டாட்டம், சிறப்பு அன்னதானம்

குரு ஜெயந்தி கொண்டாட்டம், சிறப்பு அன்னதானம்

1 mins read
9fb313af-a81e-4343-982c-bd01cd028308
கொண்டாட்டத்தில் நடைபெற்ற கலைநிகழ்ச்சியில் இடம்பெற்ற சிறுவர் படைப்புகள். படம்: ஸ்ரீ நாராயண மிஷன் -

ஸ்ரீ நாரா­யண குரு­வின் 168வது பிறந்­த­நாளை முன்­னிட்டு, இம்­மா­தம் 11ஆம் தேதி பிற்­ப­கல் நேவல் பேஸ் உயர்­நிலைப் பள்­ளி­யில் "குரு ஜெயந்தி" கொண்­டாட்­டம் நடை­பெற்­றது. கொள்­ளை­நோய்ப் பர­வ­லால் மெய்­நி­க­ரில் நடந்த இந்தக் கொண்­டாட்­டம் ஈராண்­டு­க­ளுக்­குப் பிறகு நேரடி நிகழ்ச்­சி­யாக நடை­பெற்­றது.

சமூகப் பங்­கா­ளி­கள், ஸ்ரீ நாரா­யண மிஷன் உறுப்­பி­னர்­கள், தொண்­டூ­ழி­யர்­கள், பொது­மக்­கள் என 300 பேர் நிகழ்ச்­சி­யில் கலந்து­கொண்­ட­னர்.

கொண்­டாட்­டத்­தில் சிறப்பு விருந்­தி­ன­ரா­கக் கலந்­து­கொண்டார் மனி­த­வள, வர்த்தக, தொழில் இரண்டாம் அமைச்­சர் டாக்­டர் டான் சீ லெங்.

"ஸ்ரீ நாரா­யண மிஷன் போன்ற சமூக நிறு­வ­னங்­கள் சமூக பங்­கா­ளித்­து­வத்­து­டன் இது­போன்ற முயற்­சி­களில் ஈடு­பட வேண்­டும்," என்­று டாக்டர் டான் கூறினார்.

வருகை புரிந்­தோ­ருக்கு ஸ்ரீ நாரா­யண மிஷன் உறுப்­பி­னர்­க­ளால் சமைக்­கப்­பட்ட இல­வச மதிய உணவு வழங்­கப்­பட்­டது.

19 வகை ­யான பாரம்­ப­ரிய சைவ உணவு வகைகள் இந்­திய பாரம்பரியப்படி வாழை இலை­யில் பரி­மா­றப்­பட்டன .

அனுஷா செல்வமணி